இந்தியாவில் 10,000 யூனிட்டுகளை கடந்து விற்பனையில் கலக்கும் ஜீப் காம்பஸ் எஸ்யூவி கார்..!!
இந்தியாவில் 10,000 யூனிட்டுகளை கடந்து விற்பனையில் கலக்கும் ஜீப் காம்பஸ் எஸ்யூவி கார்..!!
ப்ரீமியம் ரக எஸ்யூவி கார்கள் விற்பனையில், இந்தியாவில் ஜீப் காம்பஸ் மாடல்கள் நல்ல விற்பனையில் இருந்து வருகின்றன.
இந்நிலையில் நம் நாட்டில் இந்த கார் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக ஜீப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் விற்பனையாகி வரும் ப்ரீமியம் தர எஸ்யூவி கார் விற்பனையில், அமெரிக்காவை சேர்ந்த ஜீப் நிறுவனம் தனது காம்பஸ் மாடலை வெளியிட்டு புதிய டிரென்டை உருவாக்கியது.

தற்போது, ப்ரீமியம் தர கார்களை விற்பனையில் ஜீப், இந்தியாவிலேயே பிரபல நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
அது வெளியிட்ட காம்பஸ் கார், நம் நாட்டில் ப்ரீமியம் ரக கார் சந்தையில் தலைசிறந்த மாடலாக உள்ளது.
Recommended Video


ஜீப் நிறுவனத்தின் முந்தைய மாடலான செரோக்கி மற்றும் கிராண்ட் கார்களை தழுவித்தான் காம்பஸ் கார் உருவாக்கப்பட்டது.
அதனுடைய தோற்றம் மற்றும் அம்சங்கள் பற்றி தகவல்கள் வெளியானதில் இருந்தே உலகளவில் பலத்த எதிர்பார்ப்பு நிலவியது.

ரூ.25 லட்சத்திற்குள் இந்தியாவில் விற்பனையாகி வரும் காம்பஸ் எஸ்யூவி கார், சுமார் 10,000 யூனிட்டுகளை கடந்து விற்பனையாகி இருப்பதாக ஜீப் தெரிவித்துள்ளது.

அதாவது இந்தியாவில் வெளியான நான்கே மாதங்களில் ப்ரீமியம் எஸ்யூவி ரக கார் விற்பனையில், காம்பஸ் மாடல் இந்த எண்ணிக்கையை கடந்திருக்கிறது.

இவற்றுடன், இந்தியாவை தாண்டி ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளிலும், இந்த கார் பிரபலமாக உள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட காம்பஸ் காரின் 600 யூனிட்டுகள் அந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரன்சஞ்கோன் என்ற பகுதியில் தான் ஜீப் நிறுவனத்தின் சொந்த ஆலை இயங்கி வருகிறது. அங்குதான் காம்பஸ் கார் தயாரிக்கப்பட்டு வருகிறது.

உள்நாட்டு உற்பத்தி மற்றும் விற்பனையில் புதிய உச்சத்தை கடந்திருக்கும் இந்த கார், இந்தியாவில் முழுக்க 47 நகரங்களில், 50 விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்பட்டுகிறது.

தொடர்ந்து இந்தியாவில் அதிகரித்து வரும் வரவேற்பால் மற்றும் தேவைகளால், மஹாராஷ்டிரா ரன்சஞ்கோன் ஆலையில் காம்பஸ் காரின் உற்பத்தி பணிகள் இருமடங்காக ஆக்கப்பட்டுள்ளன.

ஜீப் காம்பஸ் எஸ்யூவி கார் இரண்டு வித எஞ்சின் தேர்வுகளில் உள்ளன. அதன்படி பெட்ரோல் மாடல் காம்பஸ் கார் 1.4 லிட்டர் மல்டி-ஏர் டர்போ எஞ்சின் கொண்டுள்ளது.

இதன்மூலம் 160 பிஎச்பி பவர் மற்றும் 250 என்.எம் டார்க் திறன் கிடைக்கும். 6 ஸ்பீடு மற்றும் 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேவைகளுடன் கிடைக்கிறது.

மேலும், மல்டிஜெட் ஆயில் பர்னர் டீசல் எஞ்சினுடன் காம்பஸ் கார் தயாரிக்கப்படுகிறது. 2.0 லிட்டர் திறன் பெற்ற இந்த எஞ்சின் 170 பிஎச்பி பவர் மற்றும் 350 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

எஞ்சின் சரியான செயல்பாட்டிற்கு அது 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் கூட்டணி வைத்துள்ளது.
வேரியண்டுகளுக்கு ஏற்றவாறு காம்பஸ் காரின் எஞ்சின் 2 டபுள்யூ.டி, 2 டபுள்யூ.டி மற்றும் 4 டபுள்யூ.டி என பலவேறு எஞ்சின் தேர்வுகளை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








