மாருதிசுசுகி கிராண்ட் விட்டாரா கார்கள் திரும்பப்பெறப்படுகின்றன

கிராண்ட் விட்டாரா கார்களை திரும்பப்பெறுவதாக மாருதிசுசுகி நிறுவனம் அறிவித்துள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

மாருதிசுசுகி நிறுவனம் அதன் கிராண்ட் விட்டாரா கார்களை இந்தியாவில் திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது. மேனுவல் கியர் பாக்ஸ்-ல் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த திரும்பப்பெறும் நடவடிக்கையை மேற்கொள்கிறது மாருதிசுசுகி.

கிராண்ட் விட்டாரா கார்களை திரும்பப்பெறும் மாருதிசுசுகி

ஜூன் 2008 முதல் மே 2013 ஆண்டு காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட கிராண்ட் விட்டாரா கார்களை திரும்பப்பெறுவதாக மாருதிசுசுகி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் மொத்தமாக 151 கிராண்ட் விட்டாரா கார்களை விற்பனை செய்துள்ளது மாருதி, தற்போது இக்கார்களை திரும்பப்பெறும் அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கிராண்ட் விட்டாரா கார்களை திரும்பப்பெறும் மாருதிசுசுகி

ரூ. 22,68,000 லட்சம் என்ற விலையில் தொடங்கும் கிராண்ட் விட்டாரா எஸ்யுவி கார்களின் மேனுவல் டிரான்ஸ்மிஷனில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே அதனை மாருதி நிறுவனம் இலவசமாக சரி செய்து தர தற்போது அழைப்பு விடுத்துள்ளது.

கிராண்ட் விட்டாரா கார்களை திரும்பப்பெறும் மாருதிசுசுகி

இது தொடர்பான ஒரு அறிவிப்பை தங்களது இணையதளத்தில் வெளியிட்டுள்ள மாருதிசுசுகி நிறுவனம், பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள கார்களில் உள்ள கோளாரினை தங்கள் டீலர்கள் மூலமாக இலவசமாக சரி செய்து தரப்போவதாக தெரிவித்துள்ளது. இதற்காக மாருதி டீலர்கள் கிராண்ட் விட்டாரா உரிமையாளர்களை தொடர்பு கொள்வர் என தெரிகிறது.

கிராண்ட் விட்டாரா கார்களை திரும்பப்பெறும் மாருதிசுசுகி

கிராண்ட் விட்டாரா கார்களின் உரிமையாளர்கள் மாருதி நிறுவனத்தின் இணையதளத்தில் சென்று தங்களது வாகன அடையாள எண் அல்லது சேசிஸ் எண் கொண்டு, தங்களது கார்கள் பழுதானவையா என தெரிந்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிராண்ட் விட்டாரா கார்களை திரும்பப்பெறும் மாருதிசுசுகி

உலகலாவிய திரும்பப்பெரும் நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே இது உள்ளது. ஏனெனில் கிராண்ட் விட்டாரா கார்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை அல்ல, வெளிநாட்டு தொழிற்சாலைகளில் முழுவதுமாக அசெம்பிள் செய்யப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கிராண்ட் விட்டாரா கார்களை திரும்பப்பெறும் மாருதிசுசுகி

கிராண்ட் விட்டாராவில் நான்கு சிலிண்டர்கள் கொண்ட 2.4 லிட்டர் விவிடி பெட்ரோல் இஞ்சின் உள்ளது. இவை அதிகபட்சமாஜ 163.5 பிஹச்பி ஆற்றலையும், 225 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகும். இவை 4 ஸ்பீடு ஆட்டோமேடிக் அல்லது 5 ஸ்பீடு மேனுவல் என இராண்டு கியர் பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வருகின்றன.

மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா காரின் படங்கள்:

More from DriveSpark

Article Published On: Friday, March 3, 2017, 15:38 [IST]
English summary
Maruti Suzuki has recalled 151 Grand Vitara in India; the affected model was built between June 2008 - May 2013. The recall has been announced to fix a fault in the manual gearbox.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+