விழாக்கால விற்பனைக்காக மாருதி சுசுகி அறிமுகப்படுத்தும் புதிய ஆல்டோ ’உத்சவ்’ கார்..!!

Written By:

பண்டிகை காலத்தை முன்னிட்டு ரெனால்ட் தொடங்கி மெர்சிடிஸ் பென்ஸ் உட்பட பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள், புதிய எடிசன்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.

இந்தியாவில் மாருதியின் புதிய ஆல்டோ உத்சவ் எடிசன் அறிமுகம்..!

இந்த வரிசையில் மாருதி சுசுகி நிறுவனம் தனது பிரபலமான ஆல்டோ 800 காரில் உத்சவ் என்ற விழாக்கால பதிப்பை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் மாருதியின் புதிய ஆல்டோ உத்சவ் எடிசன் அறிமுகம்..!

ஆல்டோ 800 உத்சவ் காரில் புதிய சீட் கவர்கள், ஓ.ஆர்.வி.எம் கவர்கள், கதவுகளுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் இதர துணை பொருட்களை இந்த கார் பெற்றுள்ளது.

Recommended Video - Watch Now!
Datsun rediGO Gold 1.0-Litre Launched In India | In Tamil- DriveSpark தமிழ்
இந்தியாவில் மாருதியின் புதிய ஆல்டோ உத்சவ் எடிசன் அறிமுகம்..!

கட்டமைப்பில் ஆல்டோ காரை பின்பற்றி, உத்சவ் எடிசன் தயாரிக்கப்பட்டு இருந்தாலும், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், பாதுகாப்பு கட்டமைப்புகளை புதியதாக பெற்றுள்ளது.

இந்தியாவில் மாருதியின் புதிய ஆல்டோ உத்சவ் எடிசன் அறிமுகம்..!

செயல்திறனை பொறுத்தவரை ஆல்டோ 800 உள்ள, அதே 800சிசி 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினை தான் உத்சவ் பதிப்பு பெற்றுள்ளது.

இதன்மூலம் 48 பிஎச்பி பவர் மற்றும் 69 என்.எம் டார்க் திறன் கிடைக்கும். 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இந்த காரில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் மாருதியின் புதிய ஆல்டோ உத்சவ் எடிசன் அறிமுகம்..!

ஓஆர்விஎம் உடன் பாடி சைடு மோல்டிங், பம்பர்கள், ஸ்டீரியோ சிஸ்டம், சாவி தேவையில்லாத ரிமோட் கீலெஸ் எண்ட்ரி, சைடு லாக் மற்றும்

இந்தியாவில் மாருதியின் புதிய ஆல்டோ உத்சவ் எடிசன் அறிமுகம்..!

மத்திய பகுதியில் கதவை மூடும் வசதி, ஓட்டுநர் இருக்கைக்கான ஏர்பேகுள் என்று பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இதில் உள்ளன.

இந்தியாவில் மாருதியின் புதிய ஆல்டோ உத்சவ் எடிசன் அறிமுகம்..!

ரெனால்ட் நிறுவனம் கிவ்ட் மாடலில் வெளியிட்ட ஏனிவெர்ஸரி காருக்கு போட்டியான விலையில் ஆல்டோ உத்சவ் காரை மாருதி சுசுகி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

இந்தியாவில் மாருதியின் புதிய ஆல்டோ உத்சவ் எடிசன் அறிமுகம்..!

இவற்றை தவிர ஹூண்டாய் இயான் மற்றும் டட்சன் ரெடிகோ கார்களும் புதிய ஆல்டோ உத்சவ் கார்களுக்கான போட்டி மாடலாக இந்திய சந்தையில் பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் மாருதியின் புதிய ஆல்டோ உத்சவ் எடிசன் அறிமுகம்..!

ஆல்டோ காரில் வி.எக்ஸ்.ஐ (ஒ) வேரியண்டை அடிப்படையாக வைத்து உத்சவ் எடிசன் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மாருதியின் புதிய ஆல்டோ உத்சவ் எடிசன் அறிமுகம்..!

வி.எக்ஸ்.ஐ (ஒ) வேரியன்ட் கார் ரூ.3.34 லட்சம் (டெல்லி எக்ஸ்ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதை விட இந்த கார் கூடுதாக ரூ.20,000 விலையுடன் ரூ.3.54 லட்சம் மதிப்பில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்தியாவில் மாருதியின் புதிய ஆல்டோ உத்சவ் எடிசன் அறிமுகம்..!

மேலும் மாருதி உத்சவ் மாடல் கார் இந்த விழாக்காலம் வரையில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளது. இது தவிர உத்சவ் காருக்கு வழங்கப்படும் துணைப்பொருட்கள், ஆல்டோவின் வி.எக்ஸ்.ஐ ட்ரிம் அல்லது வி.எக்ஸ்.ஐ (ஓ), எல்.எக்ஸ்.ஐ. போன்ற வேரியண்டுகளிலும் கிடைக்கும் என மாருதி சுசுகி தெரிவித்துள்ளது.

English summary
Read in Tamil: Maruti Suzuki Launched New festival edition Alto 800 Utsav for Sales. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark