க்ராஷ் டெஸ்ட்டில் பூஜ்யம் வாங்கிய ரெனோ டஸ்ட்டர்... !!

Written By:

குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய க்ராஷ் டெஸ்ட் சோதனையில் ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி பூஜ்ய பாதுகாப்பு தர மதிப்பீட்டை பெற்று ஏமாற்றம் தந்துள்ளது.

இது ஒருபுறம் இருந்தாலும், இந்திய டஸ்ட்டர் மாடலின் ஏர்பேக் அளவில் ரெனோ நிறுவனம் செய்யும் சில்லறைத்தனமும், இந்தியர்களின் உயிருடன் விளையாடும் போக்கும், இந்த க்ராஷ் டெஸ்ட் மூலமாக அம்பலமாகி உள்ளது.

 க்ராஷ் டெஸ்ட்டில் பூஜ்யம் வாங்கிய ரெனோ டஸ்ட்டர்... !!

கடந்த 2014ம் ஆண்டு முதல் இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களை க்ராஷ் டெஸ்ட் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தி வருகிறது குளோபல் என்சிஏபி அமைப்பு. இதில், பல முன்னணி கார் மாடல்கள் மிக மோசமான தர மதிப்பீட்டை பெற்று வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்தன.

 க்ராஷ் டெஸ்ட்டில் பூஜ்யம் வாங்கிய ரெனோ டஸ்ட்டர்... !!

டட்சன் கார் மாடல்களின் விற்பனையை நிறுத்துமாறும் நிசான்- டட்சன் நிறுவனத்திற்கு குளோபல் என்சிஏபி கடிதம் எழுதியது. இந்த நிலையில், மீண்டும் இந்திய கார்களை க்ராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தி வருகிறது குளோபல் என்சிஏபி அமைப்பு.

 க்ராஷ் டெஸ்ட்டில் பூஜ்யம் வாங்கிய ரெனோ டஸ்ட்டர்... !!

சமீபத்தில் செவர்லே என்ஜாய் மற்றும் ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர் கார்களின் க்ராஷ் டெஸ்ட் சோதனை முடிவுகள் வெளியிடப்பட்டன. இதைத்தொடர்ந்து, தற்போது ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் க்ராஷ் டெஸ்ட் சோதனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

 க்ராஷ் டெஸ்ட்டில் பூஜ்யம் வாங்கிய ரெனோ டஸ்ட்டர்... !!

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் ஏர்பேக்குகள் இல்லாத பேஸ் மாடல் க்ராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மணிக்கு 64 கிமீ வேகத்தில் காரை தடுப்பின் மீது மோதி ஆய்வுகள் செய்யப்பட்டன.

 க்ராஷ் டெஸ்ட்டில் பூஜ்யம் வாங்கிய ரெனோ டஸ்ட்டர்... !!

இதில், பெரியவர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களில் டஸ்ட்டர் எஸ்யூவியின் பேஸ் மாடல் பூஜ்ய பாதுகாப்பு தர மதிப்பீட்டை பெற்றது. சிறியவர்களுக்கான பாதுகாப்பு தர மதிப்பீட்டில் 5க்கு 2 புள்ளிகளை மட்டுமே பெற்றது. இது வாடிக்கையாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

 க்ராஷ் டெஸ்ட்டில் பூஜ்யம் வாங்கிய ரெனோ டஸ்ட்டர்... !!

மேலும், ஓட்டுனருக்கான ஏர்பேக் பொருத்தப்பட்ட டஸ்ட்டர் எஸ்யூவி மாடலும் க்ராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில், 5க்கு 3 என்ற புள்ளிகளை டஸ்ட்டர் ஏர்பேக் மாடல் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆறுதல் தரும் விஷயம்தான் என்றாலும், அதிகபட்சமான 5க்கு 3 மட்டுமே பெற்றிருப்பதும் ஏமாற்றம்தான்.

 க்ராஷ் டெஸ்ட்டில் பூஜ்யம் வாங்கிய ரெனோ டஸ்ட்டர்... !!

இதில், வேடிக்கையான விஷயம் என்னவெனில், கொலம்பியா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளில் விற்பனையாகும் ஏர்பேக் பொருத்தப்பட்ட ரெனோ டஸ்ட்டர் மாடல் 5க்கு 4 என்ற தர மதிப்பீட்டை பெற்றது.

 க்ராஷ் டெஸ்ட்டில் பூஜ்யம் வாங்கிய ரெனோ டஸ்ட்டர்... !!

ஆனால், இந்தியாவில் விற்பனையாகும் ஏர்பேக் பொருத்தப்பட்ட டஸ்ட்டர் எஸ்யூவி 3 தர புள்ளிகளை மட்டுமே பெற்றிருப்பதை ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கான காரணம் இன்னும் விந்தையையும், வேதனையையும் இந்தியர்களுக்கு கொடுக்கும்.

 க்ராஷ் டெஸ்ட்டில் பூஜ்யம் வாங்கிய ரெனோ டஸ்ட்டர்... !!

ஆம். லத்தீன் அமெரிக்க நாடுகளில் விற்பனையாகும் டஸ்ட்டர் எஸ்யூவியில் பெரிய அளவிலான ஏர்பேக்குகள் பொருத்தப்படுகின்றனவாம். ஆனால், இந்தியாவில் விற்பனையாகும் ஏர்பேக்குகள் அளவில் சிறியவை என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 க்ராஷ் டெஸ்ட்டில் பூஜ்யம் வாங்கிய ரெனோ டஸ்ட்டர்... !!

மேலும், இந்தியாவில் விற்பனையாகும் டஸ்ட்டர் மாடலில் இருக்கும் ஏர்பேக் சரியான அளவுடையது இல்லையாம். அதாவது, க்ராஷ் டெஸ்ட்டின்போது காருக்குள் வைக்கப்பட்டு இருந்த மனித பொம்மையின் முகம் ஏர்பேக்கின் மத்திய பகுதியில் மோத வேண்டும். ஆனால், அது சரியான அளவு இல்லாததால், ஓட்டுனருக்கு அதிக காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது பொம்மை மூலமாக தெரிய வந்துள்ளது.

 க்ராஷ் டெஸ்ட்டில் பூஜ்யம் வாங்கிய ரெனோ டஸ்ட்டர்... !!

அதேநேரத்தில், லத்தீன் அமெரிக்க நாடுகளில் விற்பனையாகும் டஸ்ட்டர் எஸ்யூவியில் இருப்பது போல சரியான அளவுடைய ஏர்பேக்குகள் இருந்தால், ஓட்டுபவருக்கு அதிக காயங்கள் ஏற்படுவது நிச்சயம் தவிர்க்க முடியுமாம். அதனால்தான், லத்தீன் அமெரிக்க டஸ்ட்டர் எஸ்யூவி 4 தர புள்ளிகளை பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

 க்ராஷ் டெஸ்ட்டில் பூஜ்யம் வாங்கிய ரெனோ டஸ்ட்டர்... !!

ஓட்டுனரின் தலை ஸ்டீயரிங் வீலில் மோதுவதை தவிர்க்கவே இந்த ஏர்பேக் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த விஷயத்தில் நம் நாட்டு அரசியல்வாதிகளை மிஞ்சும் அளவுக்கு சூட்சுமத்தை ஏர்பேக்கில் வைத்துள்ளது ரெனோ கார் நிறுவனம்.

 க்ராஷ் டெஸ்ட்டில் பூஜ்யம் வாங்கிய ரெனோ டஸ்ட்டர்... !!

ஏற்கனவே, க்ராஷ் டெஸ்ட்டிர் ரெனோ க்விட் காரும் பூஜ்யம் பெற்றது. ஓட்டுனருக்கான ஏர்பேக் பொருத்தப்பட்ட க்விட் கார் வெறும் ஒரு புள்ளியை மட்டுமே பெற்றது நினைவிருக்கலாம். சர்வதேச தரத்திலான பாதுகாப்பு அம்சங்களுடன் கார்களை விற்பனை செய்ய கார் நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், ரெனோ நிறுவனம் இந்த விஷயத்தில் பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

ரெனோ டஸ்ட்டர் க்ராஷ் டெஸ்ட் வீடியோவை பார்க்கலாம்.

English summary
Made In India Reno Duster Gets Zero Stars in crash test.
Story first published: Wednesday, May 10, 2017, 16:06 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark