மின்சார ஆற்றலுக்கு மாறும் மஹிந்திராவின் அந்த கார் என்ன கார்..?? தாங்கமுடியாத சஸ்பென்ஸ்..!!

மின்சார ஆற்றலுக்கு மாறும் மஹிந்திராவின் அந்த கார் என்ன கார்..?? தாங்கமுடியாத சஸ்பென்ஸ்..!!

By Azhagar

மின்சார கார்கள் தயாரிக்கும் ஒரே இந்திய நிறுவனமாக உள்ளது மஹிந்திரா. இது தயாரித்து வரும் புதிய மின்சார கார் மாடல்கள் வரும் 2019-ற்குள் வெளிவர இருக்கின்றன.

அடுத்தடுத்து 2 புதிய மின்சார கார்களை களமிறக்கும் மஹிந்திரா!

அதில் முதல் மின்சார கார் 2018ம் ஆண்டிலும், இரண்டாது மாடல் கார் 2019ம் ஆண்டிலும் விற்பனைக்காக வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தடுத்து 2 புதிய மின்சார கார்களை களமிறக்கும் மஹிந்திரா!

குறிப்பாக பெரிய எதிர்பார்ப்பிற்கிடையில் மஹிந்திரா தயாரித்து வரும் இந்த இரண்டு மின்சார கார்கள் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படுகின்றன.

அடுத்தடுத்து 2 புதிய மின்சார கார்களை களமிறக்கும் மஹிந்திரா!

மஹிந்திரா தற்போது விற்பனை செய்து வரும் மின்சார கார்கள் பெரியளவில் இந்தியாவில் விற்பனை திறனை பெறவில்லை.

இதனால் மின்சார வாகன விற்பனையில் மேலும் பல புதிய மாடல்கள் அந்நிறுவனத்திற்கு தேவைப்படுகின்றன.

அடுத்தடுத்து 2 புதிய மின்சார கார்களை களமிறக்கும் மஹிந்திரா!

தற்போது மஹிந்திரா தயாரித்து வரும் மின்சார கார் மாடல்களால் பெரிய விற்பனை திறன் இல்லை என்பதே நிதர்சனம்.

கடந்த 7 மாதங்களாக மின்சார கார்களை விற்பனை செய்ய பல யுக்திகளை மஹிந்திரா கையாண்டு வருகிறது.

அடுத்தடுத்து 2 புதிய மின்சார கார்களை களமிறக்கும் மஹிந்திரா!

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு ஏற்ற செயல்திறன் மற்றும் கட்டமைப்பை உருவாக்கினால், இந்தியாவில் மின்சார கார் விற்பனை ஜோராக இருக்கும்.

அடுத்தடுத்து 2 புதிய மின்சார கார்களை களமிறக்கும் மஹிந்திரா!

இந்த எதிர்கால திட்டத்துடன் தான் பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் செயலாற்றி வருகின்றன. அந்த பட்டியலில் மஹிந்திரா முந்திக்கொள்ள முயன்று வருகிறது.

Recommended Video

[Tamil] 2017 Skoda Octavia RS Launched In India - DriveSpark
அடுத்தடுத்து 2 புதிய மின்சார கார்களை களமிறக்கும் மஹிந்திரா!

அதை வேண்டியே 2019-ற்குள் புதிய மின்சார கார் மாடல்களை இந்தியாவில் மஹிந்திரா களமிறங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து 2 புதிய மின்சார கார்களை களமிறக்கும் மஹிந்திரா!

மஹிந்திர நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான பவன் கொயன்கா பேசும்போது, 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் அடுத்தடுத்து களமிறங்கும் புதிய மின்சார கார்கள் பெரிய உற்சாகத்தை தனக்கு தந்துள்ளதாக கூறினார்.

அடுத்தடுத்து 2 புதிய மின்சார கார்களை களமிறக்கும் மஹிந்திரா!

மஹிந்திரா விற்பனை செய்து வரும் தற்போதைய கார் மாடல்கள் எதாவது இரண்டில் தான் அது தயாரித்து வரும் புதிய மின்சார கார்கள் வெளிவரவுள்ளன.

அடுத்தடுத்து 2 புதிய மின்சார கார்களை களமிறக்கும் மஹிந்திரா!

மின்சார கார்கள் உற்பத்திக்காக சுமார் ரூ.600 கோடியை முதலீடு செய்துள்ள மஹிந்திரா, பெங்களூருவில் உள்ள அதன் தொழிற்சாலையில் அந்த கார்களுக்கான தயாரிப்பு பணிகளை தொடங்குகிறது.

அடுத்தடுத்து 2 புதிய மின்சார கார்களை களமிறக்கும் மஹிந்திரா!

மேலும் இந்தியாவில் தயாராகும் மஹிந்திராவின் புதிய மின்சார கார்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் என பவன் கொயன்கா தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்து 2 புதிய மின்சார கார்களை களமிறக்கும் மஹிந்திரா!

நாள் ஒன்றுக்கு 100 மின்சார கார்களை தயாரித்து வரும் மஹிந்திரா, ஒரு மாத முடிவில் 1000 கார்களை உற்பத்தி செய்திருக்கும்.

அடுத்தடுத்து 2 புதிய மின்சார கார்களை களமிறக்கும் மஹிந்திரா!

இதனுடைய தயாரிப்பு பணிகளை மேலும் விரிவுப்படுத்தி, 2019ம் ஆண்டிற்குள் 5000 என்ற எண்ணிக்கையில் மின்சார கார்கள் தயாரிக்கப்படவுள்ளன.

அடுத்தடுத்து 2 புதிய மின்சார கார்களை களமிறக்கும் மஹிந்திரா!

ஆனால் மஹிந்திராவின் தற்போதைய கார் மாடலில் எது மின்சார ஆற்றல் பெறுகிறது என்பதை அந்நிறுவனம் சஸ்பென்ஸாகவே வைத்துள்ளது.

அடுத்தடுத்து 2 புதிய மின்சார கார்களை களமிறக்கும் மஹிந்திரா!

எனினும் ஆட்டோமொபைல் துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கும் தகவலின் படி மஹிந்திராவின் மின்சார ஆற்றல் கொண்ட கார் கேயூவி100-ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தடுத்து 2 புதிய மின்சார கார்களை களமிறக்கும் மஹிந்திரா!

எதுவாக இருப்பினும் 2018ம் ஆண்டில் ஆட்டோ எக்ஸ்போ தொடங்கும் போது மஹிந்திரா வெளியிடும் அந்த முதல் மின்சார கார் என்ன என்பது நமக்கு தெரிந்துவிடும்.

Most Read Articles
English summary
Read in Tamil: Mahindra Will Launch 2 new Electric Cars by 2019 from existing Models. Click for Details...
Story first published: Saturday, November 25, 2017, 15:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X