டிரைவரில்லாமல் இயங்கும் கோல்ஃப் கார்ட் வாகனத்தை சொந்தமாக உருவாக்கிய இன்ஃபோசிஸ்!

டிரைவரில்லாமல் இயங்கும் வாகனத்தை உருவாக்கி அசத்தி இருக்கிறது இன்ஃபோசிஸ் நிறுவனம். அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

டிரைவரில்லாமல் இயங்கும் வாகனங்களை தயாரிப்பதற்கு படு தீவிரமான முயற்சிகள் நடந்து வருவது அறிந்ததே. கார் மற்றும் கனரக வாகன தயாரிப்பு நிறுவனங்களும், தொழில்நுட்ப நிறுவனங்களும் டிரைவர் இல்லாமல் இயங்கும் வாகனங்களுகக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் பெரும் முதலீடுகளை கொட்டி முனைப்புடன் செயலாற்றி வருகின்றன.

 டிரைவரில்லாமல் இயங்கும் வாகனத்தை உருவாக்கிய இன்ஃபோசிஸ் நிறுவனம்!

இந்த நிலையில், நம் நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் இன்ஃபோசிஸ் சத்தமில்லாமல், டிரைவரில்லாமல் இயங்கும் வாகனத்திற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கிறது.

 டிரைவரில்லாமல் இயங்கும் வாகனத்தை உருவாக்கிய இன்ஃபோசிஸ் நிறுவனம்!

கோல்ஃப் கார்ட் வாகனத்தில் டிரைவரில்லாமல் இயங்குவதற்கான சாதனங்களை பொருத்தி அண்மையில் வெற்றிகரமாக சோதித்துள்ளது. மேலும், அந்த வாகனத்தில் இன்ஃபோசிஸ் சிஇஓ விஷால் சிக்கா மற்றும் அந்நிறுவனத்தின் மற்றுமொரு உயரதிகாரி பிரவீன் ஆகியோர் அமர்ந்து வலம் வந்தனர்.

Recommended Video

Kawasaki Ninja Z1000 Tamil
 டிரைவரில்லாமல் இயங்கும் வாகனத்தை உருவாக்கிய இன்ஃபோசிஸ் நிறுவனம்!

இந்த நிகழ்வை டிவிட்டர் மூலமாக வெளியுலகுக்கும் பகிர்ந்து கொண்டுள்ளார் விஷால் சிக்கா. மேலும், மைசூரில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மையத்தில் இந்த டிரைவரில்லா வாகன தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

 டிரைவரில்லாமல் இயங்கும் வாகனத்தை உருவாக்கிய இன்ஃபோசிஸ் நிறுவனம்!

இதுபோன்ற புதுமையான தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பதில் இன்ஃபோசிஸ் முன்னோடியாக விளங்குவதற்கு பாடுபட்ட அனைத்து ஊழியர்களுக்கும் தனது பாராட்டுகளையும், நன்றிகளையும் விஷால் சிக்கா தெரிவித்துள்ளார்.

 டிரைவரில்லாமல் இயங்கும் வாகனத்தை உருவாக்கிய இன்ஃபோசிஸ் நிறுவனம்!

விஷால் சிக்கா வலம் வந்த கோல்ஃப் கார்ட் வாகனத்தில் தானாக இயங்குவதற்காக கேமரா, சென்சார்கள் மற்றும் கட்டுப்பாட்டு கம்ப்யூட்டர்கள் பொருத்தப்பட்டு இருந்தது. மேலும், ஓட்டுனர் இல்லாமல் சரியான தடத்தில் செல்வதற்கான விசேஷ நேவிகேஷன் சாதனமும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

 டிரைவரில்லாமல் இயங்கும் வாகனத்தை உருவாக்கிய இன்ஃபோசிஸ் நிறுவனம்!

சாலையில் இருக்கும் சமிக்ஞைகளை இனம் கண்டு சரியான தடத்தில் அந்த வாகனம் சென்று அனைவரையும் வியக்க வைத்தது. டிரைவரில்லாமல் இயங்கும் வாகனத்திற்கான தொழில்நுட்பத்தை இன்ஃபோசிஸ் உருவாக்கி இருப்பது, இந்தியாவில் இந்த வகை வாகனங்கள் அடுத்த சில ஆண்டுகளிலேயே சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளது.

 டிரைவரில்லாமல் இயங்கும் வாகனத்தை உருவாக்கிய இன்ஃபோசிஸ் நிறுவனம்!

இதுபோன்ற செயற்கை நுண்ணறிவு திறனுடன் இயங்கும் வாகனங்கள் மூலமாக விபத்துக்கள் வெகுவாக கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முயற்சியில் இன்ஃபோசிஸ் நிறுவனம் இறங்கி இருப்பது பாராட்டப்படத்தக்க விஷயம்.

Most Read Articles
English summary
India's homegrown technology giant Infosys revealed its efforts in developing autonomous technology for vehicles.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X