மாருதி இக்னிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்

Written By:

இளைய சமுதாயத்தினர் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்திய மாருதி இக்னிஸ் கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிக சவாலான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது புதிய மாருதி இக்னிஸ் கார். இந்த காரின் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் தொடர்ந்து காணலாம்.

 மாருதி இக்னிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்

மாருதி இக்னிஸ் கார் நெக்ஸா பிரிமியம் ஷோரூம்கள் வழியாக விற்பனைக்கு வந்துள்ளது. வசதிகளை பொறுத்து சிக்மா, டெல்டா, ஸீட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய நான்கு விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கும். அதேநேரத்தில், சிக்மா என்ற குறைவான வசதிகள் கொண்ட வேரியண்ட் பெட்ரோல் மாடலில் மட்டுமே கிடைக்கும். டீசல் மாடல் டெல்டா, ஸீட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

 மாருதி இக்னிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்

பெட்ரோல், டீசல் என இரண்டு மாடல்களிலும் மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் என இரண்டு ஆப்ஷன்ளிலும் வந்துள்ளது. அதேநேரத்தில், ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் டெல்ட்டா மற்றும் ஸீட்டா வேரியண்ட்டுகள் மட்டும் கிடைக்கும்.

 மாருதி இக்னிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்

மாருதி இக்னிஸ் கார் 3,700 மிமீ நீளமும், 1,690மிமீ அகலமும், 1,595மிமீ உயரமும் கொண்டது. இதன் வீல்பேஸ் 2,435மிமீ. க்ராஸ்ஓவர் ரகத்தில் வந்திருக்கும் இந்த புதிய கார் 180மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. 260 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ரூம் உள்ளது. 32 லிட்டர் கொள்திறன் கொண்ட எரிபொருள் டேங்க் பொருத்தப்பட்டு இருக்கிறது.

 மாருதி இக்னிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்

புதிய மாருதி இக்னிஸ் காரில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், யு வடிவிலான எல்இடி பகல்நேர விளக்குகள், 15 இன்ச் கருப்பு வண்ண அலாய் வீல்கள், இரட்டை வண்ணக் கலவை போன்றவை வெளிப்புறத்தின் முக்கிய அம்சங்கள்.

 மாருதி இக்னிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்

உட்புறத்தில் மிக நவநாகரீமான இன்டீரியர் டிசைன் செய்யப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது. நேவிகேஷன் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை அளிக்கும்.

 மாருதி இக்னிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்

இந்த காரில் டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுன்ட் போன்றவை அனைத்து வேரியண்ட்டுகளிலும் நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே, மிக சவாலான விலையில் சிறந்த பாதுகாப்பு வசதிகள் கொண்ட கார்களில் ஒன்றாக தன்னை முன்னிறுத்தி இருக்கிறது மாருதி இக்னிஸ்.

 மாருதி இக்னிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்

மாருதி இக்னிஸ் காரின் பெட்ரோல் மாடலில் 81.2 பிஎச்பி பவரையும், 113என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. மாருதி இக்னிஸ் காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.89 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மாருதி இக்னிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்

மாருதி இக்னிஸ் காரின் டீசல் மாடலில் இருக்கும் 1,248சிசி எஞ்சின் அதிகபட்சமாக 74 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் மாடல் லிட்டருக்கு 26.80 கிமீ மைலேஜை தரும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல்களில் கிடைக்கும்.

 மாருதி இக்னிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்

புதிய மாருதி இக்னிஸ் கார் 6 விதமான நிறங்களில் தேர்வு செய்து கொள்ளலாம். பியர்ல் ஆல்டிக் ஒயிட் மற்றும் சில்க்கி சில்வர் வண்ணங்கள் அனைத்து வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும். க்ளிஸ்டனிங் க்ரே என்ற வண்ணம் டாப் வேரியண்ட்டில் கிடைக்காது. அதேபோன்று, அர்பன் புளூ என்ற வண்ணம் சிக்மா பேஸ் மாடலில் கிடைக்காது.

 மாருதி இக்னிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்

டின்செல் புளூ மற்றும் அப்டவுன் ரெட் ஆகிய வண்ணங்கள் டெல்டா மற்றும் ஸீட்டா வேரியண்ட்டுகளில் மட்டுமே கிடைக்கும். ஆல்ஃபா டாப் வேரியண்ட் மூன்று விதமான இரட்டை வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். அப்டவுன் ரெட் மற்றும் மிட்நைட் பிளாக் என்ற இரட்டை வண்ண ஆப்ஷனிலும், டின்செல் புளூ மற்றும் மிட்நைட் பிளாக் மற்றும் டின்செல் புளூ மற்றும் ஆர்டிக் ஒயிட் ஆகிய வண்ணத் தேர்வுகளில் வந்துள்ளது.

 மாருதி இக்னிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்

மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவி கார் போன்றே, மாருதி இக்னிஸ் காரையும் வாடிக்கையாளர்கள் கூடுதல் ஆக்சஸெரீகளுடன் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வாய்ப்புள்ளது.

 பெட்ரோல் மாடல் விலை விபரம்

பெட்ரோல் மாடல் விலை விபரம்

மேனுவல் கியர்பாக்ஸ் மாடல்கள்

 • சிக்மா- ரூ.4.59 லட்சம்
 • டெல்ட்டா- ரூ.5.19 லட்சம்
 • ஸீட்டா- ரூ.5.75 லட்சம்
 • ஆல்ஃபா- ரூ.6.69 லட்சம்

பெட்ரோல் ஏஎம்டி மாடல்

 • டெல்ட்டா- ரூ.5.74 லட்சம்
 • ஸீட்டா- ரூ.6.30 லட்சம்
 டீசல் மாடல் விலை விபரம்

டீசல் மாடல் விலை விபரம்

மேனுவல் கியர்பாக்ஸ் மாடல்கள்

 • டெல்ட்டா: ரூ.6.39 லட்சம்
 • ஸீட்டா: ரூ.6.91 லட்சம்
 • ஆல்ஃபா: ரூ.7.80 லட்சம்

டீசல் - ஏஎம்டி கியர்பாக்ஸ்

 • டெல்ட்டா: ரூ.6.94 லட்சம்
 • ஸீட்டா: ரூ.7.46 லட்சம்

மாருதி இக்னிஸ் கார் ஆல்பம்!

இளமை துடிப்புடன் மார்க்கெட்டில் களம் புகுந்துள்ள மாருதி இக்னிஸ் காரின் படங்களை கீழே உள்ள ஆல்பத்தை க்ளிக் செய்து பார்க்கலாம்.

English summary
Maruti Ignis Launched In India; Priced At Rs 4.59 Lakh
Story first published: Friday, January 13, 2017, 18:26 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark