புதிய மாருதி செலிரியோ எக்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

Written By:

மாருதி செலிரியோ காரின் க்ராஸ்ஓவர் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய மாருதி செலிரியோ எக்ஸ் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

ஹேட்ச்பேக் கார்களில் எஸ்யூவி கார்களுக்கான ஆக்சஸெரீகளை பொருத்தி விற்பனைக்கு அறிமுகம் செய்வதில் கார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த வரிசையில் தற்போது மாருதி செலிரியோ காரும் இணைந்துள்ளது.

புதிய மாருதி செலிரியோ எக்ஸ் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

மாருதி செலிரியோ எக்ஸ் என்ற பெயரிலான இந்த மாடல் ஏற்கனவே கடந்த ஆண்டு நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இரு ஆண்டுகள் நெருங்கும் நிலையில், இப்போது மார்க்கெட்டில் களமிறக்கப்பட்டு இருக்கிறது.

புதிய மாருதி செலிரியோ எக்ஸ் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

புதிய க்ரில் அமைப்பு, வித்தியாசமான க்ராபிக் டிசைனர் ஸ்டிக்கர்கள், பாடி கிளாடிங்குகள், ஸ்கிட் பிளேட் போன்றவை இந்த காரில் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

புதிய மாருதி செலிரியோ எக்ஸ் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

இந்த காரில் கருப்பு வண்ண க்ரில் அமைப்பு, பனி விளக்குகள் மற்றும் ரூஃப் ரெயில்கள்பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த காரில் 6 ஸ்போக்குகள் கொண்ட அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

புதிய மாருதி செலிரியோ எக்ஸ் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

புதிய மாருதி செலிரியோ எக்ஸ் கார் பாப்ரிக்கா ஆரஞ்ச், ஆர்டிக் ஒயிட், க்ளிஸ்டனிங் க்ரே மற்றும் கேஃபைன் பிரவுன், டார்க் புளூ ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். அனைத்தும் மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட வண்ணங்களாக இருக்கின்றன.

புதிய மாருதி செலிரியோ எக்ஸ் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

மாருதி செலிரியோ எக்ஸ் காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

புதிய மாருதி செலிரியோ எக்ஸ் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

புதிய மாருதி செலிரியோ எக்ஸ் காரில் ஓட்டுனர் பக்கத்திற்கான ஏர்பேக், சீட் பெல்ட் ரிமைன்டர் ஆகியவை கொடுக்கப்படுகின்றன. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆப்ஷனலாக வழங்கப்படுகிறது.

விலை விபரம்

விலை விபரம்

மாருதி செலிரியோ எக்ஸ் (எக்ஸ்ஷோரூம் விலை)

வேரியண்ட் விபரம் கியர்பாக்ஸ் விபரம் விலை விபரம்
விஎக்ஸ்ஐ மேனுவல் கியர்பாக்ஸ் ரூ.457,226
விஎக்ஸ்ஐ ஏஎம்டி கியர்பாக்ஸ் ரூ.500,226
விஎக்ஸ்ஐ(ஆப்ஷனல்) மேனுவல் கியர்பாக்ஸ் ரூ.472,279
விஎக்ஸ்ஐ(ஆப்ஷனல்) ஏஎம்டி கியர்பாக்ஸ் ரூ.515,279
இசட்எக்ஸ்ஐ மேனுவல் கியர்பாக்ஸ் ரூ.482,234
இசட்எக்ஸ்ஐ ஏஎம்டி கியர்பாக்ஸ் ரூ.525,234
இசட்எக்ஸ்ஐ (ஆப்ஷனல்) மேனுவல் கியர்பாக்ஸ் ரூ.530,645
இசட்எக்ஸ்ஐ(ஆப்ஷனல்) ஏஎம்டி கியர்பாக்ஸ் ரூ.542,645
English summary
Maruti CelerioX launched in India. Prices for the new Maruti CelerioX start at Rs 4.57 lakh for the base model VXi variant and goes up to Rs 5.42 lakh for the ZXi (O) trim. All prices are ex-showroom (Delhi).

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark