இந்தியாவில் ஜீப் காம்பஸ் எஸ்யூவிகள் திரும்ப அழைக்கப்படுகிறது!

ஜீப் காம்பஸ் எஸ்யூவிகள் இந்தியாவில் திரும்ப அழைக்கப்பட உள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

குறைபாடுடைய உதிரிபாகத்தை சரிசெய்து தருவதற்காக, இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவிகளை ஃபியட் க்றைஸ்லர் குழுமம் திரும்ப அழைக்க இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவி திரும்ப அழைக்கப்படுகிறது!

கடந்த ஜூலை 31ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. எஸ்யூவி ரகத்தில் அதிகம் விரும்பப்படும் மாடலாகவும் விளங்குகிறது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவி திரும்ப அழைக்கப்படுகிறது!

இந்த நிலையில், ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஏர்பேக்கில் குறைபாடுடைய உதிரிபாகம் இருப்பதை ஜீப் நிறுவனம் கண்டறிந்தது. இதையடுத்து, ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் இருக்கும் குறைபாட்டை சரி செய்து தருவதற்காக, உலக அளவில் திரும்ப பெறுவதற்கு முடிவு ஜீப் நிறுவனம் முடிவு செய்தது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவி திரும்ப அழைக்கப்படுகிறது!

அதன்படி, இந்தியாவிலும் விற்பனை செய்யப்பட்ட 1,200 ஜீப் காம்பஸ் எஸ்யூவிகள் திரும்ப அழைக்கப்பட உள்ளன. கடந்த செப்டம்பர் 5ந் தேதி முதல் கடந்த 19ந் தேதி வரை உற்பத்தி செய்யப்பட்ட ஜீப் காம்பஸ் எஸ்யூவிகளில் இந்த பிரச்னை இருப்பது தெரிய வந்துள்ளது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவி திரும்ப அழைக்கப்படுகிறது!

ஏர்பேக் அமைப்பை இறுக்கமாக மூடியிருக்கும் அமைப்பில் பொருத்தப்பட்டிருக்கும் நட்டுகள் அசெம்பிள் செய்யும்போது இறுக்கமாக இல்லாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவி திரும்ப அழைக்கப்படுகிறது!

இந்த நட் இறுக்கமாக இல்லாமல் இருப்பதால், விபத்தில் ஏர்பேக் விரிவடையும்போது முன்வரிசை இருக்கையில் அமர்ந்திருக்கும் பயணிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. அதனை சரிசெய்து தருவதற்காக இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கையை தானாக முன்வந்து மேற்கொண்டுள்ளது ஜீப் நிறுவனம்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவி திரும்ப அழைக்கப்படுகிறது!

இந்த பிரச்னை காரணமாக, இதுவரை எந்த விபத்து குறித்தோ அல்லது பயணிகள் காயம் குறித்த புகார்கள் எதுவும் வரவில்லை என்று ஜீப் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஃபியட் க்றைஸ்லர் குழுமம் தெரிவித்துள்ளது. மேலும், பிரச்னையை சரிசெய்து தரும் வரை, முன்பக்க பயணிக்கான ஏர்பேக்கை அணைத்து வைக்குமாறு வாடிக்கையாளர்களை ஜீப் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவி திரும்ப அழைக்கப்படுகிறது!

அடுத்து வரும் வாரங்களில் இந்தியாவிலுள்ள ஜீப் நிறுவனத்தின் டீலர்கள் மூலமாக, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பிரச்னை சரி செய்து தரப்படும் என்றும், கட்டணமில்லாமல் இந்த பிரச்னையை சரிசெய்து கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவி திரும்ப அழைக்கப்படுகிறது!

சந்தேகம் உள்ள ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் வாடிக்கையாளர்கள் டீலர்களை தொடர்பு கொண்டும், தங்களது எஸ்யூவியில் ஏர்பேக் பிரச்னை இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, November 24, 2017, 12:17 [IST]
English summary
Fiat Chrysler Automobiles has announced a recall of the Jeep Compass SUV in India due to an airbag issue.
மேலும்... #ஜீப் #jeep
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+