புதிய தலைமுறை மாருதி ஆல்ட்டோ காரில் 660சிசி எஞ்சின்!

Written By:

ரெனோ க்விட் உள்ளிட்ட கார்கள் வந்த போதிலும், மாருதி ஆல்ட்டோ காரின் விற்பனை கோட்டையை அசைக்க முடியவில்லை. இருந்தாலும், போக போக வாடிக்கையாளர்களின் எண்ண ஓட்டத்தில் மாறுதல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், ஆல்ட்டோ மார்க்கெட்டை தக்க வைக்க மாருதி நிறுவனம் வியூகம் வகுத்துள்ளது.

 புதிய தலைமுறை மாருதி ஆல்ட்டோ காரில் 660சிசி எஞ்சின்!

அதன்படி, நவீன தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் புதிய வடிவமைப்பில் ஆல்ட்டோ காரை உருவாக்க மாருதி நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. ஹரியானா மாநிலம், ரோத்டாக் நகரில் உள்ள மாருதியின் கார் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மையத்தில் புதிய ஆல்ட்டோ காரை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

 புதிய தலைமுறை மாருதி ஆல்ட்டோ காரில் 660சிசி எஞ்சின்!

சுஸுகி நிறுவனத்தின் ஜப்பானிய பிரிவு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் எஞ்சினியர்களின் ஆலோசனைகளின்படி, இந்த பபுதிய தலைமுறை ஆல்ட்டோ காரை இந்திய எஞ்சினியர்கள் உருவாக்கி வருகின்றனர். புதிய தலைமுறை மாருதி ஆல்ட்டோ கார் ஒய்1 கே என்ற குறியீட்டுப் பெயரில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

 புதிய தலைமுறை மாருதி ஆல்ட்டோ காரில் 660சிசி எஞ்சின்!

இந்த நிலையில், புதிய தலைமுறை மாருதி ஆல்ட்டோ கார் பற்றிய முக்கியத் தகவல்கள் ஒன்று வெளியாகி உள்ளது. ஆம், புதிய மாருதி ஆல்ட்டோ காரில் 800சிசி எஞ்சினுக்கு பதிலாக புதிய எஞ்சின் பொருத்தப்பட இருக்கிறதாம்.

 புதிய தலைமுறை மாருதி ஆல்ட்டோ காரில் 660சிசி எஞ்சின்!

தற்போதுள்ள 800சிசி எஞ்சினுக்கு பதிலாக, புதிய தலைமுறை மாருதி ஆல்ட்டோ காரில் 660சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்துவதற்கு மாருதி நிறுவனம் திட்டமிடப்பட்டு இருப்பதாக பிடபிள்யூ பிசினஸ் வேர்ல்டு தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

Recommended Video - Watch Now!
Tata Nexon Review: Specs
 புதிய தலைமுறை மாருதி ஆல்ட்டோ காரில் 660சிசி எஞ்சின்!

தற்போது பயன்படுத்தப்படும் 800சிசி எஞ்சினைவிட இந்த புதிய 660சிசி பெட்ரோல் எஞ்சின் சிசி திறனில் குறைவாக இருந்தாலும், செயல்திறன், மைலேஜ் போன்றவற்றில் மிகச் சிறப்பானதாக இருக்குமாம்.

 புதிய தலைமுறை மாருதி ஆல்ட்டோ காரில் 660சிசி எஞ்சின்!

இந்த புதிய எஞ்சின் பிஎஸ்-6 என்ற மாசு உமிழ்வு தரத்துக்கு இணையாக வருகிறது. இந்த புதிய எஞ்சின் மூலமாக, மாருதி ஆல்ட்டோ காரின் மதிப்பு மேலும் உயரும் வகையில் இருக்கும்.

 புதிய தலைமுறை மாருதி ஆல்ட்டோ காரில் 660சிசி எஞ்சின்!

வரும் 2019ம் ஆண்டு இந்த புதிய எஞ்சினுடன் புதிய தலைமுறை மாருதி ஆல்ட்டோ கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வடிவமைப்பு, வசதிகளிலும் போட்டியாளர்களை விஞ்சும் அளவுக்கு இந்த காரை மாருதி உருவாக்கி வருவது அதிக ஆவலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

Source: BW Business World

English summary
Maruti Alto To Get New Petrol Engine: Report
Story first published: Monday, August 14, 2017, 8:47 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark