மாருதி ஸ்விஃப்ட் காருக்கு 120 தேர்வுகளுடன் கூடிய ஐ-கிரேயெட் கஸ்டமைஸ் கான்செப்ட் அறிமுகம்.!!

Written By:

மாருதி சுசுகி நிறுவனம் விட்டாரா பிரஸ்ஸா எஸ்.யூ.வி காருக்கு பிறகு ஸ்விஃப்ட் மாடலுக்கு ஐ-கிரேயெட் என்ற கஸ்டமைஸ் வசதிகளை அறிமுகம் செய்துள்ளது.

மாருதி ஸ்விஃப்ட் காருக்கான ஐ-கிரேயெட் கஸ்டமைஸ் அறிமுகம்.!!

2018ல் டெல்லியில் நடக்கவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் மேம்படுத்தப்பட்ட புதிய ஸ்விப்ஃட் காரை மாருதி சுசுகி நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.

மாருதி ஸ்விஃப்ட் காருக்கான ஐ-கிரேயெட் கஸ்டமைஸ் அறிமுகம்.!!

தற்போது விற்பனையில் உள்ள ஸ்விஃப்ட் மாடல் கார்களின் இருப்பினை குறைக்கும் வகையில் அந்நிறுவனம் ஐ-கிரேயெட் தனிநபர் கஸ்டமைஸ் வசதிகளை 2018 ஸ்விஃப்ட் காருக்கு வழங்கியுள்ளது.

Recommended Video - Watch Now!
Tata Tiago XTA AMT Variant Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
மாருதி ஸ்விஃப்ட் காருக்கான ஐ-கிரேயெட் கஸ்டமைஸ் அறிமுகம்.!!

இதே கஸ்டமைஸ் வசதிகளை 2016ல் விட்டாரா பிரிஸ்ஸா எஸ்.யூ.வி காருக்கு மாருதி சுசுகி அறிமுகப்படுத்தியது.

அதனை தொடர்ந்து தற்போது ஐ-கிரேயெட் கஸ்டமைஸ் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் மாடலுக்காக வரவுள்ளது.

மாருதி ஸ்விஃப்ட் காருக்கான ஐ-கிரேயெட் கஸ்டமைஸ் அறிமுகம்.!!

பலரிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள ஐ-கிரேயெட் என்ற கஸ்டமைஸ் வசதிகள் ஸ்விஃப்ட் காரின் உள் மற்றும் வெளிப்புற கட்டமைப்புகளுக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ளன.

மாருதி ஸ்விஃப்ட் காருக்கான ஐ-கிரேயெட் கஸ்டமைஸ் அறிமுகம்.!!

ஐ-கிரேயெட் கஸ்டமைஸ் கான்செப்ட்டை ஸ்விஃப்ட் காருக்கும் நீட்டிக்கப்படுவதை குறித்து பேசிய மாருதி சுசுகியின் தலைமை நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ் கலாஸ்கி,

மாருதி ஸ்விஃப்ட் காருக்கான ஐ-கிரேயெட் கஸ்டமைஸ் அறிமுகம்.!!

"ஐ-கிரேயெட் கான்செப்ட் கார்களுகான தனி அடையாளம். ஸ்விஃப்ட் காரை பயன்படுத்தும் இளைஞர்களுக்கு இது ஒரு தனித்துவ அடையாளம்" என்று கூறினார்.

மாருதி ஸ்விஃப்ட் காருக்கான ஐ-கிரேயெட் கஸ்டமைஸ் அறிமுகம்.!!

கிட்டத்தட்ட 120 கஸ்டமைஸ் தேர்வுகளுடன் பலதரப்பட்ட மாறுபாடுகளுடன் ஐ-கிரேயெட் கஸ்டமைஸ் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்கிறது.

மாருதி ஸ்விஃப்ட் காருக்கான ஐ-கிரேயெட் கஸ்டமைஸ் அறிமுகம்.!!

இதை விரும்பும் வாடிக்கையாளர்கள்

ஐ-கிரேயெட் கஸ்டமைஸ் தேவைகளை ஆன்-லைனில் இருந்தவாறே காரின் கட்டமைப்புகளுக்கு ஏற்று வாறு தேர்வுசெய்யலாம்.

மாருதி ஸ்விஃப்ட் காருக்கான ஐ-கிரேயெட் கஸ்டமைஸ் அறிமுகம்.!!

தனிநபருக்கான ஸ்விஃப்ட் கஸ்டமைஸ் கான்செப்ட்டில் பிரத்யேகமாக வடிவமைப்பட்ட காரின் மேற்கூரை மடிப்பு, ஹூட் கிராபிக்ஸ் விருப்பங்கள்,

மாருதி ஸ்விஃப்ட் காருக்கான ஐ-கிரேயெட் கஸ்டமைஸ் அறிமுகம்.!!

ஸ்பாய்லர்கள் சூழ்ந்துள்ள வெளிப்புற ஸ்டைலிங் கருவிகள், அலாய் சக்கரங்கள் இன்னும் பிற தேவைகள் என ஸ்விஃப்ட் காருக்கான ஐ-கிரேயெட் கஸ்டமைஸ் தேவைகளில் இடம்பெற்றுள்ளன.

மாருதி ஸ்விஃப்ட் காருக்கான ஐ-கிரேயெட் கஸ்டமைஸ் அறிமுகம்.!!

மேலும் இதில் காரின் உள்புற கட்டமைப்புகளில் தேவைப்படும் பல நிறங்களிலான ஃபாலகிங் கிட், ஸ்டைலிங்க் கிட் மற்றும் புதிய தகுதிகளை பெற்ற சீட் கவர்களும் கிடைக்கின்றன.

மாருதி ஸ்விஃப்ட் காருக்கான ஐ-கிரேயெட் கஸ்டமைஸ் அறிமுகம்.!!

2005ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்விஃப்ட் கார் ஹேட்ச்பேக் மாடலில் இன்றும் இந்தியாவில் முதன்மை பெற்ற விற்பனையாகும் கார்.

தற்போது விற்பனையில் உள்ள ஸ்விஃப்ட் மாடல் காரை மாருதி சுசுகி நிறுவனம் 2011ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

மாருதி ஸ்விஃப்ட் காருக்கான ஐ-கிரேயெட் கஸ்டமைஸ் அறிமுகம்.!!

இந்தியாவில் மட்டும் 10 லட்சத்தி 50 ஆயிரம் ஸ்விஃப்ட் மாடல் கார்களை மாருதி சுசுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

மேலும் கடந்த 2016-17 வரை சுமார் 166,885 ஸ்விஃப்ட் கார்களை மாருதி சுசுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

அதேபோல 2017 ஏப்ரல்-ஜூலை வரை மட்டும் சுமார் 63,974 ஸ்விஃப்ட் கார்கள் இந்தியாவில் விற்பனை ஆகியுள்ளன.

மாருதி ஸ்விஃப்ட் காருக்கான ஐ-கிரேயெட் கஸ்டமைஸ் அறிமுகம்.!!

இதே எண்ணிக்கை கடந்தாண்டாடு ஒப்பிட்டு பார்க்கும் போது, சுமார் 25.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஸ்விஃப்ட் மாடல் கார் எப்போதும் இந்தியாவில் வரவேற்பில் இருப்பதை அறிய முடிகிறது.

மாருதி ஸ்விஃப்ட் காருக்கான ஐ-கிரேயெட் கஸ்டமைஸ் அறிமுகம்.!!

2018ல் மாருதி சுசுகி நிறுவனம் அறிமுகப்படுத்தும் ஸிவ்ஃப்ட் கார் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என இருதேவைகளுடன் வருகின்றன.

மாருதி ஸ்விஃப்ட் காருக்கான ஐ-கிரேயெட் கஸ்டமைஸ் அறிமுகம்.!!

இந்த புதிய மாடலில் விலை மற்றும் கட்டமைப்புகள் குறித்து விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தற்போது ஐ-கிரேயெட் கஸ்டமைஸ் கான்செப்ட் அறிமுகமாகி உள்ளது, மேலும் 2018 ஸ்விஃப்ட் காரின் விற்பனையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Read in Tamil: Maruti Suzuki Launched I Create Personalisation Concept for Swift Car. Click for Details...
Story first published: Saturday, August 26, 2017, 11:36 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark