வருகிறது செக்ஸியான மாருதி செலிரியோ எக்ஸ்: விபரம்!

Written By:

மாருதி நிறுவனத்தின் பிரபலமான பட்ஜெட் கார் மாடல் செலிரியோ. முதல்முறையாக ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வந்த இந்த கார் விற்பனையிலும் சிறப்பான பங்களிப்பை மாருதி நிறுவனத்துக்கு கொடுத்து வருகிறது. இந்த நிலையில், க்ராஸ்ஓவர் ஸ்டைலில் மாறுதல்கள் செய்யப்பட்ட செலிரியோ கார் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

வருகிறது செக்ஸியான மாருதி செலிரியோ எக்ஸ்: விபரம்!

கடந்த ஆண்டு நொய்டாவில் நடந்த சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் செலிரியோ எக்ஸ் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், டாடா டியாகோ காரால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை போக்கும் விதமாக, இந்த புதிய மாடலை மாருதி களமிறக்க உள்ளது.

வருகிறது செக்ஸியான மாருதி செலிரியோ எக்ஸ்: விபரம்!

மாருதி செலிரியோ எக்ஸ் என்ற பெயரில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வர இருக்கிறது. அண்மையில் விளம்பர படப்பிடிப்பின்போது இந்த கார் பத்திரிக்கையாளர்களின் கண்களில் சிக்கியது. கூடுதல் ஆக்சஸெரீகளுடன் இந்த கார் இளைய சமுதாய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

வருகிறது செக்ஸியான மாருதி செலிரியோ எக்ஸ்: விபரம்!

எஸ்யூவி கார்களை போன்ற தோற்றத்திற்கு உருமாற்றும் வகையில் பல கூடுதல் ஆக்சஸெரீகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. புதிய கருப்பு அலாய் வீல்கள், கருப்பு பாடி கிளாடிங் சட்டங்கள், ரூஃப் ரெயில்கள், ஸ்கிட் பிளேட்டுகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

வருகிறது செக்ஸியான மாருதி செலிரியோ எக்ஸ்: விபரம்!

உட்புறத்திலும் கவர்ச்சிகரமான இன்டீரியர் வேலைப்பாடுகளுடன் வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரில் ஸ்மார்ட்ப்ளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கும்.

வருகிறது செக்ஸியான மாருதி செலிரியோ எக்ஸ்: விபரம்!

புதிய செலிரியோ எக்ஸ் மாடலானது விஎக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ ஆப்ஷனல் பேக், இசட்எக்ஸ்ஐ மற்றும் இசட்எக்ஸ்ஐ ஆப்ஷனல் பேக் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும். மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல்களிலும் இந்த செலிரியோ எக்ஸ் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

வருகிறது செக்ஸியான மாருதி செலிரியோ எக்ஸ்: விபரம்!

மாருதி செலிரியோ எக்ஸ் காரின் தரை இடைவெளி அளவு அதிகரிக்கப்பட்டிருக்கிறதா? சஸ்பென்ஷனில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறதா என்பது குறித்த தகவல் இதுவரை இல்லை.

வருகிறது செக்ஸியான மாருதி செலிரியோ எக்ஸ்: விபரம்!

எஞ்சினிலும் மாற்றம் இருக்காது என்றே கருதப்படுகிறு. தற்போது பயன்படுத்தப்படும் 1.0 லிட்டர் கே10பி பெட்ரோல் எஞ்சினுடன் புதிய செலிரியோ எக்ஸ் மாடல் விற்பனைக்கு வரும். அதிகபட்சமாக இந்த எஞ்சின் 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

வருகிறது செக்ஸியான மாருதி செலிரியோ எக்ஸ்: விபரம்!

சாதாரண செலிரியோ கார் வேரியண்ட்டுகளைவிட ரூ.20,000 வரை கூடுதல் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பது கணிப்பு. அடுத்த சில நாட்களில் இந்த கார் குறித்து மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

English summary
The spy shot reveals the rear end of the Celerio Cross which features black plastic cladding on the rear bumper and the wheel arches. The new variant of the Celerio was also showcased at the 2016 Auto Expo as a concept model.
Story first published: Thursday, September 28, 2017, 14:14 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark