இந்தியாவில் ரூ. 53.18 லட்சம் ஆரம்ப விலையில் புதிய என்.எக்ஸ் 300 ஹெச் காரை அறிமுகப்படுத்திய லெக்சஸ்!
இந்தியாவில் ரூ. 53.18 லட்சம் ஆரம்ப விலையில் புதிய என்.எக்ஸ் 300 ஹெச் காரை அறிமுகப்படுத்திய லெக்சஸ்..!!
லெக்சஸ் இந்தியா நிறுவனம் தனது புதிய என்.எக்ஸ் 300ஹெச் எஸ்யூவி காரை ரூ. 53.18 லட்சம் (எக்ஸ் - ஷோரூம் இந்தியா) ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 17ம் தேதி, லெக்சஸ் என்.எக்ஸ் 300 ஹெச் கார் இந்தியாவில் வெளியிடப்பட்டது. ஆடம்பர வசீகரத்துடன் காட்சியளிக்கும் இந்த காரின் அடிப்படை வேரியன்ட் மாடல் ரூ. 53.18 லட்சம் விலை பெறுகிறது.

பிறகு லெக்சஸ் என்.எக்ஸ் 300 ஹெச் காரின் டாப் வேரியன்ட் எஃப்-ஸ்போர்ட் டிரிம் மாடல் ரூ. 55.58 லட்சம் விலை பெறுகிறது.
இங்கே குறிப்பிடப்பட்டுள்ள விலை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் இந்தியாவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2.5 லிட்டர் 4 சிலின்டர் நேச்சுரலி ஏஸ்பிரேடட் பெற்றுள்ள இதன் எஞ்சின் மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. ஹைஃபிர்ட் பவர்ட்ரையன் மூலம் 194 பிஎச்பி பவர் மற்றும் 210 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

துவக்க நிலையில் இருந்து 100 கி.மீ வேகத்தை எட்டிபிடிக்கும் திறன் பெற்ற லெக்சஸ் என்.எக்ஸ் 300 ஹெச் கார் 4 வீல் டிரைவிங் சிஸ்டத்துடன், இ-சிவிடி கியர்பாக்ஸ் தேவையை பெற்றுள்ளது.

காரின் முன்பகுதியில் ஸ்பிளின்டில் க்ரில், பிரொஜக்டர் முகப்பு விளக்குகள், எல்.இ.டி பகல்நேர விளக்குகள், ஃபாக் லேம்ஸ் மற்றும் எல்-வடிவிலான ஹவுஸிங் பம்பர் இடம்பெற்றுள்ளன.
Recommended Video


லெக்சஸ் என்.எக்ஸ் 300 ஹெச் காரின் பக்கவாட்டில், வீல் ஆர்க்ஸ் உள்ளன. மேலும் ரியர் பகுதியில் டெயில் லைட்ஸ் மற்றும் ரேக்கிடு விண்டுஸ்கீரின் இடம்பெற்றுள்ளன.

காரின் உட்புறத்தில், 360 டிகிரி பனோரமா முறையில் சுற்றி பார்வையிடும் மானிட்டர் உள்ளது. இவற்றுடன் ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே, 10.3 இஞ்ச் ஸ்பிளிட்-ஸ்கிரீன் மல்டிமீடியா டிஸ்பிளே, 14 ஸ்பீக்கர் ஹை-ஃபை மார் லெவின்சஸ் சிஸ்டம் ஆகியவை குறிப்பிடும்படியாக உள்ளன.

8 ஏர்பேகுகள், ஏபிஎஸ், வாகனம் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், உராய்வு கட்டுப்பாட்டு அமைப்பு, ரியர்வியூ கேமரா, மன்சாரத்தால் இயங்கும் பார்க்கிங் பிரேக் மற்றும் முனை விளக்குகள் ஆகியவை லெக்சஸ் என்.எக்ஸ் 300 ஹெச் காருக்கான பாதுகாப்பு அம்சங்களாக உள்ளன.

இந்தியாவில் லெக்சஸ் தயாரித்து விற்பனை செய்து வரும் கார்களில் புதிய என்.எக்ஸ் 300 ஹெச் கார் பலதரப்பு வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த தேர்வாக இருக்கும்.

தொழில்நுட்ப அம்சங்கள், பாதுகாப்பு கட்டமைப்புகள், மற்றும் தோற்றப்பொலிவு என லெக்சஸ் என்.எக்ஸ் 300 ஹெச் காரில் இடம்பெற்றுள்ள அனைத்தும் இதை ஒரு முழுமையான காராக உணரச்செய்கிறது.


Click it and Unblock the Notifications








