இப்போது மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரில் ஆண்ட்ராய்ட் ஆட்டோ உள்ளிட்ட பல புதிய அம்சங்கள்..!

Written By:

மஹிந்திரா நிறுவனம் தனது முன்னணி மாடலான 'எக்ஸ்யூவி500'எஸ்யூவி காரில் புதிய தொழில்நுட்ப அம்சங்களை சேர்த்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரில் கூடுதலாக புதிய அம்சங்கள்..!

போட்டியாளர்களின் புதிய மாடல்களுடன் ஒப்பிடும் போது எக்ஸ்யூவி 500 காரில் இருக்கக்கூடிய வசதிகள் போதுமானதாக இருக்கவில்லை என்று மஹிந்திரா நிறுவனம் கருதியுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரில் கூடுதலாக புதிய அம்சங்கள்..!

இதன் காரணமாகவே எக்ஸ்யூவி500 காரில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரில் கூடுதலாக புதிய அம்சங்கள்..!

தற்போது மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரில் ஆண்ட்ராய்ட் ஆட்டோ, கனெக்டட் ஆப்ஸ், ஈகோ சென்ஸ், எமெர்ஜென்ஸி கால், ஒன் டச் லேன் இண்டெகேட்டர் உள்ளிட்ட அம்சங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரில் கூடுதலாக புதிய அம்சங்கள்..!

இதில் சில தொழில்நுட்பங்கள் இத்துறைக்கே புதிதானது ஆகும். இதில் முக்கியமானதாக இருப்பது கனெண்டட் ஆப்ஸ்.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரில் கூடுதலாக புதிய அம்சங்கள்..!

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் வைத்துக்கொள்ளாத பிற ஆப்ஸ்களைக் கூட காரின் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வாயிலாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த புதிய அம்சங்களோடு, அதன் டபிள்யூ10 வேரியண்டில் கருப்பு நிற இண்டீரியருடன், லேக்-சைடு பிரவுண் என்ற புதிய நிறத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது மஹிந்திரா நிறுவனம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரில் கூடுதலாக புதிய அம்சங்கள்..!

இது தொடர்பாக அந்நிறுவனத்தின் ஆட்டோமோடிவ் பிரிவுத் தலைவர் ராஜன் வதேரா கூறுகையில், "முதல் முறையாக எக்ஸ்யூவி500 கார் 2011ல் அறிமுகப்படுத்தப்பட்ட போது அது ஆட்டோமொபைல் துறையில் புதிய தாக்கதை உருவாக்கியது"

மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரில் கூடுதலாக புதிய அம்சங்கள்..!

"இந்த தாக்கத்தை 2015ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 கார்கள் மூலமாகவும் மஹிந்திரா நிறுவனம் நீட்டித்தது"

மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரில் கூடுதலாக புதிய அம்சங்கள்..!

"தற்போது ஈகோசென்ஸ், ஆண்ட்ராய்ட் ஆட்டோ உள்ளிட்ட புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த தாக்கத்தை எஸ்யூவி கார்களில் புகுத்தி அவற்றை எல்லை கடந்து எடுத்துச் சென்றுள்ளது மஹிந்திரா நிறுவனம்" என்றார் அவர்.

ஆண்ட்ராய்ட் ஆட்டோ

ஆண்ட்ராய்ட் ஆட்டோ

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அம்சங்கள் குறித்து சிறிது விளக்கமாக காணலாம்.

மொபைல் உலகின் ஜாம்பவனாக விளங்கும் ஆண்ட்ராய்ட் தொழில்நுட்பத்தில் இயங்கும் ஸ்மார்ஃபோன் கொண்டு, இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வாயிலாக தொடர்புப்படுத்திக்கொண்டு வாடிக்கையாளர்கள் கால்கள் செய்வது, மெசேஜ் அனுப்பிக்கொள்வது, மியூசிக் கேட்பது, கூகுள் தேடு பொறி உள்ளிட்ட என்னற்ற வசதிகளை அனுபவிக்கலாம்.

கனெக்டட் ஆப்ஸ்

கனெக்டட் ஆப்ஸ்

துறையில் முதன்மையாக அறிமுகமாகி இருக்கும் கனெக்டட் ஆப்ஸ் வாயிலாக வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் வைத்துக்கொள்ளாத பிற ஆப்ஸ்களைக் கூட காரின் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மூலமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஈகோசென்ஸ்

ஈகோசென்ஸ்

துறையில் முதன்மையாக அறிமுகமாகி இருக்கும் ஈகோசென்ஸ் எரிபொருள் சிக்கனம் மற்றும் புகை வெளியீடு குறித்தும் ஓட்டுநருக்கு அறிவுறுத்தி எரிபொருள் சிக்கனத்தை பேண பயன்படுகிறது.

எமெர்ஜென்ஸி கால்

எமெர்ஜென்ஸி கால்

ஆபத்துக்காலங்களில் தேவைப்படும் அவசர கால உதவிகளை எமெர்ஜென்ஸி கால் மூலமாக வாடிக்கையாளர்கள் பெறலாம். இதுவும் கூட துறையில் முதன்மையாக அறிமுகமாகி இருக்கும் தொழில்நுட்பமே.

ஒன் டச் லேன் இண்டிகேட்டர்

ஒன் டச் லேன் இண்டிகேட்டர்

இந்த இண்டிகேட்டர் மூலம் ஒரு லேனில் இருந்து மற்றொரு லேனுக்கு மாறும்போது சிக்னல் செய்ய ஒரே பொத்தானை பயன்படுத்தி சிக்னல் செய்யலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரில் கூடுதலாக புதிய அம்சங்கள்..!

இந்த புதிய அம்சங்கள் அடங்கிய எக்ஸ்யூவி500 கார் ரூ.13.8 லட்சம் (மும்பை எக்ஸ் ஷோரூம் விலை) என்ற விலையில் உடனடியாக கிடைக்கப்பெறும். இந்த அம்சங்கள் டபிள்யூ6 வேரியண்ட் முதல் கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

English summary
Read in Tamil about mahindra xuv gets android auto and more features, and new color in w8 variant.
Story first published: Wednesday, April 19, 2017, 18:37 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos