மாருதி தக்ஷின் டேர் ராலி பந்தயம்: முதல் நிலையில் முன்னிலை பெற்றவர் விபரம்!

மாருதி தக்ஷின் ராலி பந்தயத்தின் முதல்நாள் போட்டியின் நிகழ்வுகளை இந்த செய்தித் தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

By Saravana Rajan

மொபில்1 நிறுவனம் இணைந்து நடத்தும் மாருதி தக்ஷின் டேர் ராலி பந்தயத்தின் நிகழ்வுகளை டிரைவ்ஸ்பார்க் தளம் பிரத்யேகமாக வழங்கி வருகிறது. நேற்று பெங்களூரில் துவங்கிய இந்த ராலி பந்தயத்தின் முதல் நாள் நிகழ்வுகளை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

 மாருதி தக்ஷின் டேர் ராலி பந்தயம்: முதல் நாள் நிகழ்வுகள்!

மாருதி தக்ஷின் டேர் ராலி பந்தயத்தின் முதல் நாளான நேற்று, பெங்களூரில் இருந்து சித்ரதுர்கா வரை 463 கிமீ தூரத்திற்கு நடந்தது. இந்த முதலாவது நிலையில் அல்டிமேட் கார்ஸ் பிரிவில் பங்கேற்றிருக்கும் சாம்ராட் யாதவ் மற்றும் எஸ்என் நிஸாமி 4 மணி 45 நிமிடங்கள் 26 நொடிகளில் நிறைவு செய்து முன்னிலை பெற்றுள்ளனர்.

 மாருதி தக்ஷின் டேர் ராலி பந்தயம்: முதல் நாள் நிகழ்வுகள்!

டீம் மாருதி சுஸுகி அணியை சேர்ந்த சந்தீப் ஷர்மா மற்றும் கரண் ஆர்யா ஆகியோர் 2 மணி 46 நிமிடங்கள் 35 நொடிகளில் முதலாவது நிலையை கடந்து இரண்டாவது இடத்தை பெற்றனர். சுரேஷ் ராணா மற்றும் அஷ்வின் நாயக் ஆகியோர் மூன்றாவது இடத்தை பிடித்தனர். இந்த முதலாவது நிலையில் சவாலான ஆஃப்ரோடு பகுதிகளை வீரர்கள் கடந்தனர்.

 மாருதி தக்ஷின் டேர் ராலி பந்தயம்: முதல் நாள் நிகழ்வுகள்!

முதலாவது நிலையில் முன்னிலை பெற்றிருக்கும் சாம்ராட் யாதவ் குறிப்பிடுகையில்," மாருதி சுஸுகி நிறுவனம் நடத்தும் இந்த ராலி பந்தயத்தில் பங்கேற்பதில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. முதலாவது நிலையில் முன்னிலை பெற்றிருப்பது உத்வேகத்தை அளிப்பதாக உள்ளது. இதனை தக்க வைத்து வெற்றி பெறுவதற்கு முயற்சி செய்வோம்," என்று தெரிவித்தார்.

 மாருதி தக்ஷின் டேர் ராலி பந்தயம்: முதல் நாள் நிகழ்வுகள்!

அல்டிமேட் பைக்ஸ் பிரிவில் சஞ்சய் குமார் ஒரு மணி 50 நிமிடங்கள் 0.8 நொடிகளில் முதலாவது நிலையை கடந்து முன்னிலை பெற்றிருக்கிறார். இதே பிரிவில் பங்கேற்றிருக்கும் ஆர். நாகராஜ் ஒரு மணி 50 நிமிடங்கள் 42 நொடிகளில் முதல் நிலையை கடந்து இரண்டாவது இடம் பிடித்துள்ளார். அப்துல் வாலீத் மூன்றாவது இடம் பிடித்தார்.

 மாருதி தக்ஷின் டேர் ராலி பந்தயம்: முதல் நாள் நிகழ்வுகள்!

என்டியூரன்ஸ் பிரிவில் சுபிர் ராய் மற்றும் நிரவ் மேத்தா குழு முன்னிலை பெற்றிருக்கிறது. இன்று இரண்டாவது நாளாக நடைபெறும் மாருதி தக்ஷின் டேர் ராலி சித்ரதுர்காவிலேயே நடக்க இருக்கிறது. பல சவாலான நிலப்பரப்புகளையும், வழித்தடங்களையும் போட்டியாளர்கள் இன்று கடக்க வேண்டி இருக்கும்.

 மாருதி தக்ஷின் டேர் ராலி பந்தயம்: முதல் நாள் நிகழ்வுகள்!

தென் இந்தியாவில் இருந்து மேற்கு இந்தியா நோக்கி நகர்ந்து வரும் மாருதி தக்ஷின் டேர் ராலி பந்தயத்தில் பங்கேற்றிருக்கும் போட்டியாளர்களுக்கு பருவமழையும் கூடுதல் சவாலை தந்துள்ளது. இந்த பந்தயத்தின் நிகழ்வுகளை தொடர்ந்து டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படிக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 18, 2017, 13:12 [IST]
English summary
மாருதி சுஸுகி, maruti suzuki, motor sports
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+