பல மாத கோரிக்கையை ஏற்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை அப்டேட் செய்த மாருதி சுஸுகி..!!
பல மாத கோரிக்கையை ஏற்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை அப்டேட் செய்த மாருதி சுஸுகி..!!
மாருதி சுஸுகி கார்களில் இடம்பெறும் ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெய்ன்மென்ட் சிஸ்டம் மேம்படுத்தப்பட்ட வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இனி அனைத்து விதமான மாருதி சுஸுகி பயணிகள் ரக கார்களில்இடம்பெறும் இன்ஃபோடெயின்மென்ட் தொழில்நுட்பத்தில் ஏற்கனவே இருந்த ஆப்பிள் கார்பிளே உடன் ஆன்ட்ராய்டு ஆட்டோ அம்சமும் இடம்பெறுகிறது. இவற்றுடன் மிரர்லிங் சேவையும் இருக்கும்.

மாருதி சுஸுகியின் ஸ்மார்ட்பிளே இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டத்தில் இனி உங்களது ஸ்மார்ட்ஃபோன்களை இணைத்துக்கொள்ளலாம்.
இதன்மூலம் குரலை அறிதல், கைப்பேசி அழைப்பு, எஸ்எம்எஸ் தகவல்களை படிப்பது, இசை மற்றும் நேவிகேஷன் அம்சங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

தொடுதிரைக்கொண்ட இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டத்தை மாருதி சுஸுகி சியாஸ் காரில் தான் அறிமுகப்படுத்தியது.
பிறகு அதற்கான தேவை அதிகரிக்க, அந்நிறுவனம் தொடர்ந்து தனது பிரபல மாடல் கார்களிலும் இடம்பெற செய்தது.

அந்த வரிசையில் சியாஸ் காருக்கு பிறகு, எஸ்-கிராஸ், பலேனோ, எர்டிகா மற்றும் விட்டாரா பிரஸ்ஸா போன்ற மாடல்கள் ஆப்பிள் கார்பிளே உடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் தயாரிக்கப்பட்டன.

ஆண்ட்ராய்டு ஆட்டோ அம்சத்தை மாருதி சுஸுகி முதன்முதலாக இக்னிஸ் காரில் இடம்பெறச் செய்தது. இந்த அப்டேட்டிற்கு முன்னதாக மாருதி சுஸுகி கார்களில் ஆண்ட்ராய்டு ஆட்டோ அம்சம் இக்னிஸ் மற்றும் டிசையரில் மட்டுமே இடம்பெற்றிருந்தன.

புதிய இன்ஃபொடெயின்மென்ட் அப்டேட்டுகளை விரும்பும் வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள மாருதி சுஸுகி சர்வீஸ் மையங்களை அணுகவும்.
மார்ச் 31, 2018 வரை இந்த அப்டேஷன் தொடர்பான கட்டமைப்புகளை இலவசமாகவே பெறலாம் என மாருதி சுஸுகி குறிப்பிட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்பிளே இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம் எஸ்-கிராஸ் (ஆல்ஃபா & ஜீட்டா), சியாஸ் (ஆல்ஃபா), பலேனோ (ஆல்ஃபா_, இக்னிஸ் (ஆல்ஃபா), விட்டாரா பிரிஸ்ஸா (இசட்+), எர்டிகா (இசட்+) மற்றும் டிசையர் (இசட்+) ஆகிய மாடல்களில் இடம்பெறும்.

இந்தியாவில் முதன்மையான கார் மேக்கரான மாருதி சுஸுகி தனது கார்களில் ஆண்ட்ராய்டு ஆட்டோ தொழில்நுட்பத்தை இடம்பெற செய்திருப்பது மகிழ்ச்சி.

தற்போதைய காலத்தில் பெரும்பாலானவர்கள் ஸ்மார்ட்ஃபோன்களை பயன்படுத்துகின்றனர். அதனால் இந்த அப்டேஷன் நிச்சயம் பல மக்கள் மத்தியில் வரவேற்பு பெறும்.

பல ஆண்டுகளாக இந்த தேவை கோரப்பட்டு வந்த நிலையில், ஸ்மார்ட்ஃபோனிற்கு உரிய ஆண்ட்ராய்டு ஆட்டோ சேவை இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டத்தில் இடம்பெறிருப்பது மாருதி சுஸுகி-க்கு மேலும் விற்பனையை அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications








