இந்தியாவில் வரவேற்பை குவிக்கும் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் விலை ’கிடுகிடு’ உயர்வு..!

Written By:

ஹோண்டா, டொயோட்டா மற்றும் மாருதி சுசுகி போன்ற நிறுவனங்களை தொடர்ந்து அமெரிக்காவை சேர்ந்த ஜீப் நிறுவனமும் தனது தயாரிப்புகளுக்கான விலையை மாற்றியமைத்துள்ளது.

இந்தியாவில் ஜீப் காம்பஸ் காரின் விலை அதிரடியாக ஏற்றம்..!!

மத்திய அரசு வாகன பிரிவில் 4 மீட்டருக்கும் பெரிதான கார்களுக்கு பொருட்கள் மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) செஸ் வரி மதிப்பை உயர்த்தி அறிவித்தது.

இந்தியாவில் ஜீப் காம்பஸ் காரின் விலை அதிரடியாக ஏற்றம்..!!

ஜிஎஸ்டி கவுன்சிலின் ஒப்புதலின் படி நடைபெற்ற இந்த வரி மாற்றத்தால் நடுத்தர அளவு கொண்ட கார், எஸ்யூவி மற்றும் ஆடம்பர கார்களுக்கான செஸ் வரி உயர்ந்தது.

இந்தியாவில் ஜீப் காம்பஸ் காரின் விலை அதிரடியாக ஏற்றம்..!!

இதை பின்பற்றி ஹோண்டா கார்ஸ் இந்தியா, டொயோட்டா கிர்லோஸ்கார் மோட்டார் போன்ற நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளுக்கான விலையை மாற்றி அறிவித்தன.

இந்தியாவில் ஜீப் காம்பஸ் காரின் விலை அதிரடியாக ஏற்றம்..!!

தொடர்ந்து பல நிறுவனங்கள், புதிய விலை கொள்கையை அமல்படுத்தி வரும் வேளையில் அமெரிக்காவை சேர்ந்த ஜீப் நிறுவனமும்,

தனது தயாரிப்புகளுக்கான செஸ் வரி மாற்றத்தில் ஏற்பட்டுள்ள அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் ஜீப் காம்பஸ் காரின் விலை அதிரடியாக ஏற்றம்..!!

ஜீப் இந்தியா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான சப்-காம்பேக்ட் காம்பஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனையில் புரட்சியை படைத்து வருகிறது.

இந்தியாவில் ஜீப் காம்பஸ் காரின் விலை அதிரடியாக ஏற்றம்..!!

பல தரப்பு மக்களையும் கவர்ந்து வரும் இந்த காரின் விலை புதிய ஜிஎஸ்டி வரியின் படி, வேரியண்டுகளுக்கு ஏற்றவாரு ரூ.21,000 தொடங்கி ரூ.72,000 வரை அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஜீப் காம்பஸ் காரின் விலை அதிரடியாக ஏற்றம்..!!

இதனால் ஜீப் காம்பஸ் காருக்கு ரூ.15.16 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) தொடங்கி டாப் வேரியண்ட் மாடல் ரூ.21.37 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஜீப் காம்பஸ் காரின் விலை அதிரடியாக ஏற்றம்..!!

ஜிஎஸ்டி கவுன்சிலின் புதிய விதிப்படி எஸ்யூவி காருக்கு முன்னர் இருந்த 43 சதவீத அரி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த புதிய வரி கொள்கை அனைத்து பெட்ரோல் மற்றும் டீசல் வகை மாடல்களுக்கு ஏற்றவாறு மாறும்.

இந்தியாவில் ஜீப் காம்பஸ் காரின் விலை அதிரடியாக ஏற்றம்..!!

இந்தியாவில் அதிக விற்பனை திறனை பெற்று வரும் ஜீப் காம்பஸ் காரின் புதிய விலை மதிப்பு கடந்த 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) ஜீப் காம்பஸ் 1.4 லிட்டர் பெட்ரோல்

வேரியன்ட் பழைய விலை புதிய விலை வேறுபாடு
ஸ்போர்ட் ரூ.14.95 லட்சம் ரூ.15.16 லட்சம் ரூ.21,000
லிமிடெட் ரூ.18.70 லட்சம் ரூ.18.96 லட்சம் ரூ.26,000
லிமிடெட் (O) ரூ.19.40 லட்சம் ரூ.19.67 லட்சம் ரூ.27,000

எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) ஜீப் காம்பஸ் 1.4 லிட்டர் டீசல்

வேரியன்ட் பழைய விலை புதிய விலை வேறுபாடு
ஸ்போர்ட்(Petrol less than 1200cc) ரூ.15.45 லட்சம் ரூ.15.99 லட்சம் ரூ54,000
லாங்கிடியூட் ரூ.16.45லட்சம் ரூ.17.03 லட்சம் ரூ.58,000
லாங்கிடியூட் (O) ரூ.17.25 லட்சம் ரூ.17.85 லட்சம் ரூ.60,000
லிமிடெட் 4X2 ரூ.18.05 லட்சம் ரூ.18.68 லட்சம் ரூ.63,000
லிமிடெட் (O) 4X2 ரூ.18.75 லட்சம் ரூ.19.41 லட்சம் ரூ.66,000
லிமிடெட் 4X4 ரூ.19.95 லட்சம் ரூ. 20.65 லட்சம் ரூ.70,000
லிமிடெட் (O) ரூ.20.65 லட்சம் ரூ.21.37 லட்சம் ரூ.72,000
இந்தியாவில் ஜீப் காம்பஸ் காரின் விலை அதிரடியாக ஏற்றம்..!!

இந்தியாவில் காம்பஸ் காருக்கு அதிகளவில் வரவேற்பு இருக்கும் என்பதை உணர்ந்து தான் ஜீப் காம்பஸ் கார் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது.

இந்தியாவில் ஜீப் காம்பஸ் காரின் விலை அதிரடியாக ஏற்றம்..!!

ஆனால் மாடல்களுக்கு தேவையான பொருட்கள் பலவும் கம்பிளிட்லீ பிளிட்-அப் (சிபியூ) என்ற வழியின் கீழ் தான் கொண்டு வரப்படுகிறது. இது சற்று விலை மதிப்புடையது.

இந்தியாவில் ஜீப் காம்பஸ் காரின் விலை அதிரடியாக ஏற்றம்..!!

ரூ. 2.75 லட்சம் முதல் ரூ. 6.4 லட்சம் வரை விலைபெறும் கிராண்டு கரோக்கீ மற்றும் விராங்கலர் கார்கள் போல அதுவும் இந்த சிபியூ வழித்தடம் செயல்படுகிறது.

இந்தியாவில் ஜீப் காம்பஸ் காரின் விலை அதிரடியாக ஏற்றம்..!!

ஜீப் நிறுவனத்தை நிர்வகித்து வரும் ஃபியட் கிரைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் இந்தியாவில் ஃபியட் புண்டோ, ஃபியட் அவெண்டூரா, அபார்த் புண்டோ, அபார்த் அவெண்டூரா மற்றும் ஃபியட் லீனியா போன்ற கார்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

இந்தியாவில் ஜீப் காம்பஸ் காரின் விலை அதிரடியாக ஏற்றம்..!!

தற்போதைய இந்த ஜிஎஸ்டி-க்கான வரி மாற்றத்தால் ஃபியட் லீனியா மற்றும் அவெண்டூரா கார்கள் ரூ.9,000 முதல் ரூ.14,000 வரை இந்தியாவில் விலை பெறுகின்றன.

இந்தியாவில் ஜீப் காம்பஸ் காரின் விலை அதிரடியாக ஏற்றம்..!!

புதிய ஜிஎஸ்டி வரி கொள்கையால் இந்தியாவில் அதிக விற்பனை திறன் மற்றும் மதிப்பு பெற்றுவரும் ஜீப் காம்பஸ் கார் ரூ. 21,000 முதல் ரூ. 72,000 வரை விலை ஏற்றத்தை பெற்றுள்ளன.

இந்தியாவில் ஜீப் காம்பஸ் காரின் விலை அதிரடியாக ஏற்றம்..!!

இந்த விலை ஏற்றம் காம்பஸ் காரின் விற்பனையை எந்தவிதத்திலும் பாதிக்காது என ஜீப் காம்பஸ் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஜீப் காம்பஸ் காரின் விலை அதிரடியாக ஏற்றம்..!!

மேலும் காம்பேக்ட் எஸ்யூவி மாடல் தற்போது போல எப்போதும் இந்திய வாடிக்கையாளர்களிடம் தொடர் வரவேற்பில் இருக்கும் என ஜீப் நிறுவனம் எதிர்பார்க்கிறது.

மேலும்... #ஜீப் #jeep
English summary
Read in Tamil: Jeep Compass receives an increase in price between Rs 21,000 to Rs 72,000 based on the variants. Click for Details...
Story first published: Saturday, September 16, 2017, 13:49 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos