மாருதி பெலினோ ஆர்எஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

புதிய மாருதி பெலினோ ஆர்எஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விரிவானத் தகவல்களை தொடர்ந்து இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் புதிய மாருதி பெலினோ ஆர்எஸ் கார் சற்றுமுன் விற்பனைக்கு அறிமுகமானது. முழுமையான விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் காணலாம்.

 மாருதி பெலினோ ஆர்எஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

மாருதி பெலினோ காருக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வரும் நிலையில், புதிய பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட அதன் சக்திவாய்ந்த மாடலாக பெலினோ ஆர்எஸ் கார் இன்று விற்பனைக்கு வந்துள்ளது. 25 முதல் 30 வரை வயதுடைய இளம் வாடிக்கையாளர்களை இலக்காக கொண்டு இந்த காரை அறிமுகம் செய்துள்ளதாக மாருதி கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 மாருதி பெலினோ ஆர்எஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

மாருதி பெலினோ ஆர்எஸ் காரில் ஆர்எஸ் என்பது Road Sport என்பதை குறிக்கிறது. இந்த பேட்ஜ் மூலமாக சாதாரண பெலினோ காரிலிருந்து இந்த பெலினோ ஆர்எஸ் மாடல் வேறுபடுகிறது.

 மாருதி பெலினோ ஆர்எஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

புதிய மாருதி பெலினோ ஆர்எஸ் காரில் மூன்று சிலிண்டர்கள் கொண்ட 998சிசி பூஸ்டர்ஜெட் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக இந்த எஞ்சின் 101 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

 மாருதி பெலினோ ஆர்எஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

சக்திவாய்ந்த மாடலாக இருந்தாலும், தன்னை மாருதியின் தயாரிப்பு என பரைசாற்றிக் காெள்கிறது. ஆம், இந்த கார் லிட்டருக்கு 21.1 கிமீ மைலேஜை தரும் என்று மாருதி தெரிவிக்கிறது.

 மாருதி பெலினோ ஆர்எஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

மாருதி பெலினோ ஆர்எஸ் காரில் பல கூடுதல் ஆக்சஸெரீகள் சேர்க்கப்பட்டுள்ளன. புரொஜெக்டர் ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. க்ரோம் கைப்பிடிகள் உள்ளன. இந்த காரின் பில்லர்கள் கருப்பு வண்ணத்தில் இருக்கின்றன. கருப்பு வண்ண அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. முன்புற, பின்புற பம்பர்கள் வேறுபடுகின்றன. பின்புற டெயில் கேட்டில் ஆர்எஸ் பேட்ஜ் கொடுக்கப்பட்டுள்ளது.

 மாருதி பெலினோ ஆர்எஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

உட்புறத்தில் கருப்பு வண்ண இன்டீரியர் அலங்கரிக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும் இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. புஷ் பட்டன் ஸ்டார்ட், ஆட்டோமேட்டிக் ஏசி, ரிமோட் கீ லெஸ் என்ட்ரி, உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதியுடன் கூடிய ஓட்டுனர் இருக்கை போன்றவை முக்கியமானதாக இருக்கின்றன.

 மாருதி பெலினோ ஆர்எஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

மாருதி பெலினோ ஆர்எஸ் காரில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்றவை இருக்கின்றன. அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டு இருப்பதும் கூடுதல் பாதுகாப்பு அம்சமாக இருக்கின்றன.

 மாருதி பெலினோ ஆர்எஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

இந்த காரின் சஸ்பென்ஷன் அமைப்பும் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. நடைமுறை பயன்பாட்டுக்கு ஏற்ற மிகச் சிறந்த கார் மாடலாக பெலினோ ஆர்எஸ் இருக்கும் என்றும் மாருதி தெரிவித்துள்ளது.

 மாருதி பெலினோ ஆர்எஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

மாருதி பெலினோ ஆர்எஸ் கார் ரூ.8.69 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி டிஎஸ்ஐ, ஃபியட் அபார்த் புன்ட்டோ ஆகிய கார்களுடன் போட்டி போடும்.

புதிய மாருதி பெலினோ ஆர்எஸ் காரின் படங்கள்!

புதிய மாருதி பெலினோ ஆர்எஸ் காரின் உயர்தர படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

Article Published On: Friday, March 3, 2017, 19:48 [IST]
English summary
Read in Tamil: Maruti's all-new Baleno RS launched in India. The Baleno RS is the first hot-hatchback from Maruti.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+