மாருதி இக்னிஸ் காரின் விற்பனை அமோகம்!

மாருதி இக்னிஸ் காரின் விற்பனை 10,000ஐ கடந்துள்ளதாக அந்நிறுவனத்தின் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

By Saravana Rajan

கடந்த ஜனவரி மாதம் 13ந் தேதி மாருதி இக்னிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. விற்பனைக்கு வந்து ஒன்றரை மாதங்கள் ஆகும் நிலையில், இதுவரை 10,000க்கும் அதிகமான இக்னிஸ் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாக மாருதி நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு தலைமை அதிகாரி ஆர்.சி.கல்சி தெரிவித்தார்.

மாருதி இக்னிஸ் காரின் விற்பனை அமோகம்!

இளம் வாடிக்கையாளர்களை மனதில் வைத்து இந்த க்ராஸ்ஓவர் ரக காரை மாருதி களமிறக்கியது. எதிர்பார்த்தது போலவே இக்னிஸ் காருக்கு மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது ஹரியான மாநிலம் குர்கானில் உள்ள ஆலையில் மாதத்திற்கு 4,500 முதல் 5,000 இக்னிஸ் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

மாருதி இக்னிஸ் காரின் விற்பனை அமோகம்!

இதுவரை இக்னிஸ் காருக்கு 20,000 அதிகமான முன்பதிவுகளை பெற்றுள்ளது. அதில், 10,000 கார்கள் டெலிவிரி கொடுக்கப்பட்டுள்ளன. 12,000க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

மாருதி இக்னிஸ் காரின் விற்பனை அமோகம்!

இந்த காருக்கு வேரியண்ட்டை பொறுத்து 2 முதல் 3 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நிலவுகிறது. இக்னிஸ் காருக்கு முன்பதிவு தொடர்ந்து சிறப்பாக இருந்து வருவதாகவும் ஆர்.சி.கல்சி தெரிவித்தார்.

மாருதி இக்னிஸ் காரின் விற்பனை அமோகம்!

இதனிடையே, மாருதி இக்னிஸ் கார் சிறப்பான வரவேற்பை பெற்றிருப்பதற்கு இளம் வாடிக்கையாளர்களை கவரும் ஏராளமான அம்சங்கள் இடம்பெற்று இருக்கின்றன. க்ராஸ்ஓவர் ரக கார் மாடலாக மிக வித்தியாசமான டிசைனுடன் மாருதி இக்னிஸ் கார் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

மாருதி இக்னிஸ் காரின் விற்பனை அமோகம்!

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் இதற்கு வலு சேர்க்கின்றன. இந்த காருக்கு கூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் வண்ணத்தில் அலங்காரம் செய்து கொள்வதற்கான வாய்ப்பும் உள்ளது. டச்ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது.

மாருதி இக்னிஸ் காரின் விற்பனை அமோகம்!

மாருதி இக்னிஸ் கார் 82 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 74 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்த 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் கிடைக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

மாருதி இக்னிஸ் காரின் விற்பனை அமோகம்!

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.89 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 26.80 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இது தினசரி பயன்பாட்டுக்கு மிக உகந்த காராக இருக்கும்.

மாருதி இக்னிஸ் காரின் விற்பனை அமோகம்!

மிகச் சிறப்பான அம்சங்களும் சரியான விலையில் இந்த கார் கிடைக்கிறது. ரூ.4.59 லட்சம் முதல் ரூ.7.80 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது. மாருதி இக்னிஸ் காருக்கு ஆன்லைன் மூலமாக அதிக அளவில் முன்பதிவு கிடைத்து வருவதாக மாருதி கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய மாருதி இக்னிஸ் காரின் படங்கள்!

புதிய மாருதி இக்னிஸ் காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, March 6, 2017, 9:53 [IST]
English summary
Read in Tamil: Maruti Suzuki Ignis sales has exceeded 10,000 since India launch.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+