மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

By Saravana Rajan

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் விற்பனைக்கு வந்தது!

மஹிந்திரா நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான எஸ்யூவி மாடல் எக்ஸ்யூவி500. சர்வதேச அளவில் வரத்தகத்தை விரிவுப்படுத்துவதற்காக, ஓர் சிறப்பான எஸ்யூவி மாடல் வேண்டும் என்பதை கருதி, இந்த காரை மஹிந்திரா உருவாக்கியது. கடந்த 2011ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இந்த எஸ்யூவி எதிர்பார்த்தபடியே, சிறப்பான வரவேற்பை பெற்றது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் விற்பனைக்கு வந்தது!

ஆனால், இந்த பிரம்மாண்ட எஸ்யூவி டீசல் மாடலில் மட்டுமே இதுவரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், விற்பனைக்கு வந்து 5 ஆண்டுகள் கடந்த நிலையில், இப்போது பெட்ரோல் எஞ்சினுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் விற்பனைக்கு வந்தது!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் 2.2 லிட்டர் எம்-ஹாக் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 138 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் விற்பனைக்கு வந்தது!

இந்த ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலில் மேனுவலாக இயக்கும் வசதியும் உள்ளது. இந்த பெட்ரோல் மாடல் G AT என்ற வேரியண்ட் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. டிசைனில் வித்தியாசம் இல்லை. பெட்ரோல் மாடலுக்கான பேட்ஜ் மட்டுமே வித்தியாசம்.

Recommended Video

[Tamil] Jeep Compass Launched In India - DriveSpark
மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் விற்பனைக்கு வந்தது!

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவியில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இருக்கிறது. படுல் விளக்குகள், வளைவுகளில் திரும்பும் திசையில் வெளிச்சத்தை தரும் கார்னரிங் விளக்குகள், பாஸிவ் கீலெஸ் என்ட்ரி வசதி, 8 நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யும் ஓட்டுனர் இருக்கை உள்ளிட்டவை முக்கிய வசதிகள்.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் விற்பனைக்கு வந்தது!

இந்த காரில் டியூவல் ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் எமெர்ஜென்சி கால் வசதிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் விற்பனைக்கு வந்தது!

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் ரூ.15.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும். வாடிக்கையாளர்களுக்கு இந்த பெட்ரோல் மாடல் கூடுதல் தேர்வாக அமையும். அதேநேரத்தில், மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 5, 2017, 17:49 [IST]
English summary
Mahindra XUV500 petrol launched in India. The new Mahindra XUV500 petrol model is available in a single variant and comes with a 6-speed automatic gearbox sourced from AISIN, Japan. The petrol-powered Mahindra XUV500 is priced at Rs 15.49 lakh ex-showroom (Delhi).
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+