மாருதி செலிரியோ காரின் லிமிடேட் எடிசன் அறிமுகம்- முழு விபரம்!

மாருதி செலிரியோ காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

மாருதி செலிரியோ காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி செலிரியோ காரின் லிமிடேட் எடிசன் அறிமுகம்- முழு விபரம்!

பண்டிகை காலத்தில் கார் வாங்க திட்டமிட்டிருக்கும் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில், ஸ்பெஷல் எடிசன் மாடல்களை கார் நிறுவனங்கள் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், பட்ஜெட் கார் மார்க்கெட்டில் சிறப்பான தேர்வாக இருந்து வரும் மாருதி செலிரியோ காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

மாருதி செலிரியோ காரின் லிமிடேட் எடிசன் அறிமுகம்- முழு விபரம்!

வெளிப்புறத்தில் பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கிறது. பக்கவாட்டில் பாடி கிளாடிங் என்ற பிளாஸ்டிக் சட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. டோர் வைசர்கள், ஹெட்லைட், டெயில் லைட், பனி விளக்குகள், டோர் பேனல்களில் மற்றும் டெயில் கேட்டில் க்ரோம் அலங்கார பாகங்கள் பதிக்கப்பட்டு இருக்கின்றன.

மாருதி செலிரியோ காரின் லிமிடேட் எடிசன் அறிமுகம்- முழு விபரம்!

இது சாதாரண செலிரியோ காரிலிருந்து ஸ்பெஷல் எடிசன் மாடலாக வேறுபடுத்துகிறது. உட்புறத்தில் ஏராளமான ஆக்சஸெரீகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஸ்டீயரிங் வீல் கவர், புதிய சீட் கவர்கள் இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலுடன் கிடைக்கிறது. ஆம்பியன்ட் லைட் செட்டிங்ஸ் இருக்கிறது. ரியர் பார்க்கிங் சென்சார்களும் உண்டு.

Recommended Video

2018 Hyundai Verna Indian Model Unveiled | In Tamil - DriveSpark தமிழ்
மாருதி செலிரியோ காரின் லிமிடேட் எடிசன் அறிமுகம்- முழு விபரம்!

மாருதி செலிரியோ காரின் விஎக்ஸ்ஐ மற்றும் இசட்எக்ஸ்ஐ வேரியண்ட்டுகளில் இந்த லிமிடேட் எடிசன் மாடல் கிடைக்கிறது. இந்த லிமிடேட் எடிசன் பேக்கேஜ் மாடலுக்கு ரூ.11,990 கூடுதல் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

மாருதி செலிரியோ காரின் லிமிடேட் எடிசன் அறிமுகம்- முழு விபரம்!

மாருதி செலிரியோ காரில் மூன்று சிலிண்டர்கள் கொண்ட 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 90என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

மாருதி செலிரியோ காரின் லிமிடேட் எடிசன் அறிமுகம்- முழு விபரம்!

அராய் சான்றுபடி, மாருதி செலிரியோ கார் லிட்டருக்கு 22.02 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மாருதி செலிரியோ காரின் லிமிடேட் எடிசன் மாடல் சிஎன்ஜி எரிபொருள் தேர்விலும் கிடைக்கும். இந்த மாடலானது கணக்கீடுகளின்படி, லிட்டருக்கு 31.79 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Most Read Articles
English summary
Maruti Celerio Limited Edition launched in India. The Maruti Celerio Limited Edition will be available in the VXi and ZXi variants and will cost Rs 11,990 over and above the cost of the variant chosen.
Story first published: Saturday, August 5, 2017, 12:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X