லம்போர்கினி ஹூராகான் சூப்பர் காரில் அசால்டு காட்டும் ’வொண்டர் வுமன்’... யார் இவர்..!!
லம்போர்கினி ஹூராகான் சூப்பர் காரில் அசால்டு காட்டும் ’வொண்டர் வுமன்’... யார் இவர்..!!
சூப்பர் கார்கள் என்றால் அது ஆண்களுக்கான வாகனம் என்றிருந்த விதியை மாற்றிக்காட்டி இருக்கிறார் துபாய்யை சேர்ந்த இளம்பெண் ஒருவர்.

அதிக செயல்திறன், வேகத்திறன் கொண்ட கார்களை ஆட்டோமொபைல் உலகம் 'சூப்பர் கார்' என்ற பெயரில் குறிப்பிடுகிறது.
இதற்கான பட்டியலில் ஃபெராரி கார்களுக்கு பிறகு உலகளவில் அடுத்த நிலையில் இருப்பது லம்போர்கினி மாடல் கார்கள் தான்.

தனித்துவமான வடிவமைப்புகள், திறம்பட்ட வடிவமைப்பு போன்றவற்றுடன், அதிக விலையும் சூப்பர் கார்களுக்கான ஆட்டோமொபைல் உலகில் உருவாக்கப்பட்டுள்ள தனிப்பட்ட அடையாளங்கள்.

செயல்திறன் மற்றும் வேகத்திறன் கொண்டதாலே என்னவோ, இந்த மாடல் கார்கள் எல்லாம் ஆண்களின் கனவுக்காராக இருந்து வருகிறது.
உலகளவில் பல ஆண்கள் தங்களுக்கான சூப்பர் கார்களை சொந்தமாகிக்கொள்ள படாதபாடு பட்டு வருகின்றனர். இதில் சில உலகளவிலான பிரபலங்களும் அடங்குவர்.

பொதுவாக பெண்கள், ஆண்களுக்கு இணையாக எல்லா துறைகளிலும் சவால் விடுவது போல, தற்போது சூப்பர் கார்களை சொந்தமாகிக் கொள்வதிலும் பெண்கள் ஆண்களுக்கு சவால் விடும் நிலை உருவாகியுள்ளது.

உலகளிலேயே லம்போர்கர்னி சூப்பர் கார்களை அதிகம் வைத்திருக்கும் நாடுகளுக்கான பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் முன்னிலை வகிக்கிறது.

இதில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் தங்களுக்கான பிரத்யேக லம்போர்கினி சூப்பர் கார்களை அதிகளவில் வைத்திருக்கின்றனர்.
இவ்வாறு துபாயயை சேர்ந்த இளம் பெண் ஒருவர், லம்போர்கினி ஹூராகான் காரை அசால்ட்டாக மாடிஃபிகேஷன் செய்து, அதை இணையத்தில் பதிவிட்டு வைரலாக்கியுள்ளார்.

இவரது லம்போர்கினி ஹூராகான் காரில் உலகின் பிரபலமான ரெவோஸ்போர்ட் என்ற வடிவமைப்பு நிறுவனம் மாடிஃபிகேஷன் பணிகளை மேற்கொண்டுள்ளது.

இந்த பிரத்யேக மாடிஃபிகேஷன் போது காரின் காற்றியக்கவியல் கூறுகளில் கார் இயங்கும் தொழில்நுட்பம், காரின் கதவு, மேற்கூரை, உள்புற கட்டமைப்பு போன்றவை கார்பன் ஃபைபருக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதனால் காரின் உண்மையான எடையில் இருந்து 100 கிலோ குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வடிவமைப்பின் காரணமாக காரை பெண்கள் இயக்குவதும் மிகவும் எளிதானதாக மாறுகிறது.

லம்போர்கினி ஹூராகான் காரில் உள்ள 5.2 லிட்டர் வி10 எஞ்சினுக்கு மேலும் செயல்திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் புகை எளிதாக வெளியேற பெரிய புகைப்போக்கி குழாயும் இணைக்கப்பட்டுள்ளது.

காரின் செயல்திறனை கூட்ட மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த கட்டமைப்புகளுடன், இந்த லம்போர்கினி ஹூராகான் காரை ஒரு பெண் தான் பயன்படுத்துகிறார் என்பதை காட்டுவதற்காக காரை அடர் பர்பிள் நிறம் கொண்டுரெவோஸ்போர்ட் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

துபாயில் வாழும் இந்த இளம்பெண்னை போன்று இந்தியாவில் ஷீத்தல் என்பவர் லம்போர்கினி ஹூராகான் காரை சொந்தமாக வைத்துள்ளார்.

கொல்கத்தாவில் ஞாயிற்று கிழமை நாட்களில் காலை வேலையில், தனது லம்போர்கினி ஹூராகான் காரில் நகரமே பார்க்கும்படி வலம் வருவது ஷீத்தலில் வாரந்தோறுமான வாடிக்கை.


Click it and Unblock the Notifications








