ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகமான கார்களில் இந்தியா வரும் மாடல்கள்!

Written By:

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் நடந்து வரும் ஆட்டோமொபைல் கண்காட்சி கார் பிரியர்களையும், பத்திரிக்கையாளர்களையும் கவர்ந்துள்ளது. அங்கு பல புத்தம் புதிய கார் மாடல்களை கார் நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில், ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கார் மாடல்களில் இந்தியாவிற்கு வரும் புதிய கார் மாடல்களின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

 டாடா டாமோ ரேஸ்மோ

டாடா டாமோ ரேஸ்மோ

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் ஸ்போர்ட்ஸ் கார் மாடல். அத்துடன் டாமோ துணை பிராண்டில் வரும் முதல் கார் மாடலாகவும் கூறலாம். 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுமான கார்களில் இந்தியா வரும் மாடல்கள்!

இந்த புதிய ஸ்போர்ட்ஸ் கார் அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். ரூ.25 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

ரேஞ்ச்ரோவர் வெலார்

ரேஞ்ச்ரோவர் வெலார்

உயர் வகை எஸ்யூவி தயாரிப்பில் புகழ்பெற்ற இங்கிலாந்தை சேர்ந்த லேண்ட்ரோவர் நிறுவனம் தனது ரேஞ்ச்ரோவர் பிராண்டில் 4வது மாடலை அறிமுகம் செய்துள்ளது. ரேஞ்ச்ரோவர் வெலார் என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய எஸ்யூவி மாடல் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 மற்றும் ஆடி க்யூ7 உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும். அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் கூறுகின்றன.

டாடா நெக்ஸான்

டாடா நெக்ஸான்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடல். மிகச் சிறப்பான டிசைன், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த புதிய டாடா நெக்ஸான் கார் வருகிறது. தற்போது ஜெனிவா மோட்டார் ஷோவில் முதல்முறையாக காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. மாருதி பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்ற மாடல்களுடன் போட்டி போடும். அதேநேரத்தில், விலை மிக சவாலாக இருக்கும் என்பதால், வாடிக்கையாளர் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பி விட்டு இருக்கிறது. தீபாவளி ரிலீசாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மாருதி ஸ்விஃப்ட்

புதிய மாருதி ஸ்விஃப்ட்

புதிய தலைமுறை சுஸுகி ஸ்விஃப்ட் கார் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுஸுகி நிறுவனத்தின் இலகுவான கட்டமைப்பு தாத்பரியத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. வடிவமைப்பு, வசதிகளிலும் மேம்படுத்தப்பட்டு இருக்கும் இந்த புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் கார் அடுத்த ஆண்டுதான் இந்தியா வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டிலேயே இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டுதான் அறிமுகமாகும் என்பது சற்று ஏமாற்றம்தான்.

வால்வோ எக்ஸ்சி60

வால்வோ எக்ஸ்சி60

புதிய வால்வோ எக்ஸ்சி60 கார் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. வால்வோ எக்ஸ்சி90 கார் போலவே தோற்றமளிப்பதுடன், விலை குறைவாக வருவதால் வாடிக்கையாளர்களின் மத்தியில் ஆவலை ஏற்படுத்தி உள்ளது. பிஎம்டபிள்யூ எக்ஸ்3, ஆடி க்யூ5, பென்ஸ் ஜிஎல்சி உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும்.

டாடா டிகோர்

டாடா டிகோர்

ஜெனிவா மோட்டார் ஷோ மூலமாக பொது பார்வைக்கு வந்துள்ள டாடா டிகோர் கார் வரும் 29ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாக உள்ளது. ஸ்டைல்பேக் என்ற புதிய ரகத்தில் குறிப்பிடப்படும் இந்த கார் மிகச் சிறப்பான தோற்றத்தையும், நவீன தொழில்நுட்ப வசதிகளையும் பெற்றிருக்கிறது. அத்துடன், போட்டியாளர்களைவிட குறைவான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245

ஸ்கோடா ஆக்டேவியா காரின் சக்திவாய்ந்த மாடல்தான் ஆக்டேவியா ஆர்எஸ்245. இந்த கார் தற்போது ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரில் 1.8 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 242 பிஎச்பி பவரையும், 370 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

ஆடி க்யூ2

ஆடி க்யூ2

ஆடி கார் நிறுவனத்தின் மிக குறைவான விலை எஸ்யூவி மாடலாக வருகிறது க்யூ2 கார். வடிவத்திலும் அடக்கமாக இருப்பதால், நகர்ப்புற பயன்பாட்டுக்கு சிறப்பான சொகுசு கார் மாடலாக இருக்கும். இந்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் ரூ.25 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஹோண்டா சிவிக் கார் படங்கள்!

புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்களின் தொகுப்பை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
Read in Tamil: India-bound New Cars At 2017 Geneva Motor Show.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark