அதிகம் விற்பனையாகும் கார்கள் வரிசையில் தொடர்ந்து 13 வருடங்களாக மாருதி ஆல்டோ முதலிடம்!

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்கள் வரிசையில் தொடர்ந்து 13ஆண்டுகளாக முதலிடம் பிடித்துள்ளது மாருதிஆல்டோ. அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

இந்தியாவின் நம்பர். 1 கார் நிறுவனமான மாருதிசுசுகி நிறுவனத்தின்
ஆல்டோ கார்கள், அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் காராகவும் விளங்குகிறது. விற்பனையில் ஆல்டோ பல மைல்கற்களை கடந்து தற்போது புதிய சகாப்தத்தை படைத்துள்ளது.

விற்பனையில் வரலாறு படைத்த மாருதி ஆல்டோ கார்! !

நுழைவு நிலை ஹேட்ச்பேக் ரகத்தில் இந்திய கார் சந்தையில் கோலோய்ச்சி வரும் ஆல்டோ காரை கடந்த செப்டம்பர் 2000வது ஆண்டில் அறிமுகப்படுத்தியது மாருதி.

விற்பனையில் வரலாறு படைத்த மாருதி ஆல்டோ கார்! !

கடந்த 17 ஆண்டுகளாக பல்வேறு மாறுதல்கள் அடைந்துவிட்ட கார் சந்தையில் மாறாப் புகழ் கொண்டு விளங்குவது ஆல்டோ மட்டுமே. அதிலும் 13ஆண்டுகளாக தொடர்ந்து இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் என்ற சாதனையை படைத்து கம்பீரமாக முதல் இடத்தில் நிற்கிறது ஆல்டோ.

விற்பனையில் வரலாறு படைத்த மாருதி ஆல்டோ கார்! !

2016-17 ஆண்டு காலகட்டத்தில் 2.41 லட்சம் எண்ணிக்கையிலான ஆல்டோ கார்கள் விற்பனை ஆகியுள்ளன. மொத்தமாக 14,43,641 கார்களை விற்பனை செய்துள்ளது மாருதி நிறுவனம். இதில் 17% பங்களிப்பை ஆல்டோவே அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விற்பனையில் வரலாறு படைத்த மாருதி ஆல்டோ கார்! !

சில கார் நிறுவனங்களின் மொத்த ஆண்டு விற்பனை எண்ணிக்கையை விட ஆல்டோ காரின் விற்பனை அதிகம் என்பது அதிசயிக்கத்தக்க ஒன்றாகும்.

விற்பனையில் வரலாறு படைத்த மாருதி ஆல்டோ கார்! !

மாதம் ஒன்றிற்கு சராசரியாக 22,000 ஆல்டோ கார்கள் விற்பனையாகின்றன. சராசரி வருமானம் கொண்ட இந்தியர்களின் கார் கனவை ஆல்டோ கார்களே பூர்த்தி செய்து வருவது எதார்த்தம்.

விற்பனையில் வரலாறு படைத்த மாருதி ஆல்டோ கார்! !

குறைந்த விலை, குறைந்த பராமரிப்பு செலவு, அதிக மைலேக், சிறந்த டிசைன் மற்றும் செயல்திறன் என கொடுக்கும் விலைக்கு கச்சிதமான ஒரு காராக இருப்பதாலேயே ஆல்டோவை பெரும்பான்மையானோர் விரும்ப காரணமாக உள்ளது.

விற்பனையில் வரலாறு படைத்த மாருதி ஆல்டோ கார்! !

கடந்த பிப்ரவரியில் 30 லட்சம் என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது ஆல்டோ கார்கள். அதாவது அறிமுகப்பட்டது முதல் 30 லட்சத்திற்கும் அதிகமான ஆல்டோ கார்கள் விற்பனையாகி இருக்கிறது.

விற்பனையில் வரலாறு படைத்த மாருதி ஆல்டோ கார்! !

பல மாறுதல்கள் கண்ட இந்திய கார் சந்தையில், பல போட்டிகளுக்கு மத்தியில் தொடர்ந்து 13 ஆண்டுகள் முதல் இடத்தில் இருப்பது என்பது மிகவும் ஒரு அரிதான சாதனை ஆகும்.

விற்பனையில் வரலாறு படைத்த மாருதி ஆல்டோ கார்! !

மாருதி ஆல்டோ 800சிசி மற்றும் 1.0 லிட்டர் கே10 என்ற இரண்டு இஞ்சின்களிலும், ஒரு எரிவாயு வேரியண்டிலும் கிடைக்கிறது. ஆல்டோ கே10 வேரியண்ட் கிளட்ச் இல்லாத ஆட்டோமேடிக் கியர் தொழில்நுட்பத்திலும் கிடைக்கிறது. இது நகரச் சாலைகளில் ஓட்ட வசதி அளிப்பதோடு மைலேஜையும் பெற்றுத் தருகிறது.

விற்பனையில் வரலாறு படைத்த மாருதி ஆல்டோ கார்! !

அடிப்படை வேரியண்ட் கார் மாடல்களில் மாருதி ஆல்டோ காரில் மட்டுமே டிரைவர் ஏர்பேக் ஆப்ஷனலாக கிடைக்கிறது. வேறு எந்த மாடலிலும் ஏர் பேக் கிடைப்பதில்லை.

விற்பனையில் வரலாறு படைத்த மாருதி ஆல்டோ கார்! !

மேனுவல் சிஎன்ஜி வேரியண்ட் ஒரு கிலோ எரிபொருளுக்கு 24.7 கிமீ மைலேஜ் தருகிறது. இதே போல மேனுவல் பெட்ரோல் வேரியண்ட் 18-20 கிமீ மைலேஜ் தருகிறது.

விற்பனையில் வரலாறு படைத்த மாருதி ஆல்டோ கார்! !

ஆல்டோ கார் ரூ.2.63 லட்சம் முதல் ரூ. 3.74 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 8, 2017, 15:55 [IST]
English summary
Read in Tamil about maruti alto stays at no.1 spot for consecutive 13 years. more details like price, mileage, pics, images and more
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+