இப்போது மாருதி கார்களுக்கு வழங்கப்படும் சிறப்பு தள்ளுபடி சலுகைகள் விபரம்!
மாருதி நிறுவனத்தின் பெட்ரோல் கார் மாடல்களுக்கு இப்போது சிறப்பு தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதன் விபரங்களை காணலாம்.
புத்தாண்டு பிறந்து இரண்டு மாதங்கள் உருண்டோடி விட்ட நிலையில், கார் வாங்கும் படலத்தை பலர் தீவிரமாக்கி இருப்பீர்கள். இந்த நிலையில், பட்ஜெட் கார் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களின் தேர்வில் முதல் சாய்ஸாக உள்ள மாருதி நிறுவனம் தனது பெட்ரோல் கார் மாடல்களுக்கு பல சிறப்பு சேமிப்பு மற்றும் தள்ளுபடி சலுகைகளை இப்போது வழங்கி வருகிறது. எந்தெந்த கார் மாடலுக்கு எவ்வளவு சேமிப்பை பெற முடியும் என்பதை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி ஆல்ட்டோ 800
குறைவான விலையில் கிடைக்கும் மாருதி ஆல்ட்டோ மாடல்கள் எப்போதுமே பட்ஜெட் கார் பிரியர்கள் முதல் சாய்ஸாக இருந்து வருகிறது.
தற்போது ஆல்ட்டோ 800 காருக்கு அதிகபட்சமாக ரூ.45,000 வரை தள்ளுபடி பெறும் வாய்ப்புள்ளது.
இதில், 25,000 விலையில் நேரடி தள்ளுபடியாகவும், ரூ.20,000 பழைய காரை மாற்றுவோருக்கு எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் வழங்கபப்படுகிறது. எல்எக்ஸ்ஐ மற்றும் எல்எக்ஸ்ஐ சிஎன்சி வேரியண்ட்டுகளுக்கு இந்த சிறப்பு சலுகை பொருந்தும்.

மாருதி ஆல்ட்டோ கே10 கார்
மாருதி ஆல்ட்டோ கே10 மாடலுக்கு ரூ.40,000 வரை தள்ளுபடி பெறும் வாய்ப்புள்ளது. ரூ.20,000 விலையில் நேரடி தள்ளுபடியாகவும், ரூ.20,000 பழைய காரை மாற்றுவோருக்கு எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் வழங்கப்படுகிறது.
ஏஎம்டி மாடலுக்கு கூடுதலாக ரூ.5,000 தள்ளுபடியும் இருக்கிறது.

மாருதி செலிரியோ
மாருதி செலிரியோ காருக்கு ரூ.45,000 வரை தள்ளுபடி சலுகைகளை பெற முடியும். எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ மற்றும் இசட்எக்ஸ்ஔஐ மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகளுக்கு ரூ.20,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.25,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையாகவும் பெற முடியும்.
ஏஎம்டி மாடலுக்கு ரூ.5,000 கூடுதல் தள்ளுபடியும் உண்டு. செலிரியோ சிஎன்ஜி வேரியண்ட்டுகளுக்கு ரூ.15,000 தள்ளுபடியும், ரூ.25,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் பெற முடியும்.

மாருதி வேகன் ஆர்
மாருதி வேகன் ஆர் காரின் மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகளுக்கு ரூ.40,000 தள்ளுபடி பெறும் வாய்ப்புள்ளது. ரூ.15,000 விலையில் தள்ளுபடியாகவும், ரூ.25,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் பெற முடியும். ஏஎம்டி மாடல்களுக்கு கூடுதலாக ரூ.5,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மாருதி வேகன் ஆர் காரின் சிஎன்ஜி மாடலுக்கு ரூ.35,000 வரை தள்ளுபடி பெற முடியும். இதில், ரூ.20,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.15,000 பழைய காரை மாற்றுவோருக்கு எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையாவும் பெற முடியும்.

மாருதி ஸ்விஃப்ட்
புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் பெட்ரோல் மாடல்களுக்கு ரூ.25,000 வரை தள்ளுபடி பெறும் வாய்ப்புள்ளது. இதில், ரூ10,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் பெற முடியும்.

மாருதி டிசையர்
இந்தியாவின் மிக அதிகம் விற்பனையாகும் காம்பேக்ட் செடான் ரக கார் மாடல் மாருதி டிசையர். இந்த காரை சொந்தமாக்கிக் கொள்ள விரும்புவோருக்கு இப்போது சிறப்பான சேமிப்பை பெறும் வாய்ப்புள்ளது. பெட்ரோல் மாடல்களுக்கு ரூ.10,000 வரை விலையில் தள்ளுபடியாகவும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் பெற முடியும்.

மாருதி எர்டிகா
மாருதி எர்டிகா காரின் பெட்ரோல் மாடலுக்கு இப்போது அதிகபட்சமாக ரூ.20,000 வரை சலுகைகளை பெற முடியும்.
இதில், ரூ.10,000 விலையில் தள்ளுபடியாகவும், பழைய காரை மாற்றுவோர் ரூ.10,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் பெற முடியும்.

மாருதி சியாஸ்
மாருதி சியாஸ் காரின் பெட்ரோல் மாடலுக்கு ரூ.45,000 வரை தள்ளுபடி சலுகை உள்ளது. இதில், ரூ.30,000 விலையில் தள்ளுபடியாகவும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் பெற முடியும்.

மாருதி ஈக்கோ
மாருதி ஈக்கோ பெட்ரோல் மாடலுக்கு ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும், சிஎன்ஜி மாடல்கள் ரூ.10,000 தள்ளுபடியையும், ரூ.10,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் பெறும் வாய்ப்புள்ளது.

இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் தள்ளுபடி விபரங்கள் டீலருக்கு டீலர் மாறுபடும். முழுமையான விபரங்களுக்கு உங்கள் அருகாமையிலுள்ள மாருதி டீலரை அணுகவும்.
புதிய ஹூண்டாய் வெர்னா காரின் படங்கள்!
புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா காரின் உயர்தர படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.


Click it and Unblock the Notifications








