லேண்ட்வோவர் எவோக், டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவிகள் விலை அதிரடியாக குறைப்பு!

Written By:

ஜீப் ரேங்லர் எஸ்யூவி வருகையால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை போக்கிக் கொள்ளும் வகையில், எவோக் மற்றும் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவிகளின் விலையை தடாலடியாக குறைத்துள்ளது லேண்ட்ரோவர் இந்தியா நிறுவனம்.

லேண்ட்வோவர் எவோக், டிஸ்கவரி ஸ்போர்ட் விலை அதிரடியாக குறைப்பு!

லேண்ட்ரோவர் எவோக் எஸ்யூவியின் எஸ்இ பெட்ரோல் மாடலின் விலை ரூ.2 லட்சம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், இப்போது எவோக் எஸ்யூவி ரூ.51.2 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

லேண்ட்வோவர் எவோக், டிஸ்கவரி ஸ்போர்ட் விலை அதிரடியாக குறைப்பு!

டிஸ்கவரி ஸ்போர்ட் எச்எஸ்இ எஸ்யூவியின் விலை ரூ.7 லட்சம் குறைக்கப்பட்டு இருக்கிறது. இதனால், தற்போது டிஸ்கவரி எச்எஸ்இ மாடல் ரூ.49.5 லட்சம் விலையில் கிடைக்கிறது. இந்த இரண்டு மாடல்களுமே லேண்ட்ரோவர் நிறுவனத்தின் பட்ஜெட் சொகுசு எஸ்யூவி மாடல்கள். எனவே, இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன.

லேண்ட்வோவர் எவோக், டிஸ்கவரி ஸ்போர்ட் விலை அதிரடியாக குறைப்பு!

இந்த இரண்டு எஸ்யூவிகளிலும் 236 பிஎச்பி பவரையும், 340 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

லேண்ட்வோவர் எவோக், டிஸ்கவரி ஸ்போர்ட் விலை அதிரடியாக குறைப்பு!

இந்த இரண்டு எஸ்யூவிகளும் டீசல் மாடலிலும் கிடைக்கிறது. இந்த இரு மாடல்களிலும் இருக்கும 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் எஞ்சின் இருவிதமான சக்தியை வெளிப்படுத்தும் விதத்தில் கிடைக்கிறது. ஒன்று 148 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாகவும் மற்றொரு மாடல் 187 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாகவும் இருக்கிறது.

லேண்ட்வோவர் எவோக், டிஸ்கவரி ஸ்போர்ட் விலை அதிரடியாக குறைப்பு!

தற்போது இந்த விலை குறைப்பு இரண்டு மாடல்களையும் வாங்குவதற்கு சிறப்பான சந்தர்ப்பத்தை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தி தந்துள்ளது.

புதிய ஹோண்டா சிட்டி காரின் படங்கள்!

புதிய ஹோண்டா சிட்டி காரின் பிரத்யேக படங்களின் தொகுப்பை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
Land Rover India slashes prices of petrol variants of the Evoque and Discovery Sport. The move seems to be a direct response to the new Jeep Wrangler petrol.
Story first published: Friday, February 17, 2017, 14:46 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos