மாருதி தக்ஷின் டேர் ராலி பந்தயம்: இரண்டாம் நாளில் முன்னிலை பெற்றவர் விபரம்!

Written By:

மாருதி தக்ஷின் டேர் ராலி பந்தயம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. நேற்றுமுன்தினம் பெங்களூரில் துவங்கிய இந்த போட்டி, நேற்றைய தினம் சித்ரதுர்காவில் உள்ள மிக சவாலான நிலப்பரப்புகளை கடக்கும் விதமாக அமைந்தது.

மாருதி தக்ஷின் டேர் ராலி பந்தயம்: இரண்டாம் நாள் முன்னிலை பெற்றவர் விபரம்!

மேலும், சித்ரதுர்காவில் அமைக்கப்பட்டு இருந்த சூப்பர் ஸ்பெஷல் ஸ்டேஜ் என்ற வீரர்களுக்கான சவாலான வழித்தடங்களில் போட்டி நடத்தப்பட்டது. மேலும், 2 கிமீ தூரத்துக்கான டர்ட் டிராக்கிலும் இந்த போட்டி நடந்தது.

மாருதி தக்ஷின் டேர் ராலி பந்தயம்: இரண்டாம் நாள் முன்னிலை பெற்றவர் விபரம்!

இந்த பரபரப்பான போட்டியின் இரண்டாம் நாள் முடிவில், மாருதி ஜிப்ஸி கார் பயன்படுத்திய சாம்ராட் யாதவ் மற்றும் அவரது கோ டிரைவர் எஸ்.என். நிஜாமி முன்னிலை பெற்றனர். இரண்டாம் நிலையை இந்த ஜோடி 4 மணி 55 நிமிடங்கள் 4 வினாடிகளில் கடந்தனர்.

மாருதி தக்ஷின் டேர் ராலி பந்தயம்: இரண்டாம் நாள் முன்னிலை பெற்றவர் விபரம்!

கிராண்ட் விட்டாரா காரில் வந்த சுரேஷ் ராணா மற்றும் அஷ்வின் நாயக் இரண்டாவது இடத்திலும், மாருதி ஜிப்ஸி எஸ்யூவியை பயன்படுத்திய சந்தீப் ஷர்மா மற்றும் அவரது கோ டிரைவர் கரண் ஆர்யா மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

மாருதி தக்ஷின் டேர் ராலி பந்தயம்: இரண்டாம் நாள் முன்னிலை பெற்றவர் விபரம்!

அல்டிமேட் பைக்ஸ் பிரிவில் டி.நட்ராஜ் முன்னிலை பெற்றுள்ளார். இவரைத் தொடர்நந்து அப்துல் வாலீத் மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்தனர்.

மாருதி தக்ஷின் டேர் ராலி பந்தயம்: இரண்டாம் நாள் முன்னிலை பெற்றவர் விபரம்!

இன்றைய போட்டி சித்ரதுர்காவில் இருந்து பெல்காம் வரை நடக்கிறது. இந்த போட்டியின் நிகழ்வுகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படிக்கலாம்.

English summary
Samrat Yadav and S N Nizami maintained the lead on the second day of the Maruti Suzuki Dakshin Dare too. Their Maruti Suzuki Gypsy covered the second leg of the rally in 04:55:04.
Story first published: Wednesday, July 19, 2017, 14:01 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark