மாருதி பலேனோ ஆர்எஸ் கார் நாளை விற்பனைக்கு வருகிறது: முன்பதிவு துவங்கியது!

Written By:

மாருதி பலேனோ ஆர்எஸ் கார் இந்தியாவில் நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த காருக்கான முன்பதிவு அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டு இருக்கிறது. விரிவானத் தகவல்களை செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

மாருதி பலேனோ ஆர்எஸ் கார் நாளை விற்பனைக்கு வருகிறது: முன்பதிவு துவங்கியது!

மாருதி பலேனோ கார் வாடிக்கையாளர்களிடம் சிறந்த வரவேற்பை பெற்று விற்பனையில் அசத்தி வருகிறது. பிரிமியம் ஹேட்ச்பேக் ரக கார் மார்க்கெட்டில் சிறந்த தேர்வாகவும் தன்னை முன்னிறுத்தி உள்ளது. இந்த நிலையில், மாருதி பலேனோ காரின் சக்திவாய்ந்த மாடல் பலேனோ ஆர்எஸ் என்ற பெயரில் நாளை விற்பனைக்கு வருகிறது.

மாருதி பலேனோ ஆர்எஸ் கார் நாளை விற்பனைக்கு வருகிறது: முன்பதிவு துவங்கியது!

மாருதி நெக்ஸா ஷோரூம்களில் புதிய மாருதி பலேனோ ஆர்எஸ் காருக்கு முன்பதிவு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ரூ.11,000 முன்பணமாக செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். அனைத்து வசதிகளும் இடம்பெற்றிருக்கும் ஆல்ஃபா வேரியண்ட்டில் மட்டுமே இந்த பலேனோ ஆர்எஸ் கார் வர இருக்கிறது.

மாருதி பலேனோ ஆர்எஸ் கார் நாளை விற்பனைக்கு வருகிறது: முன்பதிவு துவங்கியது!

சாதாரண பலேனோ கார் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் கிடைக்கிறது. ஆனால், இந்த காரில் புதிய 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

மாருதி பலேனோ ஆர்எஸ் கார் நாளை விற்பனைக்கு வருகிறது: முன்பதிவு துவங்கியது!

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 100 குதிரைசக்தி திறனையும், 150 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய எஞ்சினுடன் வரும் முதல் மாருதி கார் பலேனோ ஆர்எஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கார் 0-100 கிமீ வேகத்தை 8.8 வினாடிகளில் எட்டிவிடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மாருதி பலேனோ ஆர்எஸ் கார் நாளை விற்பனைக்கு வருகிறது: முன்பதிவு துவங்கியது!

சக்திவாய்ந்த எஞ்சின் மட்டுமின்றி, சில மாற்றங்களும் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய க்ரில் அமைப்பு, முன்புறத்திலும், பின்புறத்திலும் புதிய பம்பர் அமைப்பு மூலமாக இந்த கார் வேறுபடுத்தப்பட்டு இருக்கிறது. புதிய அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

மாருதி பலேனோ ஆர்எஸ் கார் நாளை விற்பனைக்கு வருகிறது: முன்பதிவு துவங்கியது!

இந்த காரில் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யக்கூடிய ஸ்மார்ட்ப்ளே இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் இருக்கிறது. பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரையில், இரண்டு ஏர்பேக்குகள், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது.

மாருதி பலேனோ ஆர்எஸ் கார் நாளை விற்பனைக்கு வருகிறது: முன்பதிவு துவங்கியது!

ரூ.8.50 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய மாருதி பலேனோ ஆர்எஸ் கார் எதிர்பார்க்கப்படுகிறது. போலோ ஜிடி, ஃபியட் புன்ட்டோ அபார்த் போன்ற சக்திவாய்ந்த ஹேட்ச்பேக் கார்களைவிட விலை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்த காருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்பலாம்.

புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்கள்!

புதிய ஹோண்டா சிவிக் காரின் உயர்தர படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
Read in Tamil: Maruti Suzuki Baleno RS Booking Commences Through Nexa Showroom.
Story first published: Thursday, March 2, 2017, 9:36 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark