5 மாதங்களில் வியப்பூட்டும் சாதனை படைத்த மாருதி ஆல்டோ கார்: 13 ஆண்டுகால நம்பர்-1 அரியணை..!!

Written By:

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகியின் ஆரம்ப நிலை மாடலான ஆல்டோ கார் விற்பனையில் வியப்பூட்டும் சாதனையை படைத்துள்ளது.

5 மாதங்களில் வியப்பூட்டும் சாதனை படைத்த மாருதி ஆல்டோ கார்..!!

மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் ஆல்டோ காரை கடந்த 2001ம் ஆண்டில் முதல் முறையாக அறிமுகம் செய்தது.

5 மாதங்களில் வியப்பூட்டும் சாதனை படைத்த மாருதி ஆல்டோ கார்..!!

கடந்த 17 ஆண்டுகளாக இதர மாடல்களுடன் போட்டி போடும் வகையில் பல முறை ஆல்டோ மாடலை மேம்படுத்தப்படுத்தி வந்தது மாருதி நிறுவனம்.

5 மாதங்களில் வியப்பூட்டும் சாதனை படைத்த மாருதி ஆல்டோ கார்..!!

ஆல்டோ கார் அறிமுகம் செய்யப்பட்ட முதல் மூன்று ஆண்டுகளில் 1 லட்சம் எண்ணிக்கையிலான கார்கள் விற்பனை ஆகியிருந்தது.

5 மாதங்களில் வியப்பூட்டும் சாதனை படைத்த மாருதி ஆல்டோ கார்..!!

இந்நிலையில் கடந்த 5 மாதங்களில் மட்டும் 1.07 லட்சம் ஆல்டோ கார்கள் விற்பனையாகி மாருதி நிறுவனத்தை திக்குமுக்காட வைத்துள்ளது.

5 மாதங்களில் வியப்பூட்டும் சாதனை படைத்த மாருதி ஆல்டோ கார்..!!

இதே காலகட்டத்தில் ஆல்டோவின் நேரடி போட்டியாளரான ரெனோ க்விட் 41,814 என்ற எண்ணிக்கையிலும், இந்த செக்மெண்டில் உள்ள மற்றொரு மாடலான ஹூண்டாய் இயான் 27,023 என்ற எண்ணிக்கையிலும் விற்பனையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

5 மாதங்களில் வியப்பூட்டும் சாதனை படைத்த மாருதி ஆல்டோ கார்..!!

தற்போது ஆல்டோ காரை ‘கே10' மற்றும் ‘சிஎன்ஜி' என்ற இரண்டு வேரியண்ட்களில் மாருதி நிறுவனம் விற்பனை செய்துவருகிறது. இரண்டு வேரியண்ட்களிலும் 800சிசி இஞ்சின் உள்ளது. கே10 வேரியண்ட் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதியுடன் கிடைக்கிறது.

5 மாதங்களில் வியப்பூட்டும் சாதனை படைத்த மாருதி ஆல்டோ கார்..!!

ஆரம்ப நிலை கார் செக்மெண்டில் இந்தியாவில் தொடர்ந்து 13 ஆண்டுகளாக நம்பர்-1 இடத்தில் ஆல்டோ கார் நீடித்து வருகிறது.

5 மாதங்களில் வியப்பூட்டும் சாதனை படைத்த மாருதி ஆல்டோ கார்..!!

முதல் முறையாக கார் வாங்குபவர்களின் விருப்ப தேர்வாக மாருதி ஆல்டோ அமைந்துள்ளது. மேலும் 30 வயதுக்கு கீழ் உள்ள இளம் வாடிக்கையாளர்கள் ஆல்டோவையே அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர்.

5 மாதங்களில் வியப்பூட்டும் சாதனை படைத்த மாருதி ஆல்டோ கார்..!!

லிட்டருக்கு 24.07 கிமீ மைலேஜ் தரும் புதிய ஆல்டோ கே10 பிளஸ்-ன் விலை 3.40 லட்ச ரூபாய் (டெல்லி எக்ஸ் ஷோரூம்) என்பது குறிப்பிடத்தக்கது.

5 மாதங்களில் வியப்பூட்டும் சாதனை படைத்த மாருதி ஆல்டோ கார்..!!

பல வியப்பூட்டும் சாதனைகளை தொடர்ந்து படைத்து வரும் ஆல்டோ கார் அனைத்து செக்மெண்ட்களிலும் இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் மாடல் என்பதும் நினைவுகூறத்தக்கது.

English summary
Read in Tamil about maruti alto tops new sales figures.
Story first published: Thursday, June 29, 2017, 11:33 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark