இந்தியாவில் மே மாத விற்பனையில் கொடிக்கட்டி பறந்த ஆல்டோ கார்: கொண்டாட்டத்தில் மாருதி..!!
இந்தியாவில் அதிக விற்பனையான கார்களுக்கான பட்டியலில் மாருதி ஆல்டோ முதலிடம்.
மாருதி சுசுகி நிறுவனம் வெளியிட்டுள்ள, 2017 மே மாதத்தில் அதிகளவில் விற்பனையான கார்களுக்கான பட்டியலில் ஆல்டோ கார் முதலிடத்தை பெற்றுள்ளது.

மே மாதத்திற்கு முன்னதாக அதிக விற்பனையான காராக மாருதியின் மற்றொரு தயாரிப்பான ஸ்விப்ட் இருந்து வந்தது.
இந்தாண்டு மே மாதத்தில் மட்டும் மொத்தம் 16,532 ஸ்விப்ட் கார்கள் இந்தியாவில் விற்பனையாகி உள்ளன.
ஆனால் இதே காலவரையில் மொத்தம் 23,618 ஆல்டோ கார்கள் விற்பனையாகி உள்ளதாக மாருதி தெரிவித்துள்ளது.

ஆல்டோ, இந்த சாதனையை மே மாதம் படைத்திருந்தாலும், ஏப்ரல் மாதத்தை பொறுத்தவரை மொத்தம் 23,802 ஸ்விப்ட் கார்கள் விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

திடீரென்று ஆல்டோ காருக்கு மே மாதத்தில் கொஞ்சம் மவுசு கூடியதால், ஸ்விப்ட் மாடலால் முதல்நிலையை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போனது.

ஸ்விப்ட், ஆல்டோ கார்களுக்கு பிறகு மாருதி சுசுகி நிறுவனத்தின் அடுத்த வரவேற்பு பெற்ற மாடல் பலேனோ கார். இதனுடைய விற்பனையும் இந்தியாவில் தற்போது ஏறுமுகத்தில் உள்ளது.

கடந்த மே மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 14,629 பலேனோ கார்களை மாருதி விற்றுள்ளதாக கூறியுள்ளது. அதில் 85% பெட்ரோல் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

மாருதி சுசுசியின் மே மாத விற்பனையில் அனைவருக்கு அதிர்ச்சி அளித்த மாடல் மாருதி டிசையர் கார். வெறும் 9,413 கார்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன.

ஆனால் புதிய டிசையர் மாடலுக்கு கிடைத்து வரும் வரவேற்பு, அதை வரும் நாட்களில் இந்தியாவில் அதிக விற்பனையான கார்களின் டாப் 3 பட்டியலில் இடம்பிடிக்க செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மே மாத விற்பனையின் முடிசூடியுள்ள ஆல்டோ காரில் 800சிசி திறன் கொண்ட 1.0 லிட்டர் எஞ்சின் உள்ளது. இது 47.33 பி.எச்.பி மற்றும் 69 என்.எம் டார்க் திறனை தர வல்லது.

மேலும் மேம்படுத்தப்பட்ட ஆல்டோ கே10 காரின் 998சிசி திறன் கொண்ட எஞ்சின் உள்ளது. இது 67 பி.எச்.பி பவர் மற்றும் 90 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

800சிசி திறன் கொண்ட ஆல்டோ காரில் 5-ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உள்ளது. ஆனால் ஆல்டோ கே 10 காரில் 5-ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது ஏ.எம்.டி கியர் பாக்ஸ் என இரண்டு தேர்வுகளில் வெளிவருகிறது.


Click it and Unblock the Notifications








