12 பயணிகளுடன் சென்ற தானியங்கி வேன் லாரி உடன் நேருக்கு நேர் மோதல்....!! (வீடியோ)

Written By:

நுண்ணறிவு திறன் கொண்டு இயங்கும் தொழில்நுட்ப சாதனங்களால் மனித வாழ்க்கை ஸ்தம்பிக்கும் என்றார் எலான் மஸ்க்.

சமீபத்தில் இவர் கூறியது போலவே அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பகுதியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

சோதனையின் போது விபத்திற்குள்ளான தானியங்கி வேன்..!!

நுண்ணறிவு திறனில்லை என்றாலும், தானியங்கி முறையால் இயங்கும் வேன் ஒரு விபத்தில் சிக்கி ஆட்டோ உலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

சோதனையின் போது விபத்திற்குள்ளான தானியங்கி வேன்..!!

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கார் உள்ளிட்ட வாகனங்கள் பலவற்றை பல்வேறு நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. அதற்குரிய செய்திகளை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

சோதனையின் போது விபத்திற்குள்ளான தானியங்கி வேன்..!!

எப்போது வேண்டுமானாலும் இவை பயன்பாட்டிற்கு வரக்கூடிய நிலையில் தான் உள்ளன. அதற்கான சோதனை பெருமளவில் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன.

சோதனையின் போது விபத்திற்குள்ளான தானியங்கி வேன்..!!

அந்தந்த மாகாணங்களில் இருக்கும் ஊர்களில் தானியங்கி வாகனங்கள் சோதனையில் இறங்க அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

சோதனையின் போது விபத்திற்குள்ளான தானியங்கி வேன்..!!

இதன்படி லாஸ்வேகஸின் பரபரப்பான சாலை ஒன்றில் 12 பயணிகளுடன் சென்றுக்கொண்டு இருந்த தானியங்கி வேன் விபத்தில் சிக்கியுள்ளது.

Trending On Drivespark:

ராயல் என்ஃபீல்டு பைக்கில் பெரிய சைலன்சர் இருந்தால் ஒரே போடு..!! கத்தி கம்புடன் காத்திருக்கும் போலீசார்

தண்ணீரில் ஓடும் மோட்டார்சைக்கிளை உருவாக்கிய 10ம் வகுப்பு மாணவன்!

பறக்கும் கால்டாக்ஸி கட்டுமானத்திற்காக உபர் நிறுவனத்துடன் கைக்கோர்க்கும் நாசா..!!

சோதனையின் போது விபத்திற்குள்ளான தானியங்கி வேன்..!!

சோதனை முறை ஓட்டத்தில் இந்த விபத்து நடந்திருப்பது ஆட்டோ உலகையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

விபத்தில் சிக்கிய வேன் ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த நவ்யா என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.

Recommended Video - Watch Now!
[Tamil] Tata Tiago XTA AMT Variant Launched In India - DriveSpark
சோதனையின் போது விபத்திற்குள்ளான தானியங்கி வேன்..!!

சோதனை தொடங்கி ஒரு மணி நேரமாக சரியாக இயங்கி வந்த இந்த பேருந்து, திடீரென சாலையில் வந்துக்கொண்டு இருந்த லாரியின் மீது மோதிவிட்டது.

சோதனையின் போது விபத்திற்குள்ளான தானியங்கி வேன்..!!

இதனால் வேனின் பக்கவாட்டில் பெரிய பாதிப்பு உள்ளது. குறைவான வேகத்தில் வேன் லாரி மீது மோதியதால் பெரியளவில் சேதம் மற்றும் பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை.

சோதனையின் போது விபத்திற்குள்ளான தானியங்கி வேன்..!!

தானியங்கி வேன் விபத்து பற்றி பேசிய நவ்யா நிறுவன அதிகாரிகள், லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் மீதுதான் தவறு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

சோதனையின் போது விபத்திற்குள்ளான தானியங்கி வேன்..!!

சோதனை தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே வேன் விபத்தில் சிக்கி இருப்பது தானியங்கி வாகன தொழில்நுட்பத்தை பின்னிடைவை அடைய செய்துள்ளதாக சில நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சோதனையின் போது விபத்திற்குள்ளான தானியங்கி வேன்..!!

12 பயணிகள் வரை பயணிக்கக்கூடிய திறன் பெற்ற இந்த வேன், மணிக்கு 45 கி.மீ வேகத்தில் செல்லகூடியது.

ஆனால் விபத்து நடந்த நேரத்தில் இது 25 கி.மீ வேகத்தில் தான் சாலைகளில் இயக்கப்பட்டு உள்ளது.

சோதனையின் போது விபத்திற்குள்ளான தானியங்கி வேன்..!!

நவ்யா நிறுவனத்தின் தானியங்கி வேன் தொழில்நுட்பத்தை போலவே, கூகுள் நிறுவனமும் தானியங்கி வாடகை கார்களை இயக்க திட்டமிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Read in Tamil: Las Vegas Self Driving Shuttles Crash Accident on its First Day trial. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark