மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் வெளியீடு: விபரம்

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் விபரம் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

மஹிந்திரா நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான எஸ்யூவி ரக கார் மாடல் எக்ஸ்யூவி500. தற்போது டீசல் எஞ்சின் மாடலில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பெட்ரோல் கார்களுக்கான மவுசு கூடி வருவதை மனதில் வைத்து தற்போது எக்ஸ்யூவி500 காரின் பெட்ரோல் மாடலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் வெளியீடு!

தனது ஐக்கிய அமீரக இணையதளத்தில், புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் பெட்ரோல் மாடலை விற்பனை பட்டியலில் இணைத்துள்ளது மஹிந்திரா நிறுவனம். அங்கு விற்பனைக்கு செல்ல இருக்கும் இந்த புதிய மாடல் விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் வெளியீடு!

இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி 2.2 லிட்டர் எம்-ஹாக் டீசல் எஞ்சினுடன் விற்பனை செய்யப்படுகிறது. அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரையும், 330 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது இந்த டீசல் எஞ்சின். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைத்து வருகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் வெளியீடு!

இந்த நிலையில், ஐக்கிய அமீரகத்தில் விற்பனைக்கு வர இருக்கும், மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் 2.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரையும், 330 என்எம் டார்க் திறனையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் வெளியீடு!

அங்கு வெளியிடப்பட்டு இருக்கும் விபரங்களின்படி, மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக இருக்கும். இதுதவிர, டிசைனில் மாற்றங்கள் எதுவும் இருக்காது.

Recommended Video

[Tamil] Jeep Compass Launched In India - DriveSpark
மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் வெளியீடு!

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் டீசல் வேரியண்ட்டுகள் W என்ற வரிசையில் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் வேரியண்ட்டுகள் G வரிசையில் விற்பனைக்கு வரும். மற்றபடி, இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் பெட்ரோல் மாடலிலும் வித்தியாசங்கள் இருக்காது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் வெளியீடு!

டெல்லி உள்பட வட மத்திய பகுதிகளில் உள்ள மாநிலங்களில் காற்று மாசு அதிகரித்து வருவதால், டீசல் கார்களுக்கு கடுமையான விதிகள் அமல் செய்யப்பட்டு வருகின்றன. எனவே, வர்த்தகத்தை காப்பாற்றுவதற்காக, மஹிந்திரா நிறுவனம் தனது அனைத்து மாடல்களிலுமே பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களை வழங்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 21, 2017, 10:40 [IST]
English summary
We have already reported that Mahindra & Mahindra is all set to launch the petrol variant of its flagship SUV the XUV500 in the Indian market.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+