ஜிஎஸ்டி வரி எதிரொலி: மஹிந்திரா, மாருதி கார்களுக்கு பெரும் தள்ளுபடி!

ஜிஎஸ்டி வரி எதிரொலியால் கார் விற்பனையை ஊக்குவிக்க கார் நிறுவனங்கள் தள்ளுபடி சலுகைகளை வழங்குகின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

வரும் ஜூலை 1 முதல் சரக்கு மற்றும் சேவை வரி [ஜிஎஸ்டி] விதிப்பு முறை அமலுக்கு கொண்டு வரப்பட உள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால் கார் விலையில் மாற்றம் ஏற்படும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இதனால், வாடிக்கையாளர்கள் கார் வாங்கும் திட்டத்தை ஒத்திப்போட்டுள்ளனர். இதன் எதிரொலியால் கார் விற்பனையில் சற்று மந்த நிலை காணப்படுகிறது. எனவே, கார் விற்பனையை ஊக்குவிக்கும் விதத்தில், இருப்பில் இருக்கும் கார்களுக்கு தள்ளுபடி சலுகைகளை கார் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

 மஹிந்திரா, மாருதி கார்களுக்கு பெரும் தள்ளுபடி!

மாருதி, மஹிந்திரா போன்ற முன்னணி கார் நிறுவனங்களின் டீலர்களில் கவர்ச்சிகரமான தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஜிஎஸ்டி வரி குறித்து ஹூண்டாய் நிறுவனம் சில சர்ப்ரைஸ் திட்டத்தையும் வைத்துள்ளது. அதன் விபரங்களை தொடர்ந்து விரிவாக காணலாம்.

மஹிந்திரா, மாருதி, ஹூண்டாய் கார்களுக்கு பெரும் தள்ளுபடி!

மஹிந்திரா நிறுவனம் பெருமளவு தள்ளுபடியை இப்போது வழங்குகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் டபிள்யூ4 வேரியண்ட்டுக்கு ரூ.49,000 வரையில் பெறலாம்.

டபிள்யூ6 மற்றும் டபிள்யூ8 வேரியண்ட்டுகளுக்கு ரூ.73,000 வரையிலும், டபிள்யூ10 வேரியண்ட்டுக்கு ரூ.84,000 வரையிலும் தள்ளுபடி பெறலாம்.

மஹிந்திரா, மாருதி, ஹூண்டாய் கார்களுக்கு பெரும் தள்ளுபடி!

மஹிந்திரா கேயூவி100 மினி எஸ்யூவிக்கும் தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகின்றன. கே2 மற்றும் கே4 டீசல் வேரியண்ட்டுகளுக்கு ரூ.34,000 வரையில் தள்ளுபடி பெறலாம்.

கே4, கே6 பெட்ரோல் வேரியண்ட்டுகளுக்கு ரூ.34,600 வரையிலும், கே8 வேரியண்ட்டுக்கு ரூ.43,000 வரையிலும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மஹிந்திரா, மாருதி, ஹூண்டாய் கார்களுக்கு பெரும் தள்ளுபடி!

மாருதி நிறுவனமும் தள்ளுபடி சலுகைகளை வழங்கி வருகிறது. மாருதி இக்னிஸ் காருக்கு ரூ.3,400 வரையில் தள்ளுபடி தருவதாக தெரிவித்துள்ளது.

இதுதவிர, பிற மாருதி கார் மாடல்களுக்கும் டீலர் அளவில் தள்ளுபடி வழங்கப்பட்டு இருப்பில் தேங்கும் கார்களை விற்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.

மஹிந்திரா, மாருதி, ஹூண்டாய் கார்களுக்கு பெரும் தள்ளுபடி!

மாருதி சியாஸ் காருக்கு ரூ.10,000 வரையிலும், மாருதி எஸ் க்ராஸ் காருக்கு ரூ.20,000 வரையிலும் இப்போது தள்ளுபடி பெறும் வாய்ப்புள்ளது.

மஹிந்திரா, மாருதி, ஹூண்டாய் கார்களுக்கு பெரும் தள்ளுபடி!

ஹூண்டாய் நிறுவனம் தள்ளுபடி சலுகைகள் எதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதேநேரத்தில், இப்போது முன்பதிவு செய்து டெலிவிரி பெறும் வாடிக்கையாளர்களுக்கு ஜிஎஸ்டி அமலுக்கு வந்தவுடன் ஏதேனும் விலை குறைந்தால், அதனை ரொக்கமாக திருப்பி தருவதாக உறுதி தெரிவிக்கிறது.

மஹிந்திரா, மாருதி, ஹூண்டாய் கார்களுக்கு பெரும் தள்ளுபடி!

ஏனெனில், சிறிய கார்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால் அதிக பயன் இருக்காது என்று தெரிகிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலுக்கு வரும்போது எஸ்யூவி வகை கார்கள் மற்றும் சொகுசு கார்கள் விலை கணிசமாக குறையும் வாய்ப்பு இருக்கிறது.

மஹிந்திரா, மாருதி, ஹூண்டாய் கார்களுக்கு பெரும் தள்ளுபடி!

தற்போது சொகுசு கார்கள் மீது கிட்டத்தட்ட 55 சதவீதம் அளவுக்கு வரி விதிக்கப்படுகிறது. ஆனால், ஜிஎஸ்டி வரி விதிமுறையால் சொகுசு கார்கள் மீதான வரி 43 சதவீதமாக குறையும். எனவே, அதிக பயனடையப்போவது சொகுசு கார் வாங்க திட்டமிட்டிருக்கும் பணக்கார வாடிக்கையாளர்கள்தான்.

மஹிந்திரா, மாருதி, ஹூண்டாய் கார்களுக்கு பெரும் தள்ளுபடி!

அனைத்து வகை கார்களுக்கும் 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளது. இதுதவிர, சிறிய வகை பெட்ரோல் கார்களுக்கு ஒரு சதவீதம் கூடுதல் வரியும், சிறிய வகை டீசல் கார்களுக்கு 3 சதவீத ஜிஎஸ்டி வரியும், பெரிய வகை மற்றும் சொகுசு கார்களுக்கு 15 சதவீதம் ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Most Read Articles
English summary
The Goods and Service Tax (GST) bill has brought the prices of some cars down, and here we have the best-selling four-wheeler manufacturers of India giving huge discounts on their cars.
Story first published: Thursday, June 8, 2017, 11:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X