மின்சார வாகன தயாரிப்பில் கால்பதிக்க இறுதிமுடிவு எடுத்தது மாருதி சுஸுகி... அறிவிப்பு விரைவில்..!!

மின்சார வாகன தயாரிப்பில் கால்பதிக்க இறுதிமுடிவு எடுத்தது மாருதி சுஸுகி... அறிவிப்பு விரைவில்..!!

By Azhagar

இந்தியாவில் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுஸுகி, விரைவில் மின்சார வாகன உற்பத்தியிலும் ஒரு கலக்க கலக்கவுள்ளது.

அதற்காக 2020ம் ஆண்டில் மாருதி சுஸுகி தனது முதல் மின்சார காரை அறிமுகம் செய்யவுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மின்சார வாகன தயாரிப்பில் கால்பதிக்க மாருதி சுஸுகி முடிவு..!!

மாருதி சுஸுகியின் தலைவர் ஆர்.சி. பார்கவா அந்நிறுவன்ம் மின்சார கார் தயாரிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த கார் சுஸுகி மற்றும் டொயோட்டாவின் கூட்டணியில் உருவாகும் என ஆர். பார்கவா தெரிவித்துள்ளார்.

மின்சார வாகன தயாரிப்பில் கால்பதிக்க மாருதி சுஸுகி முடிவு..!!

இந்திய அரசு வாகன துறையை முழுவதுமாக 2030ம் ஆண்டிற்குள் மின்சார ஆற்றலுக்கு மாற்ற முயன்று வருகிறது. இதற்கு பிறகே மாருதி சுஸுகி தனது மின்சார வாகன தயாரிப்பிற்கான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

மின்சார வாகன தயாரிப்பில் கால்பதிக்க மாருதி சுஸுகி முடிவு..!!

பார்கவா தெரிவித்துள்ளதன் படி, மின்சார வாகன தயாரிப்பிற்கு என்று பிரத்யேகமான எந்தவொரு தொழில்நுட்பமும் மாருதி சுஸுகியிடம் இல்லை.

இருந்தாலும் எதிர்கால வாகனத்துறை மின்சார ஆற்றலில் தான் இயங்கும் என்பதால் இந்த முடிவை தற்போது அது தெரிவித்துள்ளது.

மின்சார வாகன தயாரிப்பில் கால்பதிக்க மாருதி சுஸுகி முடிவு..!!

சுஸுகி-டொயோட்டாவின் கூட்டணி மூலம் மின்சார வாகன தயாரிப்பிற்கான தொழில்நுட்பம் உருவாக்கப்படும். அனைவருக்கும் ஏற்ற வகையிலான தேவைகளோடு தான் மாருதி சுஸுகியின் மின்சார கார் தயாராகிறது.

Recommended Video

Horrifying Footage Of A Cargo Truck Going In Reverse, Without A Driver - DriveSpark
மின்சார வாகன தயாரிப்பில் கால்பதிக்க மாருதி சுஸுகி முடிவு..!!

ஆனால் அந்த காரின் வடிவமைப்பு பணிகள் மற்றும் செயல்திறன் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்ட போது, அதற்கு பதில் தர மறுத்திவிட்டார் ஆர். பார்க்கவா.

மின்சார வாகன தயாரிப்பில் கால்பதிக்க மாருதி சுஸுகி முடிவு..!!

இதற்கிடையில் மின்சார கார் தயாரிப்புகள் மற்றும் சந்தை நிலவரத்தை குறித்த ஆய்வு ஒன்றை வாடிக்கையாளர்கள் மத்தியில் மாருதி சுஸுகி முன்னெடுக்க உள்ளது.

மின்சார வாகன தயாரிப்பில் கால்பதிக்க மாருதி சுஸுகி முடிவு..!!

விரைவில் தொடங்கப்படும் இந்த ஆய்வு, பிப்ரவரி 2018 முன்னதாக முடிக்கப்படும். அதில் கிடைக்கும் முடிவுகளுடன் 2020ம்ஆண்டிற்கான தனது மின்சார காரை மாருதி சுஸுகி உருவாக்கும்.

மின்சார வாகன தயாரிப்பில் கால்பதிக்க மாருதி சுஸுகி முடிவு..!!

மின்சார வாகன தயாரிப்பு மட்டுமில்லாமல், அதற்குரிய கட்டமைப்புகளையும் இந்தியாவில் தொடங்குகிறது மாருதி சுஸுகி. அவற்றை கட்டுமானப்படுத்த எந்தவொரு வெளிநாட்டு நிறுவனத்திடமும் மாருதி சுஸுகி கூட்டணி மேற்கொள்ளாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மின்சார வாகன தயாரிப்பில் கால்பதிக்க மாருதி சுஸுகி முடிவு..!!

இ2ஒ மற்றும் இவெரிட்டோ மாடல் மூலம் மஹிந்திரா மின்சார கார்களை விற்பனை செய்து வருகிறது. இதுதவிர மேலும் 3 புதிய மின்சார கார்களை 2020ம் ஆண்டிற்குள் மஹிந்திரா வெளியிடவுள்ளது.

மின்சார வாகன தயாரிப்பில் கால்பதிக்க மாருதி சுஸுகி முடிவு..!!

கமர்ஷியல் தேவைகளை தவிர்த்து, டாடா நிறுவனம் ஏற்கனவே மின்சார வாகன உற்பத்தியில் கால்பதித்துள்ளது. டிகோர் மின்சார காரின் தயாரிப்பு பணிகளை முடித்திருக்கும் டாடா, விரைவில் 10,000 மின்சார கார்களை மத்திய அரசிற்கு வழங்குகிறது.

மின்சார வாகன தயாரிப்பில் கால்பதிக்க மாருதி சுஸுகி முடிவு..!!

மின்சார வாகனத்திற்கான தயாரிப்பு மற்றும் அறிவிப்புகள் தொடர்ந்துக்கொண்டே இருந்தாலும், இந்தியாவில் அதை சாத்தியப்படுத்த தாமதமாவதற்கு இன்னும் இரண்டும் விஷயங்கள் காரணமாக உள்ளன.

மின்சார வாகன தயாரிப்பில் கால்பதிக்க மாருதி சுஸுகி முடிவு..!!

ஒன்று விலை மற்றொரு கட்டமைப்பு. மின்சார கார்களுக்கான விலை மற்றும் மதிப்புகள் பற்றிய தெளிவான அம்சங்கள் இன்னும் பொதுமக்களை சென்றடையவில்லை.

மின்சார வாகன தயாரிப்பில் கால்பதிக்க மாருதி சுஸுகி முடிவு..!!

இவற்றை சாத்தியப்படுத்தி விட்டாலே இந்தியாவில் மின்சார வாகன விற்பனைக்கான சந்தையை நிலைநிறுத்தலாம். மேலும் மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் - ஐயன் பேட்டரிகள் விலை உயர்ந்தவை.

மின்சார வாகன தயாரிப்பில் கால்பதிக்க மாருதி சுஸுகி முடிவு..!!

அதை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தால், அதற்கான மதிப்பு கூடும். இதனால் கார்களின் விலையும் ஏறும். இதை கருத்தில் கொண்டு மின்சார கார் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை இந்தியாவில் கட்டமைக்க வேண்டும்.

மின்சார வாகன தயாரிப்பில் கால்பதிக்க மாருதி சுஸுகி முடிவு..!!

மாருதி சுஸூகியும் தற்போது மின்சார வகான உற்பத்தியில் களம் காணயிருப்பது, இந்திய வாகன துறையில் புதிய உற்சாகத்தை பாயிச்சிருக்கிறது.

மின்சார வாகன தயாரிப்பில் கால்பதிக்க மாருதி சுஸுகி முடிவு..!!

எரிவாயு திறன் பெற்ற வாகனங்களில் அனைவருக்கும் ஏற்ற கார்களை தயாரிப்பதில் மாருதி சுஸுகி இந்தியளவில் முன்னிலையில் இருந்து வருகிறது.

மின்சார வாகன தயாரிப்பில் கால்பதிக்க மாருதி சுஸுகி முடிவு..!!

அதேபோல மின்சார வாகன துறையையும் மாருதி சுஸுகி நடைமுறைப்படுத்தி பின்பற்றினால், இந்திய அரசாங்கத்தின் மின்சார வாகன திட்டத்திற்கு பெரிய ஊக்கமாக அமையும்.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

More from DriveSpark

Article Published On: Friday, December 22, 2017, 15:48 [IST]
English summary
Read in Tamil: Maruti Suzuki To Launch Its First Electric Car In India. Click for Details...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+