மாருதி பலேனோ சிவிடி கியர்பாக்ஸ் மாடலில் புதிய வேரியண்ட் அறிமுகம்- விபரம்!

Written By:

மாருதி பலேனோ காரின் சிவிடி கியர்பாக்ஸ் மாடலில் புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 மாருதி பலேனோ சிவிடி காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்- விபரம்!

மாருதி பலேனோ கார் விற்பனையில் கலக்கி வருகிறது. அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரை 2 லட்சம் பலேனோ கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கிறது.

 மாருதி பலேனோ சிவிடி காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்- விபரம்!

இந்த காரின் பெட்ரோல் மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில், சிவிடி கியர்பாக்ஸ் மாடலானது டெல்ட்டா மற்றும் ஸீட்டா ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

Recommended Video - Watch Now!
2017 Mercedes-Benz GLC AMG 43 Coupe Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
 மாருதி பலேனோ சிவிடி காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்- விபரம்!

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில், சிவிடி கியர்பாக்ஸ் மாடலில் கூடுதல் வசதிகள் கொண்ட ஆல்ஃபா என்ற புதிய வேரியண்ட்டை மாருதி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

 மாருதி பலேனோ சிவிடி காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்- விபரம்!

இந்த வேரியண்ட்டில் மிரர்லிங்க் வசதி, ஆப்பிள் கார் ப்ளே மென்பொருளை நிறுவும் வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சாதனம், புரொஜெக்டர் ஹெட்லைட், ரிவர்ஸ் கேமரா உள்ளிட்ட வசதிகள் கூடுதலாக இடம்பெற்று இருக்கின்றன.

 மாருதி பலேனோ சிவிடி காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்- விபரம்!

மாருதி பலேனோ காரின் பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் கே- சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 83 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. சிவிடி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

 மாருதி பலேனோ சிவிடி காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்- விபரம்!

மாருதி பலேனோ காரின் இந்த ஆல்ஃபா வேரியண்ட் ரூ.8.34 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். இது பலேனோ சிவிடி கியர்பாக்ஸ் மாடலின் டாப் வேரியண்ட்டாக விற்பனை செய்யப்படும்.

English summary
Maruti Suzuki Baleno Alpha CVT Variant launched In India.
Story first published: Saturday, July 22, 2017, 14:35 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark