மாருதி டிசையர் காருக்கு இமாலய முன்பதிவு... காத்திருப்பு காலமும் அதிகரிப்பு!

Written By:

கடந்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி டிசையர் கார் மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. முன்பதிவு இமாலய இலக்கை தொட்டிருப்பதால், காத்திருப்பு காலமும் அதிகரித்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

 மாருதி டிசையர் காருக்கு அமோக முன்பதிவு!

கடந்த மாதம் 16ந் தேதி புதிய தலைமுறை மாருதி டிசையர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்ட போதே, 33,000 முன்பதிவுகளுடன் கம்பீரமாக மார்க்கெட்டில் களமிறங்கியது.

 மாருதி டிசையர் காருக்கு அமோக முன்பதிவு!

இந்த நிலையில், அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து இதுவரை 50,000 க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை மாருதி டிசையர் கார் பெற்றிருக்கிறது. முன்பதிவு அதிகரித்துள்ளதையடுத்து, மாருதி டிசையர் காருக்கான காத்திருப்பு காலமும் மூன்று மாதங்கள் வரை அதிகரித்துள்ளது.

 மாருதி டிசையர் காருக்கு அமோக முன்பதிவு!

கடந்த மாதம் மாருதி டிசையர் காரின் விற்பனை மிகவும் குறைந்தது. புதிய மாடல் வருகையால் பழைய மாடலின் விற்பனை 9,073 என்ற எண்ணிக்கையில் குறைந்தது. இந்த நிலையில், முன்பதிவு அதிகரித்துள்ளதையடுத்து, மாருதி டிசையர் காரின் விற்பனை மீண்டும் உயர்ந்துவிடும்.

 மாருதி டிசையர் காருக்கு அமோக முன்பதிவு!

மேலும், விற்பனையில் பல புதிய மைல்கற்களை மாருதி டிசையர் பெறும் என்றும் தெரிகிறது. புதிய மாருதி டிசையர் கார் டிசைனில் பல புதிய மாற்றங்களை சந்தித்துள்ளது. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

 மாருதி டிசையர் காருக்கு அமோக முன்பதிவு!

5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பூட் ரூம் இடவசதி அதிகரிக்கப்பட்டு இருப்பதும் புதிய மாருதி டிசையர் காருக்கு கூடுதல் வலு சேர்க்கும் அம்சமாக கூறலாம்.

 மாருதி டிசையர் காருக்கு அமோக முன்பதிவு!

புதிய மாருதி டிசையர் கார் ஆர்டிக் ஒயிட், சில்க்கி சில்வர், மேக்மா க்ரே, கேலண்ட் ரெட், ஷெர்வுட் பிரவுன் மற்றும் ஆக்ஸ்போர்ட் புளூ ஆகிய 6 வண்ணங்களில் கிடைக்கும்.

ரூ.5.45 லட்சம் முதல் ரூ.8.41 லட்சம் வரையிலான விலையில் புதிய மாருதி டிசையர் கார் கிடைக்கிறது.

English summary
India’s leading automaker Maruti Suzuki launched the new Dzire on May 16, 2017. The compact sedan achieved 33,000 bookings at the time of launch.
Story first published: Monday, June 26, 2017, 10:36 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark