மேட்டுப்பாளையத்தில் முக்காடு போட்டு சுற்றிய மஹிந்திரா டியூவி 500!

மேட்டுப்பாளையம் அருகே சாலை சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருந்த புதிய மஹிந்திரா எஸ்யூவியின் ஸ்பை படங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

மேட்டுப்பாளையம் அருகே சோதனை செய்யப்பட்டு கொண்டிருந்த மஹிந்திரா டியூவி 500 மாடலை படம் பிடித்து அனுப்பி இருக்கிறார் எமது வாசகர் ஜிதேஷ். அந்த படங்கள், கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

 மேட்டுப்பாளையத்தில் முக்காடு போட்டு சுற்றிய மஹிந்திரா டியூவி 500!

மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவி ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த எஸ்யூவி தற்போது 5 சீட்டர் மாடலிலும், இரண்டு ஜம்ப் இருக்கைகள் பொருத்திக் கொள்வதற்கான 7 சீட்டர் மாடலிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 மேட்டுப்பாளையத்தில் முக்காடு போட்டு சுற்றிய மஹிந்திரா டியூவி 500!

இந்த நிலையில். இதன் அடிப்படையில் ஒரு முழுமையான 7 சீட்டர் மாடலை மஹிந்திரா உருவாக்கி இருக்கிறது. மஹிந்திரா டியூவி 500 என்ற பெயரில் எதிர்பார்க்கப்படும் இந்த எஸ்யூவி தற்போது தீவிர சாலை சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது.

 மேட்டுப்பாளையத்தில் முக்காடு போட்டு சுற்றிய மஹிந்திரா டியூவி 500!

இந்த நிலையில், மேட்டுப்பாளையத்தில் வைத்து சோதனை செய்யப்பட்ட மஹிந்திரா டியூவி 500 எஸ்யூவியை எமது வாசகர் ஜிதேஷ் படம் பிடித்துள்ளார். அவர் அனுப்பிய படங்களில் இது டியூவி 300 எஸ்யூவியின் நீட்டிக்கப்பட்ட வீல் பேஸ் கொண்ட மாடல் என்பது புலனாகிறது.

 மேட்டுப்பாளையத்தில் முக்காடு போட்டு சுற்றிய மஹிந்திரா டியூவி 500!

மேலும், இந்த புதிய எஸ்யூவி 7 சீட்டர் அல்லது 8 சீட்டர் மாடலாக இருக்கும். கடைசியில் கொடுக்கப்படும் மூன்றாவது வரிசை இருக்கை முன்னோக்கியதாக இருக்கும் என்றும் கருதபப்படுகிறது. இதனால், ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் எம்பிவி, எஸ்யூவி விரும்புவோரின் தேர்வில் இந்த புதிய மாடலும் இடம்பெறும் வாய்ப்பு இருக்கிறது.

 மேட்டுப்பாளையத்தில் முக்காடு போட்டு சுற்றிய மஹிந்திரா டியூவி 500!

மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவியில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும் நிலையில், இந்த புதிய எஸ்யூவி மாடலில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேனுவல் கியர்பாக்ஸ் தவிர்த்து, ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்விலும் வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

 மேட்டுப்பாளையத்தில் முக்காடு போட்டு சுற்றிய மஹிந்திரா டியூவி 500!

அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்டு இந்த மஹிந்திரா எஸ்யூவி சோதனை செய்யப்படுகிறது. ஆனால், இது தயாரிப்பு நிலை மாடலுக்கு உரிய அம்சங்களை பெற்றிருப்பதால், அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு கொணடு வரும் வாய்ப்பும் இருப்பதாக கருத முடியும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 17, 2017, 16:35 [IST]
English summary
Mahindra’s upcoming MPV, the TUV500 has been spied testing and the images reveal most of the design. Read on for more.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+