இந்திய ராணுவத்தின் பாராமுகத்தால் மாருதி ஜிப்ஸி உற்பத்தி நிறுத்தம்?

Written By:

இந்திய ராணுவத்தின் விருப்ப வாகனமாக விளங்கி வருவது ஆஃப் ரோடிங்கில் சிறந்து விளங்கும் மாருதி ஜிப்ஸிக்களே. ஆனால் தற்போது அதன் உற்பத்தியை மாருதி நிறுவனம் நிறுத்தப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதற்காக இந்த திடீர் முடிவு என சற்று விளக்கமாக தெரிந்துகொள்வோம்.

முடிவுக்கு வரும் மாருதி ஜிப்ஸியின் சகாப்தம்!

இந்திய எல்லையில் கடுமையான சூழ்நிலையிலும், காலநிலையிலும், நிலப்பரப்பிலும் பணியாற்றி வருபவர்கள் ராணுவத்தினர். அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வாகனமாக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக விளங்கி வருவது ஜிப்ஸிக்களே. ராணுவம் மட்டுமல்லாது துணை ராணுவம், எல்லைக்கட்டுப்பாட்டுத் துறையினரும் இதனை உபயோகப்படுத்தி வருகின்றனர்.

முடிவுக்கு வரும் மாருதி ஜிப்ஸியின் சகாப்தம்!

மாருதி ஜிப்ஸிக்கள் கடின நிலப்பரப்பிலும், காலநிலையிலும் நன்கு இயங்கும் தன்மை கொண்டவை. குளிர், வெயில், வெள்ளம் போன்ற இயற்கையின் எந்த தன்மையையும் எதிர்கொள்ளும் ஆற்றல் பெற்றவையாக விளங்குவதனால் அதனை இந்திய ராணுவத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.

முடிவுக்கு வரும் மாருதி ஜிப்ஸியின் சகாப்தம்!

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சஃபாரி ஸ்டார்ம் மாடல் வாகனங்களை கொள்முதல் செய்ய இந்திய ராணுவம் டாடா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டது.

முடிவுக்கு வரும் மாருதி ஜிப்ஸியின் சகாப்தம்!

இந்த ஒப்பந்தத்தின்படி தற்போது, 3,200 சஃபாரி ஸ்டார்ம் எஸ்யுவிக்களை கொள்முதல் செய்ய உள்ளது இந்திய ராணுவம். இனிவரும் காலங்களில் இந்திய ராணுவத்தில் ஜிப்ஸிக்களுக்கு மாற்றாக சஃபாரி ஸ்டார்ம் விளங்கப்போகிறது.

முடிவுக்கு வரும் மாருதி ஜிப்ஸியின் சகாப்தம்!

1985ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜிப்ஸிக்கள், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவ உபயோகத்தில் இருந்து வருகிறது. இந்தியாவில் உள்ள ஒரேயொரு 4*4 பெட்ரோல் மாடல் வாகனம் ஜிப்ஸி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட ஜிப்ஸிகளின் சகாப்தம் நிறைவடைய உள்ளது.

முடிவுக்கு வரும் மாருதி ஜிப்ஸியின் சகாப்தம்!

அனைத்து காலநிலையிலும் சிறந்து இயங்கும், சிறந்த ஆஃப் ரோடிங் வாகனம் மற்றும் குறைந்த செலவிலான பராமரிப்பு போன்ற பல முக்கிய அம்சங்களை கொண்டு விளங்கியதால் ஜிப்ஸிக்களை இந்திய ராணுவம் மிகவும் விரும்பியது.

முடிவுக்கு வரும் மாருதி ஜிப்ஸியின் சகாப்தம்!

ஆயினும் மாறிவரும் சூழ்நிலைகளுக்கு தகுந்தபடியான மாற்றங்களை ஜிப்ஸி கண்டிருக்கவில்லை. இதனால், ரானுவத்தின்பார்வை மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட டாடா சஃபாரி ஸ்டார்ம் நோக்கி திரும்பியது. மேலும் மாற்றம் தேவை என்ற அடிப்படையிலும் ராணுவம் இந்த முடிவை எடுத்துள்ளது.

முடிவுக்கு வரும் மாருதி ஜிப்ஸியின் சகாப்தம்!

தற்போது விற்பனையில் உள்ள ஜிப்ஸியில், பாரத் ஸ்டேஜ்-4 தரச் சான்று பெற்ற 1.3 லிட்டர் பெட்ரோல் இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 80 பிஹச்பி ஆற்றலையும், 103 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகும். இது 4*4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது.

முடிவுக்கு வரும் மாருதி ஜிப்ஸியின் சகாப்தம்!

ராணுவம் கொள்முதல் செய்யவுள்ள டாடா சஃபாரி ஸ்டார்ம்ல், 2.2 லிட்டர் டீசல் இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 156 பிஹச்பி ஆற்றலையும் 400 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகும். இதில் 6 ஸ்பீடு மேனுவக் கியர் பாக்ஸ் உள்ளது. இதனை ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தில் இணைத்துக் கொள்ளலாம். இதுவும் கடின நிலப்பரப்பில் பயணிக்க ஏற்ற வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது.

டாடா சஃபாரி ஸ்டார்ம் படங்கள்:

English summary
The Gypsy has been the preferred choice of the Indian Army due to its ability to work in all weather conditions and off-road capability along with easy and low-cost maintenance.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark