இந்தியாவில் விற்பனையில் இல்லை ஆனால் இந்த கார் தான் ஏற்றுமதியில் முதலிடம்..!!
இந்தியாவில் விற்பனையில் இல்லை ஆனால் இந்த கார் தான் ஏற்றுமதியில் முதலிடம்..!!
கடந்த ஆண்டுகளில் இந்தியா பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு முக்கிய சந்தையாக மாறி இருக்கிறது.
மற்ற நாடுகளுக்கு தேவையான கார்களை தயாரித்து ஏற்றுமதி செய்வதிலும் தற்போது இந்தியா முதன்மை வகிக்கிறது.

2018-ம் நிதியாண்டில் பாதி காலவரை முடிந்திருக்கும் வேளையில், இந்தியாவில் இருந்து இதுவரை ஏற்றுமதி செய்யப்பட்ட கார்களில் முதலிடத்தை பிடித்துள்ள செவர்லே பீட் மாடல்.

இந்தியாவில் இத்தோடு விற்பனை நிறுத்திக்கொள்வதாக செவர்லே கார்களை தயாரித்து வரும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.

விற்பனை நிறுத்தப்பட்டாலும், இங்குள்ள ஜெனரல் மோட்டார்ஸிற்கு சொந்தமான ஆலைகளில் ஏற்றுமதியை பொருட்டு பல மாடல் செவர்லே கார்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
Recommended Video


நடைபெற்று வரும் நிதியாண்டில் இதுவரை சுமார் 45,222 செவர்லே பீட் மாடல் கார்களை ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்துள்ளது.

இடதுபுற இயக்கத்துடன் தயாரிக்கப்பட்ட இந்த கார்களை ஜெனரல் மோட்டார்ஸின் பூனே தலகான் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

45,222 செவர்லே பீட் கார்கள் அனைத்தும் மத்திய அமெரிக்க நாடுகள், பெரு, அர்ஜெட்டினா மற்றும் சிலி ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
மேம்படுத்தப்பட்ட இந்த பீட் மாடல் கார்கள் இந்தியாவிலும் விற்பனை செய்யப்பட வேண்டியவை தான்.

ஆனால், அப்போது தான் இந்தியாவில் இருந்து ஜெனரல் மோட்டார்ஸ் வெளியேறுவதாக அறிவித்திருந்த காரணத்தினால், மேம்படுத்தப்பட்ட செவர்லே பீட் கார்கள் இந்தியாவில் விற்கப்படாமலேயே சென்றது.

இருந்தாலும் செவர்லேவின் செடான் மாடல் கார்களான பீட், தி எஸென்சியா போன்ற மற்ற பிரபலமான மாடல்கள் தொடர்ந்து இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

செவர்லே பீட் மாடலுக்கு பிறகு இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கார்களில் 2வது இடத்தை ஃபோக்ஸ்வேகன் வென்டோ மாடல் பிடித்துள்ளது.

சுமார் 41,430 வென்டோ கார்களை அந்நிறுவனம் இங்கிருந்து ஏற்றுமதி செய்துள்ளது. இதற்கு முன்னதாக இதே பட்டியலில் முதலிடத்தில் இருந்து ஃபோர்டு ஈகோஸ்போர்ட், தற்போது 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 39,395 ஈகோஸ்போர்ட் எஸ்யூவி கார்களை ஃபோர்டு மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
இந்த மாடலுடம் ஃபிகோ மற்றும் ஃபிகோ ஏஸ்பையர் கார்களை ஃபோர்டு நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது.

ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கிராண்டு ஐ10 கார்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட கார்களுக்கான பட்டியலில் முறையே 5 மற்றும் 6-ம் இடங்களை பெற்றுள்ளன.

ஹூண்டாயின் மற்ற மாடல் காரான எக்ஸென்ட் இந்தியாவில் ஏற்றுமதியில் பெரிய இடத்தை பெற்றிருந்தாலும், ஏற்றுமதிக்கான பட்டியலில் முதல் 10 இடங்களை கூட அதனால் பெற இயலவில்லை.

நிஸான் நிறுவனத்தின் மைக்ரா மற்றும் சன்னி போன்ற மாடல்கள் இந்தியாவில் இருந்து அதிகளவில் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இவற்றுடன் மாருதி சுசுகி தயாரித்த சுமார் 18,869 பலேனோ மாடல் கார்கள் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகியுள்ளன.
இந்தியாவில் கார்களுக்கான ஏற்றுமதி அதிகரிப்பத்திருப்பதில் விற்பனை திறனை மேலும் அதிகரிக்கும்.

ஆனால் இந்தியாவில் விற்பனையிலே இல்லாத ஒரு கார் மாடல், மற்ற நாடுகளில் வரவேற்பில் இருப்பது இங்குள்ள ஆட்டோதுறை சார்ந்த வல்லுநர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications








