அசராதவன்... விபத்தில் சிக்கினாலும் கட்டுக்குலையாத ஜீப் காம்பஸ் எஸ்யூவி!

Written By:

புத்தம் புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி ஒன்று பயங்கர விபத்தில் சிக்கியிருக்கிறது. அதன் படங்களை இந்த செய்தியில் காணலாம்.

 விபத்தில் சிக்கினாலும் கட்டுக்குலையாத ஜீப் காம்பஸ் எஸ்யூவி!

கடந்த ஆகஸ்ட் துவக்கத்தில் விற்பனைக்கு வந்த புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. விற்பனையிலும் கலக்கி வருகிறது. டிசைன், கட்டுமானம், செயல்திறன் மிக்க எஞ்சின், ஜீப் நிறுவனத்தின் பாரம்பரியம் ஆகியவை காம்பஸ் எஸ்யூவிக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.

 விபத்தில் சிக்கினாலும் கட்டுக்குலையாத ஜீப் காம்பஸ் எஸ்யூவி!

இந்த நிலையில், புத்தம் புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி ஒன்று பயங்கர விபத்தில் சிக்கியிருக்கும் படங்கள் சமூக ஊடங்களில் வெளியாகி உள்ளன. நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற வாகனத்துடன் இடித்து அந்த ஜீப் காம்பஸ் எஸ்யூவி விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

 விபத்தில் சிக்கினாலும் கட்டுக்குலையாத ஜீப் காம்பஸ் எஸ்யூவி!

இந்த பயங்கர விபத்தில் ஜீப் எஸ்யூவியின் முன்பக்கம் கடுமையாக சேதமடைந்தது. அதேநேரத்தில், ஏர்பேக்குகள் விரிந்ததால், ஓட்டுனரும், பயணித்தவர்களும் அதிர்ஷ்டவசமாக பாதிப்பு இல்லை என்று கருதலாம்.

 விபத்தில் சிக்கினாலும் கட்டுக்குலையாத ஜீப் காம்பஸ் எஸ்யூவி!

விபத்தில் சிக்கிய ஜீப் எஸ்யூவியின் பானட் மற்றும் எஞ்சின் பாகங்கள், முன்புற விண்ட் ஷீல்டு கண்ணாடி போன்றவை கடுமையாக சேதமடைந்துள்ளன. இருப்பினும், கேபினுக்குள் அதிக பாதிப்புகள் தெரியவில்லை.

சிறப்பான கட்டுமானத்தை பெற்றிருப்பதால், இந்த விபத்தில் எஸ்யூவி சேதமடைந்தபோதிலும், உள்ளே பயணித்தவர்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது என்று தெரிகிறது.

 விபத்தில் சிக்கினாலும் கட்டுக்குலையாத ஜீப் காம்பஸ் எஸ்யூவி!

தற்காலிக பதிவு எண் கொண்டிருப்பதால், டீலருக்கு விற்பனைக்கு எடுத்து வரப்பட்ட வாகனமாக இருக்கவும் சாத்தியம் இருக்கிறது. ஏனெனில், அண்மை காலங்களில் டீலர் பணியாளர்கள் இதுபோன்ற புதிய வாகனங்களை அதிவேகத்தில் செலுத்துவதால் விபத்தில் சிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

 விபத்தில் சிக்கினாலும் கட்டுக்குலையாத ஜீப் காம்பஸ் எஸ்யூவி!

இதுதொடர்பான முழுமையான விபரங்கள் தற்சமயம் கிடைக்கவில்லை. முழு விபரங்கள் கிடைத்தால், அதனை உடனடியாக இங்கு வெளியிடுகிறோம்.

 விபத்தில் சிக்கினாலும் கட்டுக்குலையாத ஜீப் காம்பஸ் எஸ்யூவி!

எஸ்யூவி தயாரிப்பில் நீண்ட பாரம்பரியம் கொண்ட ஜீப் நிறுவனத்தின் விலை குறைவான மாடலாக ஜீப் காம்பஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், கட்டமைப்பில் ஜீப் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதை இந்த விபத்து காட்டுவதாக அமைந்துள்ளது.

 விபத்தில் சிக்கினாலும் கட்டுக்குலையாத ஜீப் காம்பஸ் எஸ்யூவி!

இதேபோன்று, பெங்களூரில் நடந்த விபத்து ஒன்றிலும் ஜீப் காம்பஸ் எஸ்யூவி முன்பக்கம் சேதமடைந்த போதிலும், உள்ளே இருந்தவர்களுக்கு அதிக பாதிப்பை தரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 விபத்தில் சிக்கினாலும் கட்டுக்குலையாத ஜீப் காம்பஸ் எஸ்யூவி!

கடந்த செப்டம்பர் மாதம் ஜீப் காம்பஸ் எஸ்யூவியை யூரோ என்சிஏபி அமைப்பு க்ராஷ் டெஸ்ட் செய்தது. அதில், அதிகபட்சமான 5 நட்சத்திர தர மதிப்பீட்டை இந்த எஸ்யூவி பெற்றது நினைவிருக்கலாம்.

English summary
A video and a few pictures of a damaged Jeep compass, have surfaced on the internet, and are doing the rounds on various social media platforms. Minute details on the crash are not available at the moment, but signs of high-speed understeer are very evident.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark