மாருதி இக்னிஸ் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலில் புதிய வேரியண்ட் அறிமுகம்!

Written By:

மாருதி இக்னிஸ் காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலில் புதிய வேரியண்ட் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி இக்னிஸ் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலில் புதிய வேரியண்ட் அறிமுகம்!

மாருதி இக்னிஸ் காரின் ஏஎம்டி மாடலில் ஆல்ஃபா என்ற புதிய வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த வேரியண்ட்டில் அதிகபட்சமான வசதிகள் இடம்பெற்றிருக்கிறது. இதுவே மாருதி இக்னிஸ் காரின் டாப் வேரியண்ட் மாடலாக விற்பனை செய்யப்படும்.

மாருதி இக்னிஸ் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலில் புதிய வேரியண்ட் அறிமுகம்!

புதிய மாருதி இக்னிஸ் ஏஎம்டி மாடலின் ஆல்ஃபா வேரியண்ட்டில் கூரைக்கு தனி வண்ணம் கொடுக்கப்பட்ட இரட்டை வண்ணக் கலவையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மூன்று விதமான இரட்டை வண்ணங்களில் கிடைக்கும்.

Recommended Video - Watch Now!
2018 Hyundai Verna Indian Model Unveiled | In Tamil - DriveSpark தமிழ்
மாருதி இக்னிஸ் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலில் புதிய வேரியண்ட் அறிமுகம்!

எல்இடி பகல்நேர விளக்குகள், ஃப்ளோட்டிங் தொடுதிரை அமைப்புடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கின்றன. இந்த காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமானது, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும்.

மாருதி இக்னிஸ் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலில் புதிய வேரியண்ட் அறிமுகம்!

வெளிப்புற வண்ணத்திற்கு தக்கவாறு உட்புறத்தில் சில அலங்கார அம்சங்கள் இடம்பெற்று இருக்கிறது. இந்த காரில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன. அனைத்து சக்கரங்களுக்கும் பிரேக் பவரை சரியான விகிதத்தில் பிரித்தனுப்பும் இபிடி நுட்பம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டியூவல் ஏர்பேக்குகள், ஐசோஃபிக்ஸ் சைல்டு மவுண்ட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

மாருதி இக்னிஸ் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலில் புதிய வேரியண்ட் அறிமுகம்!

இந்த புதிய ஆல்ஃபா வேரியண்ட் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல்களில் கிடைக்கும். பெட்ரோல் மாடலில் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.2 லிட்டர் எஞ்சின் இருக்கிறது. டீசல் மாடலில் 74 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.3 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

மாருதி இக்னிஸ் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலில் புதிய வேரியண்ட் அறிமுகம்!

மாருதி இக்னிஸ் பெட்ரோல் ஏஎம்டி மாடலின் ஆல்ஃபா வேரியண்ட் ரூ.7.01 லட்சத்திலும், டீசல் ஏஎம்டி மாடலின் ஆல்ஃபா வேரியண்ட் ரூ.8.08 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

English summary
Maruti Suzuki Ignis Alpha AMT launched in India. The Maruti Suzuki Ignis Alpha AMT is priced at Rs 7,01,143 for the petrol and Rs 8,08,050 for the diesel (prices ex-showroom, Delhi).
Story first published: Saturday, August 5, 2017, 13:59 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark