எஃகு உலோகத்திற்கு பதில் மரக்கட்டைகளால் கார் தயாரிக்க ஜப்பான் நிறுவனங்கள் ஆய்வு..!!
எஃகு உலோகத்திற்கு பதில் மரக்கட்டைகளால் கார் தயாரிக்க ஜப்பான் நிறுவனங்கள் ஆய்வு..!!
ஜப்பான் நாட்டை சேர்ந்த முன்னணி கார் தயாரிக்கும் நிறுவனங்கள் பல எஃகு உலோகத்திற்கு பதிலாக மரக்கட்டைகளால் இனி கார் தயாரிக்க திட்டமிட்டுள்ளன.

கார்களின் பயன்பாடு என்பது காலத்தை கடந்து நிறக்கக்கூடியது. இதற்காக கார் எஃகு எனப்படும் 'ஸ்டீல்' உலோகத்தில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இதனால் காருக்கு பிடிமானம், உறுதி, வலிமை, தலைமுறை கடந்து இருக்கும் திறன் மற்றும் எடை போன்ற நம்பத்தகுந்த அம்சங்கள் நிறையவே இருக்கின்றன.

இத்தனை தேவைகளுடன் இருந்தாலும் ஸ்டீலினால் தாயரிக்கப்படும் பல கார்கள், அதிக எடைக்கொண்டதாக பல வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு காரணம் இலகு ரக தேவை பயன்பாடு. தொழில்நுட்பங்கள் பல இலகுவான தேவை பயன்பாடுகளுடன் கிடைக்கிறது. இது காருக்கும் கொண்டுவரப்படுகிறது.
Recommended Video


அதாவது மரக்கட்டைகளின் மூலம் கிடைக்கும் 'பைபர்' என்கிற நாரிழைகளால் ஆன உலோக கலைவையை ஜப்பானின் சில கார் நிறுவனங்கள் உருவாக்க முயற்சித்து வருகின்றன.

இதை வைத்து கார்களை தயாரிப்பதற்கான வேலைகளை அங்குள்ள சில முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் செய்து வருகின்றன.

நாரிழைகளலான உலோகங்களால் தயாரிக்கப்படும் கார்கள், எஃகு உலோகத்தை விட 7-ல் ஒரு பங்கு எடை அளவை மட்டுமே கொண்டு இருக்கும்.

எடை குறைவாக இருந்தாலும் எஃகு உலோகத்தை விட நாரிழையின் தன்மை மிகவும் பலம் வாய்ந்தது. இந்த பலம் காருக்கான தேவைகளுக்கு சரியாகுமா என்பதற்கான ஆய்வை ஜப்பானின் சில நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.

குறிப்பாக ஜப்பானின் டென்கோ குழுமம், டொயோட்டா, டயகோ நிஷிகவா குழுமம் போன்ற கார் உற்பத்தியில் ஜப்பானின் முன்னணி நிறுவனங்கள் பல இதற்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

மரக்கட்டைகளில் இருந்து நாரிழைகளை எடுத்து அதிலிருந்து உலோகத்தை உருவாக்கும் பணி 2020ம் ஆண்டிற்குள் முடிக்கப்படும் என அதற்கான ஆய்வில் உள்ள நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications








