இந்தியா வரும் புதிய கியா பிகான்ட்டோ கார் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய கியா பிகான்ட்டோ கார் பற்றிய முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

இந்தியாவில் கால் பதிப்பதற்கான ஆயத்தப் பணிகளில் தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் படு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தற்போது தனது வர்த்தகத்திற்கு உறுதுணையாக இருக்கப்போகும் டீலர்களை கவர்ந்திழுப்பதற்கான சிறப்பு நிகழ்ச்சிகளை நாடுமுழுவதும் நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சிகளில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கும் கார் மாடல்களையும் டீலராக விரும்புபவர்களுக்காக பார்வைக்கு வைத்துள்ளது.

இந்தியா வரும் புதிய கியா பிகான்ட்டோ கார் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

இந்த கார்களில் கியா பிகான்ட்டோ என்ற ஹேட்ச்பேக் கார் மாடலும் இடம்பெற்றிருக்கிறது. ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 காருக்கு இணையான அம்சஙகளை பெற்றிருக்கும் இந்த கார் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், கியா நிறுவனத்தின் விலை குறைவான மாடலாக இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். இந்த நிலையில், இந்த காரின் முக்கிய விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியா வரும் புதிய கியா பிகான்ட்டோ கார் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

கடந்த 2004ம் ஆண்டு கியா பிகான்ட்டோ கார் அறிமுகம் செய்யப்பட்டது. கால மாற்றத்துக்கும், வாடிக்கையாளர் எண்ண ஓட்டத்திற்கும் தக்கவாறு அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் இந்த காரின் மூன்றாவது தலைமுறை மாடல் வெளியிடப்பட்டது. இந்தியாவிற்கும் இந்த மூன்றாவது தலைமுறை மாடல்தான் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா வரும் புதிய கியா பிகான்ட்டோ கார் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எச் பிளாட்ஃபார்மில்தான் இந்த கார் உருவாக்கப்பட்டிருக்கிறது. இலகு வகை உதிரிபாகங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளதால், முந்தைய தலைமுறை மாடலைவிட 23 கிலோ எடை குறைவானதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியா வரும் புதிய கியா பிகான்ட்டோ கார் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

புதிய கியா பிகான்ட்டோ கார் 3,595மிமீ நீளமும், 1,595மிமீ அகலமும், 1,485மிமீ உயரமும் கொண்டது. இந்த காரின் வீல் பேஸ் 2,400மிமீ என்பதுடன், வெளிநாடுகளில் 141மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் கொண்டதாக விற்பனை செய்யப்படுகிறது. இந்தியா வரும்போது கிரவுண்ட் கிளிரயன்ஸில் மாற்றம் செய்யப்படும் வாய்ப்புள்ளது. இந்த காரில் 255 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் உள்ளது.

இந்தியா வரும் புதிய கியா பிகான்ட்டோ கார் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

வெளிநாடுகளில் இந்த காரானது, 1.0 லிட்டர் எம்பிஐ பெட்ரோல் எஞ்சின், 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் எஞ்சின் மற்றும் டர்போசார்ஜர் பொருத்தப்பட்ட சக்திவாய்ந்த டி-ஜிடிஐ 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல்களில் கிடைக்கிறது. ஆனால், இந்தியா வரும்போது, ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 காரில் பயன்படுத்தப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் எதிர்பார்க்கலாம்.

Recommended Video

Tata Nexon Review: Specs
இந்தியா வரும் புதிய கியா பிகான்ட்டோ கார் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

இந்த காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பகல்நேர ரன்னிங் விளக்குகள், 7 இன்ச் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம், சன் ரூஃப், 16 இன்ச் அலாய் வீல்கள் ஆகிய சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது. க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், லெதர் இருக்கைகள் போன்றவையும் இந்த காரின் கூடுதல் சிறப்புகளாக இருக்கும்.

இந்தியா வரும் புதிய கியா பிகான்ட்டோ கார் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

கியா பிகான்ட்டோ காரில் அதிக வலு கொண்ட ஸ்டீல் பயன்படுத்தப்பட்டிருப்பதால், சிறப்பான கட்டுமானத்தை பெற்றிருக்கிறது. இதன் ரகத்தில் முதல்முறையாக அவசர கால தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட கார் மாடலாகவும் வந்துள்ளது.

இந்தியா வரும் புதிய கியா பிகான்ட்டோ கார் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 காருக்கு இணையான சிறப்பம்சங்கள் மற்றும் விலையில் இந்த புதிய கியா பிகான்ட்டோ காரும் நிலைநிறுத்தப்படும் வாய்ப்புள்ளது. வரும் 2019ம் ஆண்டில் இந்த புதிய கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, August 18, 2017, 15:06 [IST]
English summary
Important Details Of India Bount Kia Picanto Car.
மேலும்... #கியா
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+