காரை விட அதிக கவனத்தை ஈர்க்கும் கார் சாவிகள் - சுவாரஸ்யமான தகவல்கள்..!

Written By:

கார்களின் சாவிகள், முந்தைய காலகட்டத்தில் இருந்தது போல் இல்லாமல் இப்போது எல்லாமே நவீனமயமாகிவிட்டன. கடந்த 10 வருட காலமாக ஆட்டொமொபைல் உலகை கலக்கி கொண்டிருக்கிறது ரிமோட் மற்றும் ஸ்மார்ட் சாவிகள். தூரத்திலிருந்தபடி ரிமோட் சாவியை இயக்கி, கார்களை கண் சிமிட்ட வைத்து அனைவரது கவனத்தையும் கவர்ந்து பந்தாவாக காரில் வந்து உட்காருவதையே, பலரும் விரும்புகிறார்கள்.

அப்படிப்பட்ட உலகின் ஸ்மார்ட் மற்றும் ரிமோட் கார் சாவிகளில் சிறந்தவை குறித்து இந்த தொகுப்பில் தொடர்ந்து பார்க்கலாம்.

பிஎம்டபிள்யூ 7 சீரீஸ்

பிஎம்டபிள்யூ 7 சீரீஸ்

உலகில் உள்ள ரிமோட் கார் சாவிகளிலேயே மிகவும் தனித்தன்மை வாய்ந்தது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 7 சீரீஸ் கார்களின் சாவி தான்.

உலகிலேயே டச் ஸ்கிரீன் கொண்ட கார் சாவி இது மட்டுமே. இதில் 2.2 இஞ்ச் கலர் டச் ஸ்கிரீன் உள்ளது. இதில் 4 பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. கார் கதவுகளை திறப்பது/மூடுவது, பானட், டிக்கி திறப்பது/மூடுவது உள்ளிட்ட ரெகுலர் அம்சங்களுடன் சில ஸ்பெஷல் அம்சங்களும் இதில் உள்ளன. அவை

  • ஓட்டுநரே இல்லாமல் காரை பார்க்கிங் செய்யும் வசதி
  • காரின் காலநிலையை மாற்றியமைத்துக்கொள்ளும் வசதி
  • காரின் விளக்குகளை கண்ட்ரோல் செய்யும் வசதி
  • அனைத்து கதவுகளும் மூடப்பட்டுள்ளனவா என்பதை தெரிந்துகொள்ளும் வசதி
  • காரில் எரிபொருள் அளவை காட்டும் வசதி
டெஸ்லா மாடல்-எஸ்

டெஸ்லா மாடல்-எஸ்

எலக்ட்ரிக் கார்களில் உலகின் முன்னோடி நிறுவனமான டெஸ்லாவின் மாடல் எஸ் கார் சாவி இந்தக் காரின் மினியேச்சர் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் காரின் சாவியை வைத்துக்கொண்டு இந்தக் காரை முன்னோக்கியும், பின்னோக்கியும் இயக்க முடியும், அதுவும் ஓட்டுநரே இல்லாமல் என்பது சிறப்புமிக்க ஒன்றாகும்.

கோயினிக்செக்

கோயினிக்செக்

சில கார்களை பார்க்கையில் கவுரவமிக்கதாக இருக்கும், ஆனால் ஸ்விஸ் நிறுவனமான கோயினிக்செக் கார்களின் சாவியை வைத்திருப்பதே அந்தஸ்தின் அடையாளமாக விளங்கக்கூடியதாக இருக்கும். இந்த நிறுவனத்தின் லோகோ வடிவில், வெள்ளி உலோகத்தில் தயாரிக்கப்படுகிறது இதன் சாவிகள்.

ஃபெராரி வி2

ஃபெராரி வி2

ஃபெராரி நிறுவனத்தின் வி2 ஸ்போர்ட்ஸ் காரின் சாவி, இந்தக் காரின் மினியேச்சர் டிசைன் கொண்டதாகும். மற்ற எந்த நிறுவன கார் சாவிகளின் மாடலை விடவும் ஃபெராரியுடையது மிகவும் அழகிய டிசைனில் உள்ளது.

இந்த சாவி ரிமோட் செயல்பாடுகளை செய்வதோடு, தொழில்நுட்ப கோளாறுகள் அல்லது மழை நீரால் பாதிக்கப்பட்டு இருந்தால், அவசரகால தேவைக்காக இதில் ரகசியமாக ஒரு மேனுவல் சாவியும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்டன் மார்டின்

ஆஸ்டன் மார்டின்

ஆஸ்டன் மார்டின் கார் சாவியிலும் ஒரு தனிப்பட்ட தனித்துவமான தன்மை உள்ளது. இந்த சாவியினை ரிமோட் செயல்பாடுகளுக்காக பயன்படுத்தினாலும், இந்த சாவியினை பொருத்த ஒரு இடம் இந்தக் காரில் உள்ளது. இதனை அந்த இடத்தில் பொருத்தினால் மட்டுமே காரினை ஸ்டார்ட் அல்லது ஸ்டாப் செய்ய முடியும்.

மசேரட்டி

மசேரட்டி

இத்தாலிய நிறுவனமான மசேரட்டி, மதிப்புமிகு கார் பிராண்டுகளில் ஒன்றாக விளங்குகிறது. இவற்றின் ரிமோட் கார் சாவியில் பொதுவான கார் கதவுகள், ஜன்னல்கள், டிக்கி, பானட் உள்ளிட்டவற்றை திறப்பது/மூடுவது உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது. என்றாலும் இத்தாலிய டிசைன் கவனிக்கத்தக்க வகையில் உள்ளது.

பகானி

பகானி

மற்றொரு இத்தாலிய நிறுவனமான பகானியின் கார் சாவி முற்றிலும் அலுமினிய உலோகத்தால் காரின் மினியேச்சர் போன்று வடிவமைப்பு பெற்றதாகும்.

இதனை இரண்டு பிரிவாக பிரிக்கலாம், அதில் ஒன்றில் யூஎஸ்பி நினைவகமும், மற்றொன்று கார் சாவியாகவும் செயல்படுகிறது.

கார்வெட்

கார்வெட்

கார்வெட் கார்களின் ஸ்மார்ட் சாவியில் இதன் ஸ்மார்ட் சாவிகளில் உள்ள பொதுவான அம்சங்களுடன் இக்காரை ஸ்டார்ட் செய்யும் வசதியும் உள்ளது.

ஜாகுவார் எஃப் பேஸ்

ஜாகுவார் எஃப் பேஸ்

ஜாகுவார் எஃப் பேஸ் காரின் சாவியானது வாட்ச் போன்று அணிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனை காரின் பின்புறம் உள்ள லோகோவில் வைத்தால் தான் இஞ்சினை ஆன் செய்யவோ ஆஃப் செய்யவோ முடியும். இது மிகவும் பாதுகாப்பான கார் சாவிகளுள் ஒன்றாக உள்ளது.

வால்வோ

வால்வோ

வால்வோ நிறுவனத்தின் கார் சாவிகள் மிகவும் ஸ்மார்ட் தொழில்நுட்பம் அடங்கியதாக உள்ளது. இவை ஸ்மார்ட் போன்களுடன் ஆஃப் வாயிலாக இணைப்பு பெற்றிருப்பதால், காரின் அனைத்துவித அம்சங்களையும் வெளியில் இருந்தவாரே இயக்கலாம்.

English summary
Read in Tamil about interesting facts about innovative car keys in world.
Story first published: Thursday, May 18, 2017, 15:53 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark