பல்வேறு புதிய நோக்கங்களுடன் 3வது முறையாக கூட்டணியில் ஃபோர்டு & மஹிந்திரா..!!

Written By:

சர்வதேச நாடுகளில் வியாபார வட்டத்தை விரிவாக்கும் நோக்கில் அமெரிக்காவின் ஃபோர்டு மற்றும் இந்தியாவின் மஹிந்திரா நிறுவனங்கள் 3 ஆண்டு கூட்டணியில் நுழைந்துள்ளன.

பல்வேறு புதிய நோக்கங்களுடன் 3வது முறையாக ஃபோர்டு & மஹிந்திரா கூட்டணி..!!

இந்த கூட்டணியால் உருவாக்கப்படும் வாகனங்கள் அனைத்தும் இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றில் விற்பனைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

பல்வேறு புதிய நோக்கங்களுடன் 3வது முறையாக ஃபோர்டு & மஹிந்திரா கூட்டணி..!!

ஃபோர்டு மற்றும் மஹிந்திராவின் கூட்டணியால் இரு நிறுவனங்களுக்கும் மேலும் சில சாதகங்கள் உள்ளன. குறிப்பாக சர்வதேச நாடுகளில் ஃபோர்டு நிறுவனத்தின் பங்களிப்பை மஹிந்திரா பயன்படுத்திக்கொள்ளும்.

பல்வேறு புதிய நோக்கங்களுடன் 3வது முறையாக ஃபோர்டு & மஹிந்திரா கூட்டணி..!!

அதேபோல மஹிந்திரா இந்தியாவில் பெற்றுள்ள பெயரை வைத்து, ஃபோர்டு தனது சேவைகளை விரிவுப்படுத்தும். இதுதான் இந்த கூட்டணியின் நோக்கம்.

பல்வேறு புதிய நோக்கங்களுடன் 3வது முறையாக ஃபோர்டு & மஹிந்திரா கூட்டணி..!!

இரு நோக்கங்களுக்கு ஏற்றவாறு இந்த இரு நிறுவனங்களும் தங்களுக்கான ஒப்பந்தத்தை உருவாக்கும்.

பிறகு ஃபோர்டின் வளர்ச்சிக்காக மஹிந்திராவும், மஹிந்திராவின் வளர்ச்சிக்காகவும் ஃபோர்டும் இணைந்து செயல்படும்.

பல்வேறு புதிய நோக்கங்களுடன் 3வது முறையாக ஃபோர்டு & மஹிந்திரா கூட்டணி..!!

ஒப்பந்தத்தை மேலும் மேம்படுத்த விரும்பினால், கூட்டணி முடியும் தருவாயில் கூடுதலாக சில வரையறைகளை உருவாக்கி ஃபோர்டு, மஹிந்தரா தங்களது ஒப்பந்தத்தில் சேர்க்கலாம்.

பல்வேறு புதிய நோக்கங்களுடன் 3வது முறையாக ஃபோர்டு & மஹிந்திரா கூட்டணி..!!

கூட்டணியின் வளர்ச்சி குறித்து பேசிய ஃபோர்டு நிர்வாக துணை இயக்குநர் மற்றும் சர்வதேச சந்தைக்கான தலைவருமான ஜிம் ஃபார்லே,

"ஃபோர்டு, மஹிந்திரா கூட்டணி வாகனங்களுக்கான உலகின் 5வது பெரிய சந்தையை உருவாக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக யுட்டிலிட்டி சந்தையில் மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது என்றே சொல்லலாம்".

பல்வேறு புதிய நோக்கங்களுடன் 3வது முறையாக ஃபோர்டு & மஹிந்திரா கூட்டணி..!!

மேலும், இரு நிறுவனங்கள் இணைந்து மொபிலிட்டி மற்றும் பேட்டரி பொருத்தப்பட்ட மின்சார வாகனங்களையும் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக ஜிம் ஃபார்லே தெரிவித்தார்.

பல்வேறு புதிய நோக்கங்களுடன் 3வது முறையாக ஃபோர்டு & மஹிந்திரா கூட்டணி..!!

அவற்றுடன், புதிய மாடல் உருவாக்குவதற்கு, சர்வதேச அளவில் மஹிந்திராவின் சேவையை அதிகரிக்க, மொபிலிட்டி புரோகிராம்,

பல்வேறு புதிய நோக்கங்களுடன் 3வது முறையாக ஃபோர்டு & மஹிந்திரா கூட்டணி..!!

வாகனத்தின் புதிய கனெக்டேட் நுட்பம், வணிகரீதியாக மற்றும் மேம்படுத்தப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்துகொள்வது உட்பட இதுபோன்ற பல்வேறு நோக்கங்கள் இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.

பல்வேறு புதிய நோக்கங்களுடன் 3வது முறையாக ஃபோர்டு & மஹிந்திரா கூட்டணி..!!

ஏற்கனவே ஃபோர்டு மற்றும் மஹிந்திரா பல ஆண்டுகளுக்கு முன்னர் கூட்டணியில் இருந்தன. அது 2005ம் ஆண்டோடு முடிவிற்கு வந்தது.

இதற்கு முன்னதாக ஃபோர்டு இந்தியாவில் நுழைந்த 1926 முதல் 1954ம் காலகட்டத்தின் போது முதல் முதலாக ஃபோர்டு, மஹிந்திரா கூட்டணி அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Read in Tamil: Mahindra and Ford Enter Alliance for Reaching Global Markets. Click for Details...
Story first published: Tuesday, September 19, 2017, 11:06 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark