மஹிந்திராவின் புதிய ஸ்கார்பியோ அட்வென்ச்சர் கார் விற்பனைக்கு அறிமுகம்

மஹிந்திராவின் புதிய ஸ்கார்பியோ அட்வென்ச்சர் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனுடைய திறன், மைலேஜ் தொடர்பான இன்ன விவரங்களை பார்க்கலாம்.

By Azhagar

மஹிந்திரா நிறுவனம் முன்னரே அறிவிந்திருந்த படி மேம்படுத்தப்பட்ட ஸ்கார்பியோ அட்வென்ச்சர் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ள இந்த காரை வாங்க வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

மஹிந்திரா ஸ்கார்பியோ அட்வென்ச்சர் கார் விற்பனைக்கு அறிமுகம்

ஸ்கார்பியோ அட்வென்ச்சர் இரண்டு விதமான தொழில்நுட்பத்தில் இயங்கும் மாடல்களில் உருவாக்கப்பட்டுள்ளது. காரின் இரண்டு சக்கரங்களை கொண்டு ஓட்டக்கூடிய டூ-வீல் டிரைவ் தொழில்நுட்பத்தில் இயங்கும் கார் ரூ. 13.10 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மஹிந்திரா ஸ்கார்பியோ அட்வென்ச்சர் கார் விற்பனைக்கு அறிமுகம்

அதேபோல் நான்கு சக்கரங்களில் இயக்கக்கூடிய ஃபோர் வீல் தொழில்நுட்பம் கொண்ட ஸ்கார்பியோ அட்வென்ச்சர் மாடல் ரூ.14.20 லட்சம் மதிப்புக்கொண்டது. இது சாதரண ஸ்கார்பியோ காரை விட ரூ.40,000 அதிகமாகும்.

மஹிந்திரா ஸ்கார்பியோ அட்வென்ச்சர் கார் விற்பனைக்கு அறிமுகம்

2.2 டர்போ சார்ஜிடு கொண்ட ஹாக் டீசல் எஞ்சின் இதில் உள்ளது. இதன் மூலம் 120 பி.எச்.பி பவர் மற்றும் 280 என்.எம் டார்க் திறன் கிடைக்கும். மேலும் 5-ஸ்பீடு மேனுவலாக இயங்கும் கியர் பாக்ஸ் மஹிந்திராவின் புதிய ஸ்கார்பியோ அட்வென்ச்சர் காரில் பொருத்தப்பட்டுள்ளது.

மஹிந்திரா ஸ்கார்பியோ அட்வென்ச்சர் கார் விற்பனைக்கு அறிமுகம்

குறைந்த எண்ணிக்கையில் தயாரிக்கப்படவுள்ள ஸ்கார்பியோ அட்வென்ச்சர் காரில் தோற்றத்திற்காக, இரண்டு விதமான நிறங்கள் எல்லா மாடல்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், காரின் முன் மற்றும் பின் பகுதிகளில் ஸ்போர்ட்ஸ் கார்களில் இருப்பதுபோன்ற உறைப்பூச்சு (body cladding) வடிவமைக்கப்பட்டுள்ளது. இது காருக்கு மிரட்டலான தோற்றத்தை தருகிறது.

மஹிந்திரா ஸ்கார்பியோ அட்வென்ச்சர் கார் விற்பனைக்கு அறிமுகம்

புகைபரவிய தோற்றத்தை தரும் பின் விளக்குகள், பின்புற வெளியை காணக்கூடிய காரின் கண்ணாடிகளில் குறியீடுகள் (ORVM), பெரிய பிரேக்குகள் மற்றும் 17 அங்குலத்தில் அலாய் வீல்கள் என சில குறிப்பிடும்படியான பாதுகாப்பு அம்சங்கள் மஹிந்திராவின் புதிய ஸ்கார்பியோ அட்வென்ச்சர் காரில் உள்ளன.

மஹிந்திரா ஸ்கார்பியோ அட்வென்ச்சர் கார் விற்பனைக்கு அறிமுகம்

திறன் மற்றும் தோற்றத்தை தவிர அளவு, இருக்கை வசதிகள் போன்ற அனைத்திலும் சாதரண ஸ்கார்பியோ காரின் வடிவமைப்பையே இந்த புதிய மாடல் காரும் கொண்டுள்ளன.

மஹிந்திரா ஸ்கார்பியோ அட்வென்ச்சர் கார் விற்பனைக்கு அறிமுகம்

வரவேற்பிற்குரிய முக்கிய தொழில்நுட்பங்களை கொண்டுயிருந்தாலும், ஸ்கார்பியோ அட்வென்ச்சர் குறைந்த எண்ணிக்கையில் தயாரிக்கப்படவுள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 5, 2017, 11:09 [IST]
English summary
2017 Mahindra Scorpio Adventure launched in India. The Mahindra Scorpio Adventure will be a limited edition vehicle.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+