பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் இருந்து இந்தியா வரும் புதிய கார் மாடல்கள்!

Written By:

ஜெர்மனியிலுள்ள பிராங்க்ஃபர்ட் நகரில் நடந்து வரும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் ஏராளமான புதிய கார் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் சில புத்தம் புதிய கார் மாடல்கள் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றன. சில கார்கள் இந்தியா வருவதற்கு அதிக வாய்ப்புள்ள மாடல்களாகவும் கருதப்படுகின்றன. அவற்றில் முக்கிய மாடல்களை இங்கே தொகுத்து வழங்கி இருக்கிறோம்.

2018 ரெனோ டஸ்ட்டர்

2018 ரெனோ டஸ்ட்டர்

இந்திய கார் உரிமையாளர் சமூகத்தில் பெரும் ஈர்ப்பை பெற்ற மாடல் ரெனோ டஸ்ட்டர். இந்த நிலையில், வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட புதிய டஸ்ட்டர் எஸ்யூவி பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் இருந்து இந்தியா வரும் கார்கள்!

புதிய ரெனோ டஸ்ட்டரின் முக்கிய அம்சமே, அதன் விண்ட் ஸ்கிரீன் கண்ணாடி அமைப்பு மாற்றம் செய்யப்பட்டு உட்புறத்தில் இடவசதி சிறப்பாக மேம்படுத்தப்பட்டிருப்பதுதான். மேலும், முகப்பு க்ரில் அமைப்பு, டெயில் லைட்டுகள், பம்பர்கள் டிசைன் மாற்றப்பட்டுள்ளன.

பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் இருந்து இந்தியா வரும் கார்கள்!

ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், 4 வீல் டிரைவ் சிஸ்டம் மானிட்டர் போன்றவை முக்கிய அம்சங்களாக இருக்கும். தற்போது பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் எஞ்சின்கள்தான் தொடர்ந்து பயன்படுத்தப்படும். அடுத்த ஆண்டு முற்பகுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் இருந்து இந்தியா வரும் கார்கள்!

பல்வேறு மாற்றங்களுடன் மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் காரின் தகவல்கள், படங்களை பல்வேறு தருணங்களில் உங்களுக்கு வழங்கி இருக்கிறோம். அடுத்த ஆண்டு இந்த புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், இந்த புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரின் சக்திவாய்ந்த மாடலை மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்துள்ளது.

பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் இருந்து இந்தியா வரும் கார்கள்!

சுஸுகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் என்ற இந்த புதிய மாடலில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு பதிலாக, புதிய 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 138 பிஎச்பி பவரையும், 230 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் வெறும் 970 கிலோ மட்டுமே எடை கொண்டது. பழைய ஸ்விஃப்ட் ஸ்போர்ட் மாடலைவிட 80 கிலோ எடை குறைவானது.

பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் இருந்து இந்தியா வரும் கார்கள்!

புதிய க்ரில் அமைப்பு, பம்பர், 17 அங்குல அலாய் சக்கரங்கள் என சிறப்பம்சங்களிலும் மிரட்டலாக இருக்கிறது. அடுத்த ஆண்டு பிற்பகுதியில் இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சக்திவாய்ந்த ஹேட்ச்பேக் ரகத்தில் ஃபியட் அபார்த் புன்ட்டோ, ஃபோக்ஸ்வேகன் ஜிடிஐ, மாருதி பலேனோ ஆர்எஸ் போன்ற மாடல்கள் இருக்கின்றன. இந்த நிலையில், ஸ்விஃப்ட் கார் பிராண்டுக்கு இந்தியர்கள் மத்தியில் உள்ள நன்மதிப்பை வைத்து இந்த காரை வர்த்தகத்தில் வெற்றி பெற வைக்க மாருதி பரிசீலிக்கும்.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

காம்பேக்ட் எஸ்யூவி ரக மார்க்கெட்டில் மிகச் சிறந்த மாடல் என்ற பெருமையை ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பெற்றிருக்கிறது. இந்த நிலையில், பல்வேறு மாற்றங்களுடன் மேம்படுத்தப்பட்ட புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் இருந்து இந்தியா வரும் கார்கள்!

வெளிப்புற டிசைனிலும், உட்புற டிசைனிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. இப்போது சக்திவாய்ந்த டீசல் எஞ்சினுடன் வர இருக்கிறது. தற்போது முகப்பில் பிரம்மாண்டமான ஒற்றை க்ரில் அமைப்பை பெற்றிருக்கிறது. பின்புற கதவில் ஸ்பேர் வீல் இல்லை. ஆனால், இந்திய மாடலில் ஸ்பேர் வீல் கொடுக்கப்படுமா என்ற ஐயம் நீடிக்கிறது. பின்புறத்தில் பம்பர் அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் இருந்து இந்தியா வரும் கார்கள்!

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் ஃபோர்டு சிங்க் -3 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. சுவிட்ச்கியர் அமைப்பிலும் மாற்றம் கண்டுள்ளது. வழக்கம்போல் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் அதிக சக்தியை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். இந்த புதிய மாடல் இன்னும் ஒரு மாதத்திற்குள் சந்தைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கோடா கரோக்

ஸ்கோடா கரோக்

ஸ்கோடா நிறுவனத்தின் புத்தம் புதிய கரோக் எஸ்யூவி பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. ஸ்கோடா யெட்டி எஸ்யூவிக்கு மாற்றாக வர இருக்கிறது. ஸ்கோடா கார்களின் பாரம்பரியத்தை பரைசாற்றும் மிக நேர்த்தியான டிசைனில் வெளிவரும் புத்தம் புதிய எஸ்யூவி மாடல் என்பதால் பெரும் ஆவல் இருக்கிறது.

பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் இருந்து இந்தியா வரும் கார்கள்!

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவியில் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு மத்தியில் புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது.

ஹூண்டாய் கோனா

ஹூண்டாய் கோனா

பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய ஹூண்டாய் கோனா எஸ்யூவி ஜீப் காம்பஸ் மாடலக்கு போட்டடியாக எதிர்பார்க்கப்படுகிறது. க்ரெட்டா மற்றும் சான்டாஃ பீ இடையிலான விலைப்பட்டியல் இந்த கார் நிலை நிறுத்தப்பட இருக்கிறது.

பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் இருந்து இந்தியா வரும் கார்கள்!

எலான்ட்ரா உள்ளிட்ட பல ஹூண்டாய் கார்களின் டிசைன் தாத்பரியங்கள் இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஹெட்லைட் டிசைன் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. புதிய ஹூண்டாய் கார்களில் காணப்படும் க்ரில் அமைப்புதான் இந்த காரிலும் இடம்பெற்றிருக்கிறது.

இந்த காரில் 118 பிஎ:்பி பவரை அளிக்க வல்ல 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் மற்றும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மாடலிலும், 175 பிஎச்பி பவருடன் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட மற்றொரு மாடலிலும் வருகிறது. டீசல் மாடலில் 1.6 லிட்டர் எஞ்சின் 113 பிஎச்பி பவர் மற்றும் 131 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் இருவிதமான ஆப்ஷன்களில் கிடைக்கும். 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் இருக்கும். அடுத்த ஆண்டு முற்பகுதியில் இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது.

பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி

பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி

புதிய பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி ஆடம்பர கார் பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகமாகி இருக்கிறது. 2015ம் ஆண்டு பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் பென்ட்லீ நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்த எக்ஸ் 10 ஸ்பீடு 6 என்ற கான்செப்ட் மாடலின் டிசைன் தாத்பரியங்கள் இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. காரின் நீளம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், உயரம் குறைக்கப்பட்டிருப்பதால், பானட் தாழ்வான அமைப்பை பெற்றிருக்கிறது.

பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் இருந்து இந்தியா வரும் கார்கள்!

புதிய பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி காரில் 626 பிஎச்பி பவரையும், 900 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 6.0 லிட்டர் டபிள்யூ12 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 8 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது. அனைத்து சக்கரங்களுக்கும் எஞ்சின் சக்தி அனுப்பும் நுட்பமும் இருக்கிறது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 3.6 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 333 கிமீ வேகம் வரை செல்லும். அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்தியா வரும் என்று தகவல்கள் கூறுகின்றன.

பிஎம்டபிள்யூ எம்5

பிஎம்டபிள்யூ எம்5

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எம் வரிசை பெர்ஃபார்மென்ஸ் கார்களில் பிரபலமான மாடல் எம்-5. இந்த காரின் மமேம்படுத்தப்பட்ட மாடல் தற்போது பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரில் மேம்படுத்தப்பட்ட 4.4 லிட்டர் வி8 எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இரண்டு டர்போசார்ஜர்கள் துணையுடன் இயங்கும் இந்த எஞ்சின் அதிகபட்சமாக 592 பிஎச்பி பவரையும், 750 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பழைய மாடலைவிட 40 பிஎச்பி கூடுதல் பவரையும், 75 என்எம் கூடுதல் டார்க் திறனையும் பெற்றிருக்கிறது.

பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் இருந்து இந்தியா வரும் கார்கள்!

இந்த பவர்ஃபுல் செடான் காரில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும், பின்புற சக்கரங்களுக்கு தேவைப்படும்போது மட்டும் எஞ்சின் ஆற்றல் செலுத்தப்படும் பிஎம்டபிள்யூ எக்ஸ்- ட்ரைவ் சிஸ்டம் இருக்கிறது. இந்த காரில் இசட்எஃப் நிறுவனத்தின் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் இருந்து இந்தியா வரும் கார்கள்!

இந்த சக்திவாய்ந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 3.4 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் டாப் ஸ்பீடை மணிக்கு 306 கிமீ என்ற அளவில் அதிகரித்துக் கொள்வதற்கு விசேஷ தொழில்நுட்ப வசதியை தனியாக வாங்கும் வாய்ப்பும் இருக்கிறது. அடுத்த ஆண்டு இறுதியில் இந்தியா வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லம்போர்கினி அவென்டேடார் எஸ் ரோட்ஸ்டேர்

லம்போர்கினி அவென்டேடார் எஸ் ரோட்ஸ்டேர்

லம்போர்கினி அவென்டேடார் எஸ் ரோட்ஸ்டெர் மாடல் பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. அவென்டேடார் எஸ் காரின் கூரை இல்லாத அமைப்புடைய மாடல்தான் இது. இந்த காருக்கு நேற்றுமுதல் இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட்டு விட்டது. ரூ.5.79 கோடி விலையில் இந்தியா வருகிறது.

பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் இருந்து இந்தியா வரும் கார்கள்!

இந்த காரில் 740 பிஎச்பி பவரையும், 690 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 6.5 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் 0 -100 கிமீ வேகத்தை 3 வினாடிகளில் கடந்துவிடும். மணிக்கு 350 கிமீ வேகம் வரை செல்லும்.

ஆடி க்யூ2

ஆடி க்யூ2

சொகுசு எஸ்யூவி கார் மார்க்கெட்டில் ஆரம்ப ரகத்தில் ஆடி க்யூ3 எஸ்யூவி வாடிக்கையாளர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற மாடல். இந்த எஸ்யூவியைவிட விலை குறைவான புதிய மாடலை ஆடி கார் நிறுவனம் களமிறக்க உள்ளது. ஆடி க்யூ2 என்ற பெயரில் வரும் இந்த புதிய மாடல் தற்போது பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் இருந்து இந்தியா வரும் கார்கள்!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் எம்க்யூபி பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த புதிய மாடலில் எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், அறுகோண வடிவ முகப்பு க்ரில் அமைப்பு போன்றவை ஆடி கார்களுக்குண்டான டிசைன் அம்சங்களை காட்டுகிறது. உட்புறத்தில் பல அம்சங்கள் ஆடி ஏ3 செடான் காரை ஒத்திருக்கிறது.

பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் இருந்து இந்தியா வரும் கார்கள்!

இந்த காரில் 2.0 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். ஆடி 3 செடான் காரைவிட சற்றே கூடுதலான விலையில் வரும். ரூ.28 லட்சம் முதல் ரூ.30 லட்சம் விலையில் இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது.

பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் இருந்து இந்தியா வரும் கார்கள்!

பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் ஹோண்டா ஜாஸ் கார், 2018 ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ, மெர்சிடிஸ் எஸ் க்ளாஸ் கூபே ஃபேஸ்லிஃப்ட் மாடல், 2018 போர்ஷே கேயென் எஸ்யூவி, புதிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ உள்ளிட்ட பல கார்கள் இந்தியாவிலும் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கின்றன.

English summary
Here is the list of India-bound cars from the 2017 Frankfurt Motor Show.
Story first published: Saturday, September 16, 2017, 11:34 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos