சபாஷ் சரியான போட்டி: இந்தியாவில் ஹூண்டாய் கிரெட்டா-க்கு போட்டியாக புதிய காரை களமிறக்கும் கியா..!!

Written By:

தென் கொரிய நாட்டின் கியா மோட்டார் நிறுவனம் இந்தியாவில் கால் பதிக்க துரித கதியில் தயாராகி வருகிறது.

அதன் முதற்கட்டமாக கொரியாவின் முன்னணி நிறுவனமான ஹூண்டாயின் கிரெட்டா மாடல் காருக்கு போட்டியை உருவாக்குகிறது கியா.

ஹூண்டாய் கிரெட்டா காருக்கு போட்டியாக காய் நகர்த்தும் கியா!

இதுகுறித்து பேசிய கியா மோட்டார்ஸ் கார்ப் நிறுவனத்தின் சர்வதேச வியாபார சந்தைக்கான தலைமை அதிகாரி தே-ஜூன் ஓ,

"இந்தியாவில் கியா மோட்டார்ஸ் முதற்கட்டமாக மூன்று மாடல் கார்களை தயாரிக்கிறது. இவை அனைத்தும் பெருமாலும் இந்தியாவிலே தயாராகும்" என்று கூறியுள்ளார்.

Recommended Video - Watch Now!
Tata Nexon Review: Specs
ஹூண்டாய் கிரெட்டா காருக்கு போட்டியாக காய் நகர்த்தும் கியா!

கியா தயாரிக்கவுள்ள மூன்று கார்களில் ஒன்று மிட்-சைஸ் எஸ்.யூ.வி மாடல் காராக தயாராகவுள்ளது. இது ஹூண்டாயின் கிரெட்டா காருக்கு போட்டியாக இந்தியாவில் களமிறங்குகிறது.

ஹூண்டாய் கிரெட்டா காருக்கு போட்டியாக காய் நகர்த்தும் கியா!

இவை தவிர எஸ்.யூ.வி. செடான். ஹேட்ச்பேக் போன்ற மாடல்களிலும் கியா கார்களை தயாரிக்க தீவிரமாக ஆய்த்தமாகி வருகிறது.

ஹூண்டாய் கிரெட்டா காருக்கு போட்டியாக காய் நகர்த்தும் கியா!

கியா ஏற்கனவே தனக்கான வாடிக்கையாளர்களாக இளைஞர்களை தேர்ந்தெடுத்துள்ளது. அதனால் அதனுடைய ஒவ்வொரு தயாரிப்பும் இளைஞர்களை குறிவைத்து தான் இருக்கும்.

ஹூண்டாய் கிரெட்டா காருக்கு போட்டியாக காய் நகர்த்தும் கியா!

இந்தியாவில் தற்போது மிட்-சைஸிடு எஸ்.யூ.வி கார்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருப்பதை கியா அறிந்து வைத்திருக்கிறது.

ஹூண்டாய் கிரெட்டா காருக்கு போட்டியாக காய் நகர்த்தும் கியா!

இதை வைத்து விலை, செயல்திறன் மற்றும் வடிவமைப்பு போன்ற தேவைகளில் மிட்-சைஸிடு கார்களை கியா தயாரிக்கும்.

ஹூண்டாய் கிரெட்டா காருக்கு போட்டியாக காய் நகர்த்தும் கியா!

அந்நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் கொரியாவில் தற்போது இயங்கி வருகிறது. அங்கு இந்தியாவில் கார்கள் விற்பனை குறித்த ஆய்வு கியா செய்து முடித்துள்ளது.

ஹூண்டாய் கிரெட்டா காருக்கு போட்டியாக காய் நகர்த்தும் கியா!

இதன் அடிப்படையில் தான் கியாவின் இயக்கம் இந்தியா சந்தையை சார்ந்து இருக்கும். பெரும்பாலும் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் கியாவின் முதல் தயாரிப்பை நாம் பார்க்கலாம்.

ஹூண்டாய் கிரெட்டா காருக்கு போட்டியாக காய் நகர்த்தும் கியா!

பயணிகள், எஸ்யூவி மற்றும் செடான் மாடல் கார்கள் என்றில்லாமல், கியா உயர-ரக ப்ரீமியம் தரத்திலான கார்களையும் தயாரிக்கும் என்று தெரிகிறது.

ஹூண்டாய் கிரெட்டா காருக்கு போட்டியாக காய் நகர்த்தும் கியா!

இதனால் இந்தியாவில் சிறிய ரக கார் கம்பெனி என்று அறியப்படாமல், ஒரு பெரிய இமேஜ் உருவாகும் என கியா மோட்டார்ஸ் எண்ணுகிறது.

ஹூண்டாய் கிரெட்டா காருக்கு போட்டியாக காய் நகர்த்தும் கியா!

இந்தியாவில் 2019ல் கியா மோட்டார்ஸ்

விற்பனையில் கால்பதிக்கும். அப்போது ஹேட்ச்பேக் முதல் எஸ்.யூ.வி வரை அனைத்து மாடல் கார்களையும் அது விற்பனை செய்யும்.

ஹூண்டாய் கிரெட்டா காருக்கு போட்டியாக காய் நகர்த்தும் கியா!

காம்பேக்ட் செடான், ஹேட்ச்பேக் மற்றும் மிட்-சைஸிடு எஸ்யூவி என அனைத்து தர வாகனங்களையும் கியா தயாரிக்கவுள்ளது.

ஹூண்டாய் கிரெட்டா காருக்கு போட்டியாக காய் நகர்த்தும் கியா!

உற்பத்தி மற்றும் விற்பனையை தொடர்ந்து இந்தியாவில் தனக்கான டீலர்கள் குறித்த விவரங்களை, கியா மோட்டார்ஸ் 2019ல் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்... #கியா #kia
English summary
Read in Tamil: South Korean automaker Kia Motors will launch the Hyundai Creta rival in the country. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark