விற்பனை செய்யப்பட்ட 21,494 டிசையர் காரை திரும்பப் பெற மாருதி சுஸுகி முடிவு...!!

விற்பனை செய்யப்பட்ட 21,494 டிசையர் காரை திரும்பப் பெற மாருதி சுஸுகி முடிவு...!!

By Azhagar

இந்தியாவில் முன்னணி விற்பனை திறனை பெற்றுள்ள கார் மாடல்களில் ஒன்றான டிசையர் காரை மாருதி சுஸுகி திரும்பப் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

காம்பேக்ட் செடான் டிசையர் காரை திரும்பப் பெறும் மாருதி சுஸுகி..!!

பின்புற வீல் ஹாப் கோளாறு காரணமாக டிசையர் கார் மீது பல புகார்கள் எழுந்து வந்த நிலையில், விரைவில் குறிப்பிட்ட டிசையர் கார்களை மாருதி சுஸுகி திரும்பப்பெறவுள்ளது.

காம்பேக்ட் செடான் டிசையர் காரை திரும்பப் பெறும் மாருதி சுஸுகி..!!

அதன்படி கடந்த பிப்ரவரி 23 முதல் ஜூலை 10ம் தேதி வரை இந்தியாவில் விற்பனையான சுமார் 21,494 டிசையர் கார்களை மாருதி சுஸுகி திரும்பப் பெறுகிறது.

காம்பேக்ட் செடான் டிசையர் காரை திரும்பப் பெறும் மாருதி சுஸுகி..!!

இதுக்குறித்த மாருதி சுஸுகி இந்தியாவிற்காக இயங்கி வரும் அதிகாராப்பூர்வ வலைதள பக்கத்திலும் இதற்கான தகவலை மாருதி சுஸுகி பகிர்ந்துள்ளது.

காம்பேக்ட் செடான் டிசையர் காரை திரும்பப் பெறும் மாருதி சுஸுகி..!!

பின்புற வீல் ஹாப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள டிசையர் கார்களை பயன்படுத்துவோருக்கு அக்டோபர் 3ம் தேதி முதல் மாருதி சுஸுகி தகவல் அனுப்பி வருகிறது.

காம்பேக்ட் செடான் டிசையர் காரை திரும்பப் பெறும் மாருதி சுஸுகி..!!

பாதிக்கப்பட்ட கார்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அருகிலிருக்கும் மாருதி சுஸுகி சர்வீஸ் மையங்களில் சென்று இலவசமாக டிசையர் மாடலில் பழுதை நீக்கிக்கொள்ளலாம்.

காம்பேக்ட் செடான் டிசையர் காரை திரும்பப் பெறும் மாருதி சுஸுகி..!!

தாங்கள் பயன்படுத்தி வரும் கார் பின்புற வீல்ஹாப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை பயனர்கள், கார் குறியீட்டு எண் கொண்டு மாருதி சுசுகி வலைத்தளத்தில் பதிவிட்டு சரிபார்த்து கொள்ளலாம்.

Recommended Video

[Tamil] 2017 Datsun redi-GO 1.0 Litre Launched In India - DriveSpark
காம்பேக்ட் செடான் டிசையர் காரை திரும்பப் பெறும் மாருதி சுஸுகி..!!

பல எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்திய சந்தையில் களமிறங்கிய மாருதி சுஸுகி டிசையர் கார், கடந்த 5 மாதங்களுக்கான விற்பனையில் சுமார் ஒரு லட்சம் எண்ணிக்கையை கடந்து விற்பனை திறனை பெற்றுள்ளது.

காம்பேக்ட் செடான் டிசையர் காரை திரும்பப் பெறும் மாருதி சுஸுகி..!!

புதிய தலைமுறை ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் காரை பின்பற்றி, 2017 டிசையர் காரின் வெளிப்புற மற்றும் உட்புற வடிவமைப்புகளை மாருதி சுஸுகி உருவாக்கியது.

காம்பேக்ட் செடான் டிசையர் காரை திரும்பப் பெறும் மாருதி சுஸுகி..!!

1.2 லிட்டர் கே-சிரீஸ் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டிடிஐஎஸ் டீசல் என இருவேறு தேர்வுகள் கொண்ட எஞ்சின்களில் மாருதி சுஸுகி டிசையர் கார் விற்பனைக்கு கிடைக்கிறது.

காம்பேக்ட் செடான் டிசையர் காரை திரும்பப் பெறும் மாருதி சுஸுகி..!!

பெட்ரோல் மாடல் டிசையர் கார் 82 பிஎச்பி மற்றும் 113 என்.எம் டார்க் திறனை வழங்கும். அதேபோல டீசல் மாடல் 74 பிஎச்பி பவர் மற்றும் 190 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

காம்பேக்ட் செடான் டிசையர் காரை திரும்பப் பெறும் மாருதி சுஸுகி..!!

செயல்திறனுக்கு ஏற்றவாறு டிசையர் கார் மேனுவல் மற்றும் ஆட்டோமேடட் என இருவேறு கியர்பாக்ஸ் தேவைகளில் விற்பனைக்கு உள்ளது.

காம்பேக்ட் செடான் டிசையர் காரை திரும்பப் பெறும் மாருதி சுஸுகி..!!

காம்பேக்ட் வடிவமைப்பு மற்றும் தரத்திற்கு தக்கவாறான செயல்திறன் என பட்ஜெட் பயனர்களுக்கு முதல் தேர்வாக இருக்கும் மாருதி சுஸுகி டிசையர் கார், புக்கிங்கை தொடர்ந்து மூன்று மாத காலம் காத்திருப்பிற்கு பிறகு வாடிக்கையாளர்களை சென்றடைகிறது.

Most Read Articles
English summary
Read in Tamil: Maruti Suzuki has issued a recall of the Dzire compact sedan in the country. Click for Details...
Story first published: Saturday, December 9, 2017, 17:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X