ஆல்டோ தொடங்கி எஸ்-கிராஸ் வரை விலை உயர்வு பெறும் மாருதி சுஸுகி கார்கள்... முழுத் தகவல்கள்..!!
ஆல்டோ தொடங்கி எஸ்-கிராஸ் வரை விலை உயர்வு பெறும் மாருதி சுஸுகி கார்கள்... முழுத் தகவல்கள்..!!
2018 ஜனவரி முதல் 2% விலை உயர்வில் கார்கள் இந்தியாவில் விற்பனையாகும் என மாருதி சுஸுகி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வாகன உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் விலை ஏற்றத்தை சந்தித்துள்ளன. இதனால் கார்களின் விலை உயரும் என முன்பே எதிர்பார்க்கப்பட்டது.
Recommended Video


அதை கருத்தில் கொண்டு, மஹிந்திரா, டொயோட்டா, ஹோண்டா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் ஏற்கனவே அவை தயாரித்து விற்பனை செய்யும் கார்களின் விலையை உயர்த்தி அறிவித்தன.

புதிய விலை பட்டியல் வரும் 2018 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ள சூழலில், இந்த வரிசையில் இந்தியாவின் முதன்மை கார் மேக்கராக இருக்கும் மாருதி சுஸுகி நிறுவனமும் இணைந்துள்ளது.

கார் உற்பத்திக்கான செலவீனங்கள் அதிகரித்து வரும் காரணத்தினால், அதனை ஈடு செய்யும் பொருட்டு 2018 ஜனவரி 1 முதல் கார்களின் விலை உயர்த்தப்படும் என மாருதி சுஸுகி இந்தியா கூறியுள்ளது.

இந்தியாவில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் ரூ. 2.45 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனையாகும் ஆல்டோ காரில் இருந்து ரூ.11.29 லட்சம் விலை பெறும் எஸ்-கிராஸ் கார் வரை

அனைத்து ரக கார்களின் விலையில் 2018 ஜனவரி 1 முதல் 2% வரை உயர்வு இருக்கும் என மாருதி சுஸுகி இந்தியா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அது வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், உற்பத்திக்கு வேண்டிய மூலபொருட்களின் விலை ஏற்றத்தை கருத்தில் கொண்டு, கார்களுக்கான விலையை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

எரிபொருள் தேர்வுகளோடு இந்த விலை ஏற்றம் மாறுபட்டாலும், இந்தியாவில் ஜனவரி 1 முதல் விற்பனையாகும் மாருதி சுஸுகி கார்கள் அதிகப்பட்சமாக 2% வரை விலை உயர்வை சந்திக்கும் என கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








